img
img

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் 4ஆவது நிலையில் டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன்!
ஞாயிறு 05 பிப்ரவரி 2017 11:44:16

img

மலேசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு 2ஆவது நிலையில் இருந்த டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் இவ்வாண்டு 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.இவ்வாண்டு மலேசியாவின் 4ஆவது பெரிய கோடீஸ்வரராக இருப்பவர் டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன். இவர் கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘உசஹா தெகாஸ்’ நிறுவனக் குழுமத்தைக் கொண்டிருக்கும் இவருடைய சொத்துக்கள் வெ.2,000 கோடியாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் இவருடைய நிறுவனங்களில், குறிப்பிட்ட மூன்று முன்னணி நிறுவனங்கள் கொஞ்சம் சறுக்களைக் கண்டன. இதனால் இவருடைய சொத்து மதிப்பில் 13 விழுக்காடு வரை சரிவு ஏற்பட்டது. எனினும் 2017-இல் அவரது நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் பட்டியலில் 9ஆவது இடத்தில் டான்ஸ்ரீ ஜி.ஞானலிங்கம் இடம்பெற்றிருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு வெ.670 கோடி ஆகும். போர்ட் கிள்ளானிலுள்ள வெஸ்ட் போர்ட் துறைமுகத்தை பரபரப்பான கொள்கலத் துறைமுகமாக உருவாக்குவதில் வெற்றி கண்டவர் இவர். தற்போது இந்தத் துறைமுகம் ஆண்டுக்கு 11 மில்லியன் கொள்கலங்களை கையாளுவதில் ஈடுபட்டுள்ளது. 1994ஆம் ஆண்டில் வெஸ்ட் போர்ட்டில் தமது தொழிலை டான்ஸ்ரீ ஞானலிங்கம் தொடங்கிய போது அது வெறும் சதுப்பு நிலத் தீவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும் இவர் 9-ஆவது இடத்திலேயே இடம்பெற்றிருந்தார். நாணய மதிப்பில் வீழ்ச்சி, மூலப்பொருட்களின் விலை நிலவரத்தில் நிலையற்ற போக்கு, சொத்துடைமை தொழிலில் தேக்கநிலை என்று கடந்த ஆண்டில் ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்தாலும் மலேசியாவைச் சேர்ந்த 40 கோடீஸ்வரர்கள் வழக்கம் போலவே தொழில் துறைகளில் தங்களின் ஆதிக்க கொடியை நாட்டியுள்ளனர். மலேசியாவின் முதல் நிலைப் பணக்காரர் என்ற அந்தஸ்தை ரோபெர்ட் குவோக் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டு இருக்கிறார். அவருடைய முன்னணி நிறுவனமான பிபிபி குழுமம் தோட்டத்தொழில், செம்பனைப் பொருட்கள் மற்றும் மாவு ஆலை, விநியோகம் எனத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஹாங்காங்கில் வாழ்ந்து வரும் இவருடைய சொத்துக்களின் மதிப்பு வெ.3,700 கோடி. மலேசியாவின் முன்னணி சினிமா தியேட்டர் நிறுவனமான கோல்டன் ஸ்கிரீன் சினிமா நிறுவனம் இவருக்குச் சொந்தமானதே. மலேசியாவில் சீனி ஆலைத்தொழிலில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்த ரோபெர்ட் குவோக், அதனை பெல்டாவுக்கு விற்றுவிட்டார். முன்னொரு தருணத்தில் உலகச் சீனி உற்பத்தியில் 10 விழுக்காடு இவருக்குச் சொந்தமாக இருந்தது. தற்போது ஆஸ்திரேலியாவின் சீனி ஆலைத் தொழிலில் முழு ஆதிக்கம் பெற்றுத் திகழ்கிறார். சுமார் வெ.2,200 கோடி சொத்து மதிப்புடன் மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக கெந்திங் நிறுவனக் குழுமத் தலைவரான 66 வயதுடைய டான்ஸ்ரீ லிம் கோக் தை விளங்குகிறார். கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்த இவர் இரண்டாம் நிலைக்கு உயர்ந்துள்ளார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img