img
img

தேர்தல் வருகிறது. யார் யாரோ வருகிறார்கள்!
ஞாயிறு 05 பிப்ரவரி 2017 11:53:20

img

ஒவ்வொரு மழை காலத்தி லும் வெள்ளம் ஏறுவதைப் போல, ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் எங்களை பார்க்க யார், யாரோ வருகிறார்கள். வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். ஆனால், எங்கள் பிரச்சினைகளுக்குத்தான் இதுவரை விடிவு பிறக்கவில்லை என்று குமுறுகின்றனர் ஊத்தான் மெலிந்தாங், ஜாலான் ஃபேரி, கம்போங் சுங்கை நீமா, லோரோங் 3 குடியிருப்புவாசிகள். சுமார் 60 வருடங்களுக்கு முன்பு மெலிந்தாங் ரப்பர் தோட் டம் துண்டாடப்பட்டது. எங்கள் முன்னோர்கள் காலத்தில் இந்த லாட்டு நிலங்களில் வீடு கள் கட்டப்பட்டன. ஆனால், அன்று முதல் இன்று வரை தார் சாலையைத் தவிர வேறு எந்த அடிப்படை வசதியும் அரசாங்கம் எங்களுக்குச் செய்து கொடுக்கவில்லை. நாங்களும் பல முறை கோரிக்கை விடுத்திருக்கிறோம். இன்று வரை யாரும் அவற்றை காது கொடுத்து கேட்க வில்லை. மாவட்ட நகராண்மைக்கழகம் சாக்கடைகளை சுத்தம் செய் வது கிடையாது, சாலை விளக்குகள் பொருத்தப்படுவது கிடையாது, குப்பைக் கூளங்களை அகற்றுவது கிடையாது. ஆனால், நாங்கள் முறையாக வீட்டு வரியை செலுத்தி வருகிறோம். அப்படி வீட்டு வரி செலுத்தப்படாவிடில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று எங்களை மிரட்டு கிறார்கள். கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பு, முன்னாள் சபாநாயகர் டத்தோ கணேசன் இங்குள்ள மக்களைச் சந்தித்து எங்கள் பகுதி களில் நிலவும் அடிப்படை வசதி கள் பிரச்சினைக்கு தீர்வு காணப் படும் என்று வாக்குறுதி வழங்கினார். ஆனால், புதிய வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு அவர் இந்தபக்கமே வரவில்லை. அதன் பிறகு, இது நாள் வரையில் யாரும் எங்களை எட்டிப்பார்க்கவில்லை. இத்தொகுதியில் யார் யாரோ எங்களுக்கு சிறிதும் அறிமுகம் இல்லாதவர்களெல்லாம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறுகின்றனர். ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் மலக்கூட கழிவு நீரும் கூடவே பாம்பு, பூரான், உடும்பு, எலி போன்ற விஷ ஜந்துக்கள் புகுந்து விடுவதாக மாதர்களானபெரிய நாயகி கருப்பையா (54), அஞ்சலை மாணிக்கம் (57), மகாலெட்சுமி முனியாண்டி (50) ஆகியோர் கூறுகின்றனர். அண்மையில் துணை மாவட்ட அதிகாரி தலைமையில் ஒரு கூட்டமும் இங்குள்ள தெலுங்கு சங்க மண்டபத்தில் ஒரு கூட்டமும் கூட்டப்பட்டு பல்வேறு உறுதி மொழிகள் வழங்கப்பட்டன. இதுவரை ஒரு துரும்பு கூட அசைக்கப்படவில்லையென்று நரசிம்மலு பைடதல்லி (67), முனியாண்டி கருப்பையா (35), சிவநேசன் நாச்சிமுத்து (27), சிவநாதன் சிவலிங்கம் (25), ஷண்முகம் குப்புசாமி (45), ரேவதி சுப்பிரமணியம் (24) ஆகியோர் கவலை தெரிவித்தனர். இவ்வட்டாரத்தில் கொசு, ஈ தொல்லை அதிகமாக இருப்பதால் பலர் டிங்கிக் காய்ச்சலினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வட்டார ஒற்றையடி பாதைகளிலும் சாலைகளிலும் சாலை விளக்குகள் பொருத்தப்படாத தால் அதிகாலையில் பள்ளிச் செல்லும் மாணவர்களின் பாடு பெரும் திண்டாட்டமாகவுள் ளது. இக்குடியிருப்பையொட்டி செம்பனைத் தோட்டமும் புதர்களும் பாம்பு உடும்பு பூரான் போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகமாக இருப்பதால் தாங்கள் அச்சம் கொள்வதாக ஒட்டுமொத்த குடியிருப்பு வாசிகள் கூறுகின்றனர். இதனிடையே, இந்த வட்டார மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தாம் மாவட்ட நகராண்மைக்கழக கழகத்தலைவரிடமும் பாகான் டத்தோ புதிய மாவட்ட அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு செல்லவிருப்பதாக வும் வட்டார மூத்த அரசியல் வாதியும் சமூக சேவையாளருமான கைருல் எக்ஷன் கூறுகிறார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img