கோலாலம்பூர், ஜன. 24- நாட்டில் குடியுரிமை, பிறப்புப்பத்திரம் இல்லாமல் நாடற்றவர்களாக இருக்கும் இந்தியர்களுக்கு கிடைக்காத உரிமைகள், வங்காளதேசிகளுக்கும், பாகிஸ்தானியர்களுக்கும், இந்தோனேசியர்களுக்கும், பிலிப்பைன்ஸ்காரர்களுக்கும் எப்படி கிடைக்கிறது என்று ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். இன்னமும் பல ஆயிரம் இந்தியர்களுக்கு குடியுரிமை, பிறப்புப்பத்திரம் இல்லை. அவர்கள் இன்னமும் நாடற்றவர்களாகவே இருக்கின்றனர். மற்ற நாட்டவர்களுக்கு சாதாரண ஒரு விண்ணப்பத்தில் எப்படி குடியுரிமை கிடைத்து விடுகிறது என்று அவர் வினவினார். இந்தியர்கள் பலருக்கு இன்னமும் குடியுரிமை கிடைக்காததற்கு அரசாங்கமே காரணம் என்று குற்றஞ்சாட்டிய அவர், தாம் இரண்டு பிரதமர்களிடம் சமர்ப்பித்த பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு இருக்குமானால் இந்த நாடற்றவர்களின் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்து இருக்கும். எனவே அரசாங்கத்தின் அலட்சியப் போக்கினாலேயே இந்தியர்கள் பலருக்கு இன்னமும் குடியுரிமை இல்லாமல் இருக்கிறது என்று அவர் குற்றஞ்சாட்டினார். குடியுரிமை போன்ற ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் இந்தியர்களுக்கு அந்த முக்கியப் பத்திரம் கிடைப்பதில் விதிமுறைகள் தளர்வு எதனையும் அரசாங்கம் கடைப்பிடிக்க முடியாது என்று நான்கு தினங்களுக்கு முன்பு ஊத்தான் மெலிந்தாங்கில் ஜாஹிட் ஹமிடி பேசியிருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் வேதமூர்த்தி மேற்கண்டவாறு கூறினார். இது போன்ற ஆவணங்கள் இல்லாமல் தற்சமயம் 2,700 பேரை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம். தேசியப் பதிவு இலாகா அதிகாரிகள் களமிறங்கி அவர்களின் தகுதிகளை ஆராயும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பிறப்புச் சான்றிதழ் சட்டத்தின் பிரிவு15(1)-இன் கீழ் ஒரு வயதுக்கும் குறைவான பிள்ளைகளின் பெயரை மாற்றுவது மற்றும் மத்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19-இன் கீழ் 21 வயதுக்கும் மேற்பட்டவர்களின் குடியுரிமை விண்ணப்பங்கள் ஆகியன இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஜாஹிட் விளக்கம் அளித்து இருந்தார். மேலும் இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினரில் சுமார் 5,000 பேர் இன்னும் தங்களின் குடியுரிமை அந்தஸ்தை பெறாமல் இருக்கின்றனர். அவர்களின் விவரங்களை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் சமர்ப்பித்து இருப்பதையும் ஜாஹிட் சுட்டிக்காட்டியிருந்தார். இதன் தொடர்பில் வேதமூர்த்தி மேலும் கூறுகையில் நான்காவது, ஐந்தாவது தலைமுறையினராக வாழ்ந்த இந்தியர்கள் அவர்களின் சந்ததியினர் மலேசியாவில்தான் பிறந்தார்கள் என்பதை நிரூபிப்பதற்கு போதுமான ஆற்றலையும் வலிமையையும் கொண்டிருக்கவில்லை. காரணம், நாடு சுதந்திரம் அடைந்த போது அவர்கள் குடியுரிமை பெறுவதற்கு தங்களை பதிவு செய்து கொள்ளவில்லை என்றார். நான் துணை அமைச்சராக இருந்த போது, நாடற்றவர்களாக இருக்கும் 3 லட்சம் இந்தியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பிரதான ஆய்வறிக்கை கொண்டிருந்தேன் என்பதையும் வேதமூர்த்தி தெளிவுப்படுத்தினார். ஆனால் நாடற்ற இந்தியர்களின் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது என்பதுதான் உண்மை என்று வேதமூர்த்தி குறிப்பிட்டார். ஆனால், பொதுத் தேர்தல் வரும் போது நாடற்ற இந்தியர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு நம்பிக்கை என்ற வெற்று வாக்குறுதிதான் அளிக்கப்படும் என்று வேதமூர்த்தி குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்