பெட்டாலிங் ஜெயா, 15 செப்டம்பர் 2023
60 ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு செல்கோம் டிஜி பெர்ஹாட் பெருமையுடன் மலேசிய தின விளம்பரத்தை படைக்கிறது. மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் இது தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள பல இன மக்களின் பண்பாட்டினையும் பாரம்பரியத்தையும் இது பறைசாற்றுகிறது. வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக சேவை ஊக்குவிப்புகளை வழங்குகிறது. விரிவான மற்றும் மிகத் துரிதமான அலைவரிசையில் 5G இணைப்பு பயனை அனுபவிக்க வகை செய்கிறது.
Peranti மற்றும் Home Wifi என்ற ஏற்பாட்டின் மூலம் மேற்கண்ட அனுகூலங்களை வழங்கப்படுகிறது. இதில் பெரும் சிக்கன நடவடிக்கையும் அடங்கியுள்ளது. இவ்வாண்டு தேசிய தினத்தின் கருப்பொருள் மலேசிய மடானி - ஒருமைப்பாட்டினை பேணுவோம் - நம்பிக்கையினை நிறைவேற்றுவோம் - ஒருமைப்பாட்டு உணர்வால் உருவாக்கப்பட்ட விளம்பரம் இது. ஒரு புகைப்படத்தின் வாயிலாக மலேசியா மீது மலேசிய மக்கள் தங்களின் அன்பினையும் நேசத்தையும் பறைசாற்றும் வண்ணம் இந்த தேசிய தினக் கொண்டாட்டம். மலேசிய மக்களை ஒன்று திரட்டியுள்ளது.
வாடிக்கையாளர்களுடன் பொருள் பொதிந்த உறவினை உருவாக்கும் முக்கியத்துவத்தில் செல்கோம் டிஜி நம்பிக்கை கொண்டுள்ளது. மலேசிய தின விளம்பரத்தை உருவாக்கும் வண்ணம் மலேசியர்கள் தங்கள் நேசிக்கும் நாட்டை பற்றிய புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு இந்நடவடிக்கையில் பங்கேற்குமாறு மக்களுக்கு செல்கோம் டிஜி அழைப்பு விடுத்திருந்தது. பெற்றுக் கொள்ளப்பட்ட நூற்றுக்கணக்கான புகைப்படங்களிலிருந்து 250 புகைப்படங்கள் விளம்பரத்தை தோற்றுவிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டது.
ஒன்றுபட்டு இருந்தால் வலிமை என்ற செல்கோம் டிஜியின் உன்னத நோக்கத்திற்கு ஏற்ப இந்த முன்முயற்சி திட்டம் அமைந்துள்ளது. ஒற்றுமையின் வலிமை அடங்கியுள்ளது. ஒரே நோக்கத்தை நோக்கி ஒத்துழைப்புடன் பயணம் செய்வோம். உயர்ந்த நிலையிலான வெற்றியினை சாதிப்போம். துரித கதியில் புத்தாக்கத்தை ஏற்படுத்துவோம். வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த சேவையினை வழங்குவோம்.
அனைவருக்குமான 5G Program Peranti சேவைத்திட்டம்
மலேசிய மக்களில் அநேகம் பேர் 5G தொலைபேசி வசதியினை பெறுவதை உறுதிப்படுத்தும் வண்ணம் செல்கோம் டிஜி Program Peranti 5G என அனைவருக்குமான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மலேசிய தினக் கொண்டாடத்தின் அம்சங்களில் ஒன்று இது. இத்திட்டத்தின்கீழ் வாடிக்கையாளர் 5G தொலைபேசியை வாங்கும்போது 1,000 வெள்ளி வரையில் பணத்தை சிக்கனப்படுத்தலாம்.
பிரத்தியேக சலுகைகள் பற்றி மேலும் விவரமறியவும் செல்கோம் டிஜி மலேசிய தின விளம்பரத்தை கண்டு களிக்கவும். <https://ed.link/harimalaysia> என்ற அகப்பக்கத்தை அலசவும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்