img
img

இறந்தவர்களின் பெயரைச் சொல்லி நிதி!
ஞாயிறு 05 பிப்ரவரி 2017 11:56:56

img

சாலை விபத்தொன்றில் தாய் - தந்தை இருவரையும் இழந்து மீளாத் துயருற்றிருக்கும் பிள்ளை களுக்கு மேலும் ஒரு திடுக்கிடும் சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது.கொஞ்சமும் இறக்கமில்லாத நபர் ஒருவர் மரணமுற்றவர்களின் குடும்பத்திற்கு உதவ வேண்டி யுள்ளதாக கூறி வங்கி கணக்கு எண்களை வழங்கி வசூலில் இறங்கி வரும் தகவல் தற்போது வாட்ஸ்சாப், முகநூல் வழி விரைவாக வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த நிலையில் நேற்று இங்குள்ள தெலுக் பங்லீமா காராங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்த மரணமுற்றவர்களின் மகனான மணி சங்கரன் த/பெ மணிவேலு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அண்மையில் நிகழ்ந்த சாலை விபத்தில் எங்கள் பெற்றோரை இழந்து துயருற்று இருக்கும் இந்நிலையில் எங்களுக்கு உதவ வேண்டும் எனக்கூறி 125001080492186 அல் ராஜ் எனும் வங்கிக் கணக்கில் நிதியினை வழங்கி உதவுமாறு கூறும் தக வலை வைரலாக்கி விட்டிருக்கும் சம்பவம் எனக்கும் என் சகோ தரிக்கும் மிகுந்த வேதனையை அளிப்பதாக இருக்கிறது என மணிசங்கரன் தெரிவித்தார். சாலை விபத்தில் சிக்கிய பெற்றோர் எங்களை விட்டுப் பிரிந்து ஏழு நாட்கள் கடந்துவிட்ட இந்நிலையில் இதுவரை யாரிடமும் நாங்கள் நிதியுதவி கோரிய தில்லை. ஆனால் எங்கள் பெற்றோரின் பெயரைச் சொல்லி நிதி வசூல் மோசடியில் ஈடுபட் டிருப்பது கண்டிக்கதக்க நடவடிக்கையாகும். வசூல் வேட்டையில் ஈடுபட் டுள்ள சம்பந்தப்பட்ட ஆடவருக்கு எதிராக போலீசார் கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும்மெனக் கூறிய மணிசங்கர் எங்கள் பெற்றோரின் மரணம் தொடர்பில் ஆழ்ந்த ஆனுதாபங்களை தெரிவித்த பொது மக்களுக்கு நன்றி கூறும் அதேவேளை மேற்கொண்ட வங்கிக் கணக்கில் தயவு செய்து ஒரு வெள்ளிகூட சேர்த்துவிட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். சரவாக்கில் மெரின் பொறி யியல் துறையில் பயிற்சியை மேற்கொண்டு வரும் மணிசங் கரை சம்பவத்தன்று போர்ட் கிள்ளானிலுள்ள வெஸ்ட் போர்ட் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று வழியனுப்பி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தாமான் ஜெயா உத்தாமா, தெலுக் பங்லீமா காராங்கைச் சேர்ந்த தம்பதிகளான மணிவேலு த/பெ பலராமன் (வயது 47), அவரின் மனைவி மாலதி த/பெ.சுப்பிரமணியம் (வயது 42) என்ற இருவரும் கடந்த மாதம் 30ஆம் தேதியன்று காலை ஏறக்குறையை 7.20 மணியளவில் இங்கு எஸ்.கே.வி விரைவுச்சாலை 37.8 ஆவது கிலோ மீட்டர் பூலாவ் இண்டா அருகில் நிகழ்ந்த இரு வாக னங்கள் சம்பந்தப் பட்ட விபத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே மாண்டதுடன் மற்றொரு வாகனமோட்டியான சீன ஆடவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமுற்றார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img