போதைப் பொருள் நட வடிக்கைகளில் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களை போலீஸ் தொடர்ந்து கண்காணித்து வரு கிறது. அவர்கள் அதில் தொடர் ந்து ஈடுபடாதிருப்பதை உறுதி செய்ய கண்காணிப்பு மேற் கொள்ளப்படுவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ காலிட் அபு பக்கார் கூறி யுள்ளார். போதைப் பொருள் கும்பல்கள் மாணவர்களை விநியோகிப்பாளர் களாக பயன்படுத்திக் கொள் வதை போலீஸ் அடையாளம் கண்டுள்ளது. மாணவர்களுக்கு மலிவான விலையில் பொருட் களை வாங்கிக் கொடுப்பதன் வழி அவர்களை போதைப் பொருள் விநியோகிக்க தூண்ட முடியும் என காலிட் குறிப்பிட்டார். இதுவரையில் நிலைமை கட்டுப் பாட்டுக்குள் உள்ளது. இருந்த போதி லும், கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டிருப்பதா கவும் அவர் தெரி வித்தார். கண்காணிப் பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாரவர்.போதைப் பொருள் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் பெரும்பாலும் குண்டர் கும்பல்களுடன் தொடர்பு கொண்டவர்களாக இருப்பர். ஐ.எஸ்.பயங் கரவாத இயக்கத்தி னால் கவரப்பட்ட மாணவர்கள் விவ காரத்திலும் போலீஸ் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக காலிட் தெரிவித்தார். கடந்தாண்டு முழு வதும் போதைப் பொருள் சார்ந்த நடவடிக்கைகளில் மாணவர்களை உட்படுத்திய மொத்தம் 113 சம்பவங்கள் கெடா மாநிலத்தில் பதிவானது. இவ்வாண்டு ஜனவரி யில் மட்டும் மொத்தம் 8 சம்ப வங்கள் அடையாளம் காணப்பட் டுள்ளதாக போலீஸ் தெரிவித்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்