இங்கு தாமான் சரோஜாவிலுள்ள இரண்டு மாடிக்கொண்ட கடை வளாகத்தில் 32 ஆயிரம் வெள்ளி மதிப்புடைய 1,922 போலி டீ- சட்டைகளை உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் கூட்டுறவு இலாகாவின் அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றினர். நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த போலி டீ- சட்டைகள் கைப்பற்றப்பட்டதாக ஜொகூர் மாநில கிளையின் அமலாக்கப் பிரிவின் துணைத் தலைவர் ரிஸ்க் பாஸ்லியானா அப்துல் அமிட் தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட டி- சட்டைகளில் 1,187 ஜொகூர் கால்பந்து ஜேடிடி சின் னம் பொறித்தவை என்றும் 735 டி சட்டைகள் அடிடாஸ், நைக் போன்ற போலி முத்திரை கொண்டவை என்று அவர் சொன்னார். இதன் தொடர்பில் கடையின் 30 வயதுடைய ஆடவரின் வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்ததுடன் இந்த ஆடவர் இத்தகைய வியாபாரத்தை கடந்த ஐந்து ஆண்டுகளாக செய்து வருவதாகவும், கடந்த ஆண்டு போலி டீ சட்டைகளை விற்பனை செய்த குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்