img
img

பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்
வியாழன் 14 செப்டம்பர் 2023 12:40:58

img

கோலாலம்பூர், செப். 14-

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது) அனைத்து முஸ்லிம்களின் கடமையாகும்.  ஹலால் தொடர்பான விவகாரங்கள் தொட்டு திருக்குர் ஆனில் நபிகள் நாயகத்தின் பல்வேறு வசனங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று 168 ஆவது வரியான Surah Al-Baqarah - இதன் அர்த்தம் என்னவென்றால்:

மனிதர்களே, பூமியில் இருக்கக்கூடிய ஹலால் மற்றும்  சிறந்தவற்றை உட்கொள்ளுங்கள் என்பதுதான்.
நாம் நமது தினசரி வாழ்க்கையில் ஹலாலை புகுத்த வேண்டும் என்பதே நபிகள் நாயகத்தின் கோரிக்கை. நாம் உண்பது, உடுத்துவதில் மட்டுமின்றி வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் ஹலால் அம்சம் இருக்க வேண்டும். ஆனால் ஹலால் என்பது மிகவும் பரவலான ஒன்று. தவிர, இஸ்லாத்தை பின்பற்றுபவர்களுக்கு மட்டும் உரிதான ஒன்றல்ல. உலகம் முழுவதும் முஸ்லிம் அல்லாத மக்களும் இன்று ஹலால் பயனீட்டாளர்களாக மாறி வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஹலால் தொழில்துறை ஓர் அதிவேக வளர்ச்சித் தளத்தில் தற்போது உள்ளது.

அதற்கேற்ப, இன்றைய நவீன காலத்தில் சமூகத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் ஹலால் அம்சம் உட்படுத்தப்பட்டுள்ளது. சுய பராமரிப்பு பொருட்கள், மருந்து வகைகள், சேவைகள் மற்றும் ஹலால் தொழில்துறை தொடர்புடைய வணிகமயம் என அனைத்தும் இதில் உட்படும். முஸ்லிம் சமூகம் மட்டுமின்றி, முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியிலும் மிகவும் அதிகமாக இது ஒரு நிலையான தேர்வாக இருந்து வருகிறது.

உலகளாவிய ஹலால் பொருளாதார முன்னணி நாடாக மலேசியா

நேற்று முன் தினம் (செப். 12) தலைநகரில் 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஹலால் (GHaS) மாநாட்டை தொடக்கி வைத்தபோது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை உறுதிப்படுத்தினார்.
தற்போது உலகப் பொருளாதார ஜாம்பவான்களாகத் திகழும் ஜப்பான், சீனா, கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடனான தமது சந்திப்பில் எழுப்பப்பட்ட விவகாரங்களில் ஒன்று ஹலால் தொழில்துறை. ஹலால் சான்றிதழ்களை தயாரிப்பதில் உலகப் பிரசித்திபெற்ற நாடாக மலேசியா விளங்குகிறது என்று அன்வார் அம்மாநாட்டில் வலியுறுத்திக் கூறினார்.

நம் நாட்டைப் பொறுத்த வரையில் இது நமக்கு நன்மை தரக்கூடியது. இதனை நாம் முழுமையாக உணர்ந்து, அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் பிரதமர். அதே போல, வியட்னாம் மற்றும் லாவோசுக்கு நான் அண்மையில் அதிகாரத்துவ வருகையை மேற்கொண்டிருந்த சமயம், அந்நாடுகள் உடனான பரஸ்பர பேச்சுவார்த்தையின்போது ஹலால் சான்றிதழ் பற்றிய விவரங்கள் மற்றும் அதன் அம்சங்கள் குறித்து என்னிடம் கேட்கப்பட்டது. தத்தம் நாடுகளில் ஹலால் பொருட்களின் தயாரிப்பிற்கான வழிவகைகளைக் காண்பதிலும் அதற்கான பயிற்சிகளிலும் மலேசியாவின் உதவியை அவர்கள் நாடியுள்ளனர் என்றும் அன்வார் கூறினார்.

ஹலால் தொழில்துறையில் நாம் உருவாக்கியுள்ள துல்லியமான விஷயங்கள், அதற்கான சூழ்நிலைகளை உலகம் அங்கீகரித்திருப்பதே இதற்கு காரணமாகும். உண்மையில், அதிக புத்தாக்கமும் போட்டாபோட்டி தன்மையும் நிறைந்த ஹலால் தொழில்துறை உட்பட வர்த்தகத்தை வலுப்படுத்துவதன் வாயிலாக தேசிய மேம்பாட்டிற்கான லட்சியங்களை அண்மைய மடானி பொருளாதாரக் கொள்கை வலியுறுத்துகிறது. அதிகமான நன்மைகளைத் தரக்கூடிய தொழில்துறைகளின் மேம்பாட்டை துரிதப்படுத்துவதற்கு 12 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் ஒரு முழுமையான ஹலால் தொழில்துறையின் உருவாக்கத்திற்கு இது மலேசியாவை சரியான பாதையில் செலுத்துகிறது.

