நாட்டில் உள்ள தனியார் பாலர் பள்ளி களின் கட்டணங்கள் பல்கலைக்கழகத்தையே மிஞ்சும் அளவிற்கு உள்ளது என்று மலாய் நாளேடு ஒன்றின் ஆய்வில் தெரிய வந்துள் ளன. நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் கல்விக்கு கொடுக்கும் முன்னுரிமை, நவீனத்துவம், வசதிகள், சுத்தம், உணவு என பல அடிப்படை காரணங்களை முன்வைத்து தங்களின் பிள்ளைகளை தனியார் பாலர் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். பெற்றோர்களின் இந்த எதிர்பார்ப்பை தெரிந்து கொண்ட தனியார் பாலர் பள்ளிகளில் நிர்வாகங்கள் தங்களின் கட்டணங்களை கட்டுக்கடங்காமல் உயர்த்தி வருகின்றன. அரசாங்க பல்கலைக் கழகங்களில் டிப்ளோமா படிப்பிற்கு மாணவர் ஒரு கல்வி யாண்டுக்கு 1300 வெள்ளி முதல் 1500 வெள்ளி வரை முன் பதிவு கட்டணத்தை செலுத்துகின்றனர். அதுவே இளங்கலை பட்டபடிப்பு என்றால் ஒரு கல்வியாண்டுக்கு மாணவர்கள் 1400 வெள்ளி முதல் 2 ஆயிரத்து 228 வெள்ளி வரை கட்டணம் செலுத்துகின்றனர். இக்கட்டணங்களை மிஞ்சும் அளவில் தான் தனியார் பாலர் பள்ளிகளில் கட்டணங்கள் உள்ளன. அந்த மலாய் நாளேடு கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொண்ட ஆய்வில் தனியார் பாலர் பள்ளிகள் 2000 வெள்ளி வரை முன் பதிவு கட்டணங்களை பெறுகின்றன. அதே வேளையில் மாதத்திற்கு 300 வெள்ளியில் இருந்து 600 வெள்ளி வரை கட்டணம் விதிக்கின்றனர். அதாவது நகரங்களில் வாழும் பெற்றோர்கள் ஒரு பிள்ளைக்கு வருடத்திற்கு சராசரி 5 ஆயிரம் வெள்ளி வரை கட்டணங்களை செலுத்துகின்றனர் என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் பாலர் பள்ளிகளின் நிர்வாகங்களும் தங்களின் விளக்கங்களை கொடுத்துள்ளன. பாலர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு குறைந்தது 1000 வெள்ளி சம்பளம் வழங்க வேண்டும். உயர் படிப்புகளை பெற்றிருக்கும் ஆசிரியர்களுக்கு கூடுதலாக சம்பளம் வழங்க வேண்டும். பாலர் பள்ளிகளின் கட்டண வாடகை, தளவாடப் பொருட்கள், உணவுகள், ஆடைகள், புத்தகம் என அனைத்தும் உயர் செலவுகளை வழங்குகிறது. இதனால் தான் கட்டணங்களும் உயர்வாக உள்ளது என்று அந்நிறுவனங்கள் விளக்கம் தந்துள்ளன. மலாய்க்கார மாணவர்களின் எண்ணிக்கையின் உயர்வால் அரசாங்க பாலர் பள்ளிகளில் இடப் பற்றாக்குறை பிரச்சினைகளை எதிர்நோக்கு வார்கள். இதனால் அவர்கள் தனியார் பாலர் பள்ளிகளை தேடிச் செல்கின்றனர். ஆனால் இந்தியர்களின் நிலை அப்படியல்ல. நாட்டில் உள்ள பல தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகளின் மாண வர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக தான் உள்ளது.இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்கியிருக்கும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தாராளமாக தமிழ் பாலர் பள்ளிகளுக்கு அனுப்பலாம் என்பது தான் இந்திய பெற்றோர்களின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்