ஓர் இந்திய ஆடவர் தன் முன்னாள் மனைவியை கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த கொலை மற்றும் தற்கொலை சம்பவம் தலைநகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு வழக்கறிஞர் நிறுவனத்தின் அலுவலகத்தில் பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந் தது. அந்த 51 வயது ஆடவர் தன் 46 வயது முன்னாள் மனைவி வேலை செய்யும் வழக்கறிஞர் நிறுவனத்திற்கு நோரின்கோ தானியங்கி கைத்துப்பாக்கி, வெட்டுக்கத்தி, பட்டாசுகள் ஆகியவற்றை பேட்மிண்டன் பையில் மறைத்தவாறு வந்ததாக மாநகர் குற்றப்புலனாய்வுத்துறை தலைவர் மூத்த உதவி ஆணையர் ருஸ்டி முகமட் இசா கூறினார். அவர் தன் முன்னாள் மனைவியை வரவேற்பு பகுதிக்கு அழைத்திருக்கிறார். அவர்கள் இருவரும் மிக சத்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் பின்னர் துப்பாக்கி வேட்டு கிளப்பும் ஒலியையும் தாங்கள் செவிமடுத்ததாகவும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கூறியதாக அவர் சம்பவஇடத்தில் தெரிவித்தார். ரமேஷ் என மட்டும் அடையாளம் கூறப்பட்ட அந்த ஆடவர் நான்கு அல்லது ஐந்து தடவை சுட்டதாகவும் இவற்றில் ஒரு தோட்டா அந்த மாதின் முதுகிலும் மற்றொன்று காலிலும் பட்டதாக பூர்வாங்க விசாரணை வழி தெரிய வருகிறது. பின்னர் அவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக ருஸ்டி தெரிவித்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் விவாகரத்து செய்து கொண்ட அவர்களுக்கு 16 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் எஸ்.ஏ.சி.ருஸ்டி தெரிவித்தார். விவாகரத்து செய்து கொண்டதில் இருந்து அவர்களிடையே பிரச்சினைகள் இருந்து வந்ததாக அவர் மேலும் கூறினார். உடல்கள் இரண்டும் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்