கோலாலம்பூர், அக். 4-
அவ்வப்போது அனுகூலங்களை வழங்கும் வழிமுறையினை அரசாங்கம் அமல்படுத்தி வருகிறது. வாழ்க்கைச் செலவினத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிதிச் சுமையினை குறைக்கும் வண்ணம் ரஹ்மா உதவித் திட்டம் அறிமுகமானது.
தொடர்புதுறை அமைச்சின் வியூகத் திட்டத்திறகு ஏற்ப ரஹ்மா உதவித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு கட்டமைப்பை நிலைப்படுத்தவும் தரமான அடைவு நிலைக்கு இது வித்திடுகிறது. அனைவருக்கும் தரமான மற்றும் விரிவான தொலைத் தொடர்பு வசதிகளை இது ஏற்படுத்தி தருகிறது.
ரஹ்மா உதவித் திட்டத்தின் வழி 22 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை குறைந்த கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. ரஹ்மா உதவித் திட்டத்தின் வழி பல்வேறு தரப்புகள் பயனடைய முடியும். ஆறு வகை பிரிவினர் இதன் மூலம் நன்மை பெற முடியும்.
பி40 பிரிவினர், மக்கள் வீடமைப்பு மற்றும் பொது வீடமைப்பு பகுதியினர். தினசரி வருமான பிரிவு பணியாளர்கள், உயர்கல்வி மாணவர்கள், 18 - 40 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் உள்ளூர், அரசாங்க அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர்கள், மாநில, மத்திய அரசாங்க பொதுச் சேவை ஊழியர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவம் மற்றும் போலீஸ் படை வீரர்கள், மலேசிய கடலோர அமலாக்க பிரிவின் முன்னாள் பணியாளர்கள் ஆகியோர் இத்தகைய அனுகூலங்களைப் பெறுவர்.
5 ஜி ரஹ்மா, முன்கூட்டியே கட்டணத்தை செலுத்தும் உதவி திட்டம், இ-ஹெய்லிங் திட்டம், அகண்ட அலைவரிசை போன்று ஆக மொத்தம் ஒன்பது வகை அனுகூலங்கள் இதில் அடங்கும்.
பல்வேறு வகை ரஹ்மா உதவித் திட்டங்களை தொடர்புதுறை அமைச்சு, தொலைத் தொடர்பு சேவை ஏற்பாட்டாளர்களின் ஒத்துழைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்க்கை செலவினத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் காணும் வகையில் இத்தகைய உதவி வழங்கப்படுகிறது.
தரமான தொலைத் தொடர்பு வசதிகளை இவர்கள் எல்லாம் அனுபவிப்பதை உறுதிப்படுத்தும் வண்ணம் இத்தகைய முன் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 5ஜி சாதன வசதி உதவி தொகையினை அதிகமான பி40 பிரிவினருக்கு பெற்றுத்தரப்பட வேண்டும்.
இதற்கான உயர்ந்தப்பட்ச கோட்டா ஒரு லட்சம். உயர் கல்வி மற்றும் தொழில் பயிற்சி மையம் கல்வியை மேற்கொள்ள விரும்பும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கட்டணம் வழங்கும் பிரத்தியேக திட்டமும் அமலில் உள்ள Pakej Rahmah Prabayar Siswaதிட்டமானது செல்கோம் டிஜி, மெக்சிஸ், யு மொமைல், டிஎம் டெக், ஒய்டிஎல் கம்யூனிகேஷன் ஆகிய ஐந்து தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின் மூலம் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
தொலைபேசி கட்டணம் சம்பந்தமான கட்டண கழிவு சலுகை அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. 2023 ஆம் அமலுக்கு வந்த இத்திட்டமானது இரண்டாவது ஆண்டாக 2024 ஆம் ஆண்டில் தொடர்கிறது.
Pakej Program PPR/PA Rahmah@ My Kabelஎன்ற உதவித் திட்டமானது மக்கள் வீடமைப்பு பகுதியினைச் சேர்ந்த 40,000 வீடுகளை சம்பந்தப்படுத்தும். கோலாலம்பூர், சிலாங்கூர், ஜொகூர், பினாங்கு ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள வீடுகள். அரசு சேவை ஊழியர்களுக்கு Insentif Pascabayar RAHMAH Penjawat Awamஎன்ற உதவி திட்டமும் உண்டு.
இலக்கவியல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வண்ணம் பி-ஹெய்லிங் தொழில் சார்ந்தவர்களுக்கு உதவுவது பி- ஹெய்லிங் ரஹ்மா திட்டமாகும். மொத்தம் 16 பி-ஹெய்லிங் சேவை நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இத்தகைய உதவித் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து பயனீட்டாளர்களுக்கும் இச்சேவை சென்று சேர வேண்டும் என்று இது உறுதிப்படுத்துகிறது.
Pakej Jalur Lebar Tetap Allo Technologi Rahmahஎன்ற அகண்ட அலைவரிசைக்கான கட்டணம் 69 வெள்ளி. பி40 பிரிவின், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், முன்னாள் ராணுவ படை வீரர்கள், ஓய்வு பெற்ற காவல்துறையினர், பணி ஓய்வு பெற்ற மலேசிய கடலோர அமலாக்க ஏஜென்சி பணியாளர்களுக்கு இச்சேவையானது குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது (Jalur tetap Allo) தொழில் நுட்பம் சேவையானது கெடா,
பேராக், பினாங்கு, சைபர் ஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் ஆகிய பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. ரஹ்மா உதவித் திட்டமானது அனைத்து வகையிலும் அனைவருக்கும் உறுதுணையாக இருந்து வருகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்