பத்துமலை தைப்பூசத்தின் போது தண்ணீர் பந்தல் அமைப்பதற்கு செலா யாங் நகராண்மைக் கழகம் 2000 வெள்ளி வாடகை விதித்திருப்பதால் பல அரசு சாரா இயக்கங்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. தைப்பூச விழாவை முன்னிட்டு செலாயாங் நகராண்மைக் கழகம் பத்துமலை ஆலயத்தின் வெளியே பிரத்தியேக கடைகளை அமைக்கும். அவ்வகையில் இவ்வாண்டு 501 கடைகளை அமைக்க செலாயாங் நகராண்மைக் கழகம் முடிவெடுத்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத்தின் போதும் 30க்கும் மேற்பட்ட கடைகள் அரசு சாரா இயக்கங்களுக்கு வழங்கப்படும்.கடந்தாண்டுகளில் அரசு சாரா இயக்கங்களுக்கு இக்கடைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. கடந்தாண்டு இக்கடைகளுக்கு 500 வெள்ளி வாடகை விதிக்கப்பட்டது. ஆனால் இவ்வாண்டும் அவ்வாடகை 2 ஆயிரம் வெள்ளியாக உயர்வு கண்டுள்ளது. இது எங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று ராப்பிட் கேஎல் பஸ் ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைமை செயலாளர் தங்கராஜூ கூறினார். நூற்றுக்கும் மேற்பட்ட பஸ் ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் பந்தல் அமைத்து பக்தர்களின் தாகத்தை தீர்த்து வருகிறோம்.இந்த தண்ணீர் பந்தல் அமைப்பதற்கே செலாயாங் நகராண்மைக் கழகம் 2 ஆயிரம் வெள்ளி வாடகை விதித்திருப்பது எங்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.ஆகவே இக்கட்டண விவகாரத்தை செலாயாங் நகராண்மைக் கழகத்தின் தலைவர் ஆய்வு செய்ய வேண்டும் என்று தங்கராஜூ கூறினார். இதனிடையே பத்துமலை தைப்பூசத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கடைகளை செலாயாங் நகராண்மைக் கழகம் ஒதுக்கி தந்துள்ளது என்று மலேசிய மாற்றுத் திறனாளிகள் தன்நிலை பயிற்சி நிலையத்தின் தலைவர் பிரான்சிஸ் சிவா குற்றம் சாட்டினார். காலங்காலமாய் பத்துமலை மயில் கேட் முன் இருக்கும் பாலத்திற்கு கீழ் தான் மாற்றுத் திறனாளிகளுக்கு கடைகள் வழங்கப்படும். ஆனால் இம்முறை பிளாசா அம்னோ உட்பட ஒரு சில இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு கடைகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்விடங்களில் கடைகளை அமைப்பதால் மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தவொரு பயனையும் கொடுக்காது. அதே வேளையில் இக்கடைகளை பெறுவதற்கு நாங்கள் செலாயாங் நகராண்மைக் கழகத்திற்கு 2 ஆயிரம் வெள்ளி வாடகை பணத்தையும் செலுத்தியுள்ளோம். மாற்றுத் திறனாளி மக்களுக்கு வாடகை விதிப்பதே கேள்வி குறியாகியிருக்கும் நிலையில் ஒதுக்குப் புறமான இடங்களில் கடைகளை தந்திருப்பது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.இதன் அடிப்படையில் தான் நாங்கள் செலாயாங் நகராண்மைக் கழகத்திற்கு வந்து மகஜர் ஒன்றை வழங்கினோம் என்று பிரான்சிஸ் சிவா கூறினார். ஆரம்பக் கட்டத்தில் அரசு சாரா இயக்கங்களுக்கு வாடகை ஏதும் வசூலிக்கப்படவில்லை. குப்பைகளை அதிகமாக வீசப்படுகிறது என்ற காரணத்திற்காக மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து சங்கங்களிடமும் 2000 வெள்ளி வாடகை வசூலிப்பது அநாகரிக செயலாகும். ஆகவே செலாயாங் நகராண்மைக் கழகம் இவ்விவகாரம் குறித்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று தைப்பூச நடவடிக்கை பணிப்படை குழுவின் ஒருங்கிணைப்பாளர் குணராஜ் செய்தியாளர்களிடம் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்