ஹலால் தொழில்துறையின் வளர்ச்சிக்கு உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் மட்டும்  காரணமல்லர். ஆனால், கூடுதல் மதிப்பு, தூய்மை, நம்பகத்தன்மை ஆகியனவும் மலேசியாவின் ஹலால் தயாரிப்புகளை உயரிய நிலைக்கு இட்டுச்செல்வதுடன் முஸ்லிம் அல்லாத நாடுகளின் பயனீட்டாளர்களுக்கும் முதன்மை தேர்வாக உள்ளது என்பதை பிரதமர் அன்வார் சுட்டிக்காட்டினார். ஹலால் தொழில்துறையில் மலேசியா நீண்ட காலமாகவே முன்னணி நாடாக விளங்கி வருகிறது. ஹலால் சூழல் அமைப்பை அரசாங்கம் எப்போதும் மேம்படுத்தி, முன்னேற்றம் அடையச் செய்து வந்துள்ளது. நாட்டின் ஹலால் தொழில்துறையின் மேம்பாட்டிற்கு ஆதரவாக சிறந்த அடிப்படை வசதிகளை உருவாக்குவதும் ஆய்வுகளை மேற்கொள்வதும் இதில் அடங்கும்.

கீழ்க்காண்பவை இதற்கு சான்று:

* ஹலால் சான்றிதழ்களுக்குப் பொறுப்பாக மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா (ஜாக்கிம்) அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் வழங்கப்படும் சேவைகளும் பொருட்களும் நம்பகத்தன்மை உடையவை என்பதற்கு இதன் முத்திரை உத்தரவாதம் அளிப்பதுடன், ஒரு சிறந்த முத்திரையாகவும் விளங்குகிறது.

* ஹலால் மேம்பாட்டுக் கழகம் உருவாக்கப்படுவதன் வாயிலாக நாட்டின் ஹலால் சூழல் அமைப்பு மேலும் வலுவடைந்துள்ளது. ஹலால் தொழில்துறை மேம்பாடு இக்கழகத்தின் பொறுப்பாகும். ஹலால் என்பது வெறும் உணவு மற்றும் பானங்களுக்கு மட்டும் அல்லாது அழகு சாதனங்கள், மருந்துப்பொருட்கள், வங்கி, தக்காஃபுல் சேவைகள் ஆகியவற்றுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். உலக ரீதியில் போட்டாபோட்டித்தன்மை வாய்ந்த ஒரு தொழில்துறையாக மலேசியாவின் ஹலால் தொழில்துறையை இது உருவாக்கும். வாய்ப்புகள், முதலீடு, வர்த்தகம், வேலை வாய்ப்பு, தகவல் பகிர்வு, தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றின் வழி இது சாத்தியமாகும்.

* மலேசிய ஹலால் தொழில்துறையை நிலைநிறுத்துவதில் ஜே.எஸ்.எம். என்றழைக்கப்படும் மலேசிய தர இலாகாவும் ஒரு முக்கியப் பங்கை ஆற்றுகிறது. அனைத்துலக தரம் தேவைப்படும் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை இது உறுதி செய்கின்றது. இதுவும் இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டும் பொருந்தும் ஒரு விஷயமல்ல. ஹலால் தொடர்பில் மலேசிய தரம் அல்லது எம்.எஸ். சை உருவாக்கிய முதல் நாடு என்ற பெருமை மலேசியாவிற்கு உரியது. ஓ.ஐ.சி. என்றழைக்கப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கு இது ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

* மலேசியாவின்  ஹலால் சூழல் மற்றும் பொருளாதாரத்திற்கு துணையாக, அதிகமான புதிய வாய்ப்புகளை வழங்குவதன் வழி ஹலால்  உணர்வை GHaS 2023 தொடர்ந்து நிலைநிறுத்தும். மலேசியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஹலாலின் நன்மதிப்பை நிலைநிறுத்துவதற்கும் அதை ஊக்குவிப்பதற்குமான அராசாங்கத்தின் முயற்சிகளில் ஒரு பகுதிதான் GHaS  என்று அன்வார் குறிப்பிட்டார்.

