img
img

நானும் தங்க ரதம் விடப்போகிறேன்!
சனி 04 பிப்ரவரி 2017 15:09:17

img

அடுத்தாண்டு தைப்பூசத்தின் போது தங்க ரதமும், வெள்ளி ரதமும் இணைந்து வரும் என ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா நேற்று கூறினார்.பினாங்கில் தங்க ரதம் ஊர்வலம் நடைபெறுவதை பற்றி அவரிடம் கேட்ட போது, அதை தான் ஆதரிப்பதாகவும் நானும் தங்க ரதம் விடலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்தாண்டு தைப்பூசத்தின் போது தங்க ரதத்தில் விநாயகரும், வெள்ளி ரதத்தில் முருகனும் பவனி வருவர். அதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான உறுப்பினர்களின் ஆதரவோடு மேற்கொள்ளப் போவதாக அவர் கூறினார். 127ஆவது பத்துமலை தைப்பூச விழா பற்றி நேற்று பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளித்த அவர் கோலாலம்பூர் மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து வெள்ளி ரதம் பிப்ரவரி 7ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விசேஷ பூஜைக்கு பின்னர் சரியாக இரவு 10 மணிக்கு புறப்படும் என்றும் மறுநாள் புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பத்துமலை திருத்தலத்தை வந்தடையும் என்றார்.வழக்கமான சாலைகளில் வெள்ளி ரதம் செல்லும் என்று அவர் கூறினார். இவ்வாண்டு வெள்ளி ரத ஊர்வலத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கு கொள்வார்கள். ரதத்தின் முன்புறம் பின்புறம் வருபவர்கள் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும்.மோட்டார் சைக்கிளில் வரும் இளைஞர்கள் பால்குடம் ஏந்தி வரும் பக்தர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. அப்படி செய்தால் காவல் துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுப்பர் என்று அவர் சொன்னார். 16 லட்சம் பக்தர்கள் இவ்வாண்டு தைப்பூசத்தில் 16 லட்சம் பக்தர்கள் பத்துமலை நோக்கி வருவர். பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை ஆலய நிர்வாகம் செய்து கொடுப்பதோடு பாதுகாப்புக்காக 2000 போலீசாரும், 750 தொண்டூழியர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். பிப்ரவரி 8ஆம் தேதி மாலை பத்துமலை திருத்தலத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு மிக முக்கிய அறிவிப்பை தாம் செய்யவிருப்பதாக டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.பத்துமலை வட்டாரத்தில் சிகரெட், சுருட்டு பிடிக்கக்கூடாது. புகையில்லா மண்டலம் என்று மலேசிய சுகாதார அமைச்சு பத்துமலை திருத்தலத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. இதை பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றார். மேலும் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக ஊதி (விசில்), முகமூடி அணிவோருக்கு எதிராக போலீசாரும், செலாயாங் நகராண்மைக் கழகத்தினரும் நடவடிக்கை மேற்கொள்வர். பத்துமலை வளாகத்தில் இப்பொருட்களுக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது என்று அவர் கூறினார். தேங்காய் அர்ச்சனைக்கு தடை கடந்தாண்டை போலவே இவ்வாண்டும் பத்துமலையில் தேங்காய் அர்ச்சனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பழம் அர்ச்சனை செய்யலாம். பால்குடம் எடுக்கும் பக்தர்கள் பன்னீர் குடமும் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்யலாம். எதிர்காலத்தில் பன்னீர் அபிஷேகத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். ஒன்றாக செயல்படுவோம் தைப்பூச நேரத்தில் பல இயக்கங்கள் அறிவிப்புகளை வெளியிடுகின்றன. அப்படி அறிக்கைகளை வெளியிடுவோர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்துடன் இணைந்து செயல்பட்டால் இன்னும் சிறப்பான முறையில் தைப்பூச விழாவை ஒற்றுமையுடன நடத்தலாம் என்று அவர் ஆலோசனை கூறினார். பெரிய காவடிகளுக்கு தடையில்லை பத்துமலை ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு ஆற்றங்கரையில் இருந்தும் பக்தர்கள் பால்குடமும், காவடிகளும் எடுத்து வரலாம். சுருட்டு, மதுபானம், அரிவாள், தீச்சட்டி, டுரியான், கால்பந்து சின்னங்கள் பொறித்த காவடிகளுக்கு ஆலய நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதே வேளையில் பக்தர்கள் தாங்கள் நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு எவ்வளவு பெரிய காவடிகள் எடுத்து வந்தாலும் அதற்கு ஆலய நிர்வாகம் தடை விதிக்காது.பக்தர்களின் புனிதமான நேர்த்திக் கடன்களுக்கு எதிராக ஆலய நிர்வாகம் செயல்படாது என்று அவர் விளக்கினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img