குடியுரிமையில்லாத மலேசியர்களுக்கு உதவுவதில் சிறப்பு கவனத்தை தாம் செலுத்தப் போவதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார். அப்பிரச்சினையால் மலேசிய இந்தியர்கள், தீபகற்ப பூர்வக் குடிகள், கிழக்கு மலேசிய சுதேசி மக்கள் ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சருமான ஜாஹிட் தெரிவித்தார். சரவா மாநிலத்தில் சீனர்களின் குடியுரிமை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பணிக் குழு அமைக்கப்படும் என்றும் அவர் சொன்னார். அப்பணிக்குழு சரவா தேசியப் பதிவுத்துறையின்கீழ் செயல்படும் என்றார் அவர். குடியுரிமை இல்லாப் பிரச்சினை மீது எனக்கு மிகுந்த அக்கறை உண்டு. அப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கடப்பாடு கொண்டுள்ளேன் என்று கூச்சிங்கில் மாநில அரசும் தென் கூச்சிங் சீனர் சமூகமும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த சீனப் புத்தாண்டு நிகழ்வில் கலந்துகொண்டபோது உள்துறை அமைச்சருமான அவர் கூறினார். குடியுரிமை விவகாரம் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் வேளையில் அவர்களின் பிரச்சினையை தீர்ப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்