ஹலால் தொழில்துறையில் உலகளாவிய முன்னணி நாடாக மலேசியாவின் வியூகத்தை வலுப்படுத்துவது
அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரு நிறுவனமாக, ஜே.எஸ்.எம். உடன் ஒருங்கிணைந்து ஹலால் தர மேம்பாட்டின் அடிப்படையில் மலேசியாவின் ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பை ஜாக்கிம் ஏற்றுள்ளது. உணவு, சுவைபான வகைகள், மருந்து வகைகள், தளவாடங்கள், அழகு சாதனங்கள், ஹலால் ஆய்வுக்கூட பரிசோதனை, முஸ்லிம்களுக்கான விருந்தோம்பல் சேவைகள் ஆகியன உட்பட ஹலால் தொழில்துறைக்கு மொத்தம் 15 தரநிலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இன்று ஹலால் தொழில்துறையில் மிகவும் ஈர்க்கத்தக்க ஒரு பரிணாம வளர்ச்சியின் விளிம்பில் நாம் இருக்கின்றோம். உலகச் சந்தையில் உள்ள தொடர்ச்சியான தேவைகளே இதற்கு காரணம். விலை மதிப்பில்லாத ஓர் அறிவுசார் சொத்தாக மலேசியாவின் ஹலால் முத்திரையை பாதுகாக்கும் பொருட்டு, சிரிம் பெர்ஹாட் நிறுவனத்தின் வாயிலாக வெளிநாடுகளிலும் மலேசியாவின் ஹலால் முத்திரையை பதிவு செய்யும் நடவடிக்கையில் ஜாக்கிம் இறங்கியுள்ளது.

இன்று வரையில் மலேசியா தவிர்த்து மொத்தம் 25 நாடுகளில் மலேசியாவின் ஹலால் முத்திரை பதிவு பெற்றுள்ளது. அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், தென் கொரியா, எகிப்து, ஐக்கிய அரபு சிற்றரசுகள் மற்றும் கசக்ஸ்தான் ஆகியன அவற்றுள் அடங்கும். முதல் முறையாக, மலேசிய ஹலால் சான்றிதழுக்காக ஜாக்கிம் வழி விண்ணப்பம் செய்யும் வாய்ப்பை வெளிநாட்டில் உள்ள தொழில்துறைகள் பெற்றுள்ளன. மலேசிய ஹலால் சான்றிதழுக்காக அனைத்துலக நேரடி விண்ணப்பம் வாயிலாக இது சாத்தியமாக்கப்பட்டுள்ளது என்றார் பிரதமர்.

மொத்தம் ஏழு தொழில்துறைகளுக்கு அனைத்துலக மலேசிய ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அவை:
* உணவு, சுவைபான தயாரிப்புகள்;
* அழகு சாதனங்கள்;
* மருந்து வகைகள்;
* பயனீட்டுப் பொருட்கள்;
* பொருள் விநியோக/இடமாற்றச் சேவைகள்;
* மருத்துவ உபகரணங்கள்;
* ஒப்பந்த அடிப்படையிலான தயாரிப்புகள்

எல்லையில்லா வாய்ப்புகளுடன் நம்மை இணைக்கும் ஒரு நுழைவாயிலாக இது பார்க்கப்பட வேண்டும். ஜாக்கிம் இதற்கான முயற்சிகளை தொடர்கிறது. மலேசியாவின் வழிகளைப் பின்பற்றுவதில் மற்ற நாடுகளுக்கு ஒரு வினையூக்கியாகவும் ஜாக்கிமின் இந்த முயற்சிகள் அமைந்துள்ளன. உலகின் ஹலால் தொழில்துறைக்கு இது முன்னோடியாவும் விளங்குகின்றது. மலேசிய அரசாங்கத்திற்கும் அனைத்துலக சான்றிதழ் வழங்கும் அமைப்புகள், ஹலால் தொழில்துறையினருக்கும் இடையே நிலவும் இந்த ஒத்துழைப்பானது, உலகின் தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிக்கவும் உலக ஹலால் தொழில்துறையை மேலும் வலுப்படுத்துவதற்கும் வகை செய்கிறது.

இந்த காரணங்களுக்காக, உலக ஹலால் சந்தை தேவைகளில் அதிகமான வாய்ப்புகளை ஆராய்ந்து, வாய்ப்புகளை உருவாக்குவதற்கு நாட்டின் ஹலால் தொழில்துறையினர் நாட்டின் வலுவான ஹலால் துறையில் நிலவும் சந்தர்ப்பங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற பிரதமரின் இந்த அறைகூவல் தொழில்துறை சார்ந்த அனைவராலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஒரு பிரதான ஹலால் மையமாக, உலகின் ஹலால் சந்தையில் மலேசியா மறைமுகமாக அதன் பங்களிப்பை வழங்குவதற்கு இது வகை செய்யும். இச்சந்தை ஆண்டுக்கு 3.5 விழுக்காடு வளர்ச்சிகண்டு 2024 இல் 2.4 டிரில்லியன் அமெரிக்க டாலரை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள ஹலால் சான்றிதழ் நிறுவனங்களுக்கு GHaS ஒரு முக்கியமான சந்திப்பு தளமாக விளங்குகிறது. மிகச்சிறந்த நடைமுறைகளை ஆராய்வதில் தங்கள் கருத்துகளை பரிமாற்றிக்கொள்ளும் வாய்ப்பை இது வழங்குகிறது. உலகம் முழுவதும் ஹலால் சான்றிதழை நிலைநிறுத்துவதில் ஹலால் தொழில்துறையில் சமீபத்திய வளர்ச்சிகள் பற்றிய யோசனைகள், வியூகங்கள் பெருகும் ஒரு தளமாகவும் இது விளங்குகிறது.            

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img