பேரா மாநில தமிழ்ப்பள்ளிகள் சுயமாக பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு வழங்கப்பட்ட 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் கதி என்னவானது என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் உரிமையை யார் வைத்துள்ளனர்? மஇகாவின் வழி பேரா மாநிலத்தில் எல்லா பதவிகளையும் அனுபவித்துவிட்ட தலைவர்கள், அந்த நில உரிமையில் பங்கு ஏதும் வைத்துள்ளார்களா? என்பதையும் ஆராய வேண்டியநிலை தற்போது ஏற்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் பேரா மாநில ஆட்சியினைக் கைப்பற்றிய மக்கள் கூட்டணியின் நடவடிக்கையாக பேராக் மாநில தனியார் சீனப்பள்ளிகள், சமய பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள் நீண்ட கால அடிப்படையில் சுயமாக பொருளாதாரதத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட 2000 முதல் 2500 ஏக்கர் நில ஒதுக்கீட்டினை பேரா மாநில தேசிய முன்னணி அரசாங்கத்தின்மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடீர் தொடர்ந்ததன் பயனாக பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின்நன்மையைக் கருத்தில் கொண்டு 2009 ஆம் ஆண்டில் 2000 ஏக்கர் நிலத்தில் செம்பனை பயிரிடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக 2000 ஏக்கர் செம்பனைத்தோட்டம் நன்மைகளைக் கொண்டு வந்துள்ளதா என்ற கேள்வியை நண்பன் குழு முன்வைக்க விரும்புகின்றது. நண்பன் குழு பெற்றுள்ள தகவலின் அடிப்படையில் சில கேள்விகளை முன்வைக்க வேண்டிய அவசியம் இருப்பதை உணரவேண்டியுள்ளது. * 2000 ஏக்கர் நிலத்திற்கு ஏன் ரிம. 60.938 நிலவரி செலுத்தப்பட்டது? சீனப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்திற்கு ரிம 1 மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. * நிலவரிக்கான தொகையினை செலுத்திய முன்னாள் ம.இ.கா. தலைவரின் தனிப்பெயரில் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளதா? * 2000 ஏக்கர் நிலத்தினை மேம்படுத்துவதற்கு பேரா மாநில முன்னாள் ம.இ.கா. தலைவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பேரா இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியத்தின் பங்களிப்பு என்ன? * அறவாரியத்தினை அமைப்பதற்கு ரிம 1 மில்லியன் தேவைப்படும் பட்சத்தில் யாரால் அப்பணம் திரட்டப்பட்டுள்ளது? * நிலத்தினைமேம்படுத்துவதற்கு மூன்றாம் தரப்பினரான தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தினை நியமித்துள்ளது உண்மையா? * அறவாரியம் ஏறக்குறை ரிம 7 மில்லியனை செம்பனை பயிரிடுவதற்காகச் செலவழித்துள்ளது உண்மையா? * 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பெறப்பட்ட கட்டு மர விற்பனையில் பெறப்பட்ட தொகை எங்கே சென்றது? * போன்ற கேள்விகளை பேரா மாநிலத்தவர்கள் முன்வைத்துள்ள நிலையில் பேரா மாநிலத்தின் ம.இ.கா.வின் வழி எல்லா பதவிகளையும் அலங்கரித்து விட்ட தலைவர்களை இயக்குநர்களாக நியமனம் செய்துள்ளது நியாயமா என்ற கேள்வியோடு இவர்களுக்கென மாதந்தோறும் சம்பளமும் வழங்கப்படுகின்றதா என்ற கேள்விக்கும் பதில் தேவைப்படுவதாக நண்பன் குழு கருதுகின்றது. 2000 ஏக்கர் நிலப்பரப்பிலான செம்பனைப் பயிர் தமிழ்ப்பள்ளிகளுக்கு நன்மையை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கக் கூடிய பொறுப்பாளர்கள் வாய் திறப்பார்களா? * 2000 ஏக்கர் நிலம் உரிமையாளர்? * ரிம 7 மில்லியன் தொகையை வழங்கியது யார்? * பேரா தமிழ்ப்பள்ளிகளுக்கு நன்மைகிட்டியுள்ளதா? * 2000 ஏக்கர் நிலத்தினை நிர்வகிக்க எத்தனை இயக்கங்கள்?
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்