நேற்று முன்தினம் நள்ளிரவு வாக்கில் தாமான் எவர்கிரீன் ஹையிட்சிலுள்ள வீடொன்றை முற்றுகையிட்ட போலீசார் எவர்கிரீன் கும்பல் ஒற்றை முறியடித்ததோடு பல்வேறு வகையான போதைப் பொருளையும் கைத்துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றினர். அதிகாலை 12.15 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையில் அவ்வீட்டை போதைப் பொருள் பதனிடும் இடமாக கும்பல் செயல் படுத்தி வந்துள்ளதை கண்டு பிடித்ததோடு சோதனையில் 17வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட கும்பலைச் சேர்ந்த எழுவரையும் 23 வயது குடும்ப மாது ஒருவரையும் போலீசார் கைது செய்ததாக பத்து பகாட் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் அப்துல் வாஹிப் மூசா நேற்று தெரிவித்தார். கடந்த ஒரு வாரமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியின் போலீசார் கண்ணோட்ட மிட்டு வந்ததாக தெரிவித்த அவர், இரவு விடுதி, கேளிக்கை மையங்களில் அந்த கும்பல் ஹங்பாவ் பேக்கெட்டில் போதைப் பொருளை விநியோகித்து வந்தது கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிட்டார். 585.80 கிராம் ஷாபு, 170 எக்ஸ்டசி போதை மாத்திரைகள் 20 எரிமின் 5 போதை மாத்திரைகள் 18 கிராம் மெத்தம் பெட்டமைன் போதைப் பொருள் ஆகியவை சோதனையில் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த அவர், அவற்றில் ஒரு பகுதி வீட்டின் முன் பகுதியில் நிறுத்தப் பட்ட வாகனத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டார். கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் வெள்ளி என குறிப்பிட்ட அப்துல் வாஹிட் மூசா உடன் சிபி 999 வகை வால்தர் வகை கைதுப்பாக்கியும் 4 துப்பாக்கி ரவைகளும் வாகனத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்