ஈப்போ, டிச. 2
அடுத்த ஆண்டுக்கான (2024) வரவு செலவுத் திட்டத்தை பேரா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சராணி முகமட் நேற்று சட்டமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன் தொடர்பில் பேரா மாநில மனிதவளம், சுகாதாரம், தேசிய ஒருமைப்பாடு, இந்தியர் விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்த பட்ஜெட்டில் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கான ஒதுக்கீடு வெ.10 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு நான்கு மில்லியன் வெள்ளி மட்டுமே ஒதுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பத்து மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஐந்து மில்லியன் இந்து மற்றும் சீக்கியர்களுக்கும் மீதமுள்ள ஐந்து மில்லியன் வெள்ளி இதர சமயத்தவர்களுக்கும் வழங்கப்படும். மேலும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீடு 2020 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. எனினும் அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் மீண்டும் ஒரு மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தியாகும் என்றும் அவர் கூறினார்.
தவிர, அரசாங்கம் பொதுவாக ஒதுக்கியுள்ள பி40 மக்களுக்கான வட்டியில்லாக் கடனான ஒரு லட்சத்திற்கும் மேற்போகாத நிதி, தொழில் திறன் பயிற்சி, மற்றும் மந்திரி பெசாரின் கல்வி நிதியுதவி போன்றவற்றிலும் இந்தியர்கள் பயனடைவார்கள் என்றும் சிவநேசன் தெரிவித்தார்.
செய்தியாளர் கூட்டத்தில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன், மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் வீ. பவானி ஷாஷா, ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். வசந்தி ஆகியோரும் உடனிருந்தனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்