புதன் 23, அக்டோபர் 2024  
img
img

மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது
திங்கள் 04 செப்டம்பர் 2023 14:32:18

img

மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது - முக்கியமான ஒன்று

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப காலம் தொட்டே இருந்து வருகிறது.  அதாவது Rasulullah SAW காலத்தில் இருந்தே வவாசான் மடானி கோட்பாடு என்பது பலவகை மேம்பாட்டுடன், திருத்தங்களுடன் வரலாற்று பயணத்தில் வளர்ந்து வரும் ஒன்று. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதற்கு முக்கியமான அர்த்தத்தை வழங்கியுள்ளார். இவர் தத்துவார்த்த அடித்தளத்தை அமைத்ததோடு  செயல்பாட்டு கட்டமைப்பை முன்மொழிந்துள்ளார்.

அன்வாரிடமிருந்து காணப்படும் புதிய வவாசான் மடானி கோட்பாட்டின் முக்கிய அம்சம் என்றால் சமூகத்திற்கும் நாட்டிற்கும் இடையே ஒருங்கிணைப்பு ஆற்றல் நிலவுகிறது. வவாசான் மடானி என்பது இஸ்லாமிய ஆரம்ப காலம் தொட்டே இருந்து வருகிறது. இது இஸ்லாமிய சமூக லட்சியங்களைக் கொண்ட ஒன்றாக விளங்குகிறது. இஸ்லாம் சமயத்தை கொண்டு வந்த நபி முகம்மது, யாட் சிரிபுக்கு வந்தவுடன் அதுவரையில் இயல்பாகவே கிராமப்புற மையமாக இருந்து வந்த  AL-Madinah நகர்ப்புற மையமாக மாறியது. இந்த குறுகிய காலகட்டத்திலேயே AL-Umah மற்றும்  AL-Madinah என்ற சிறந்த ஏற்பாட்டினை தோற்றுவித்துள்ளது.

முதலாவது மென்பொருள், இரண்டாவது வன்பொருள். இந்த இரண்டு விவகாரங்களும் இஸ்லாம் சமயத்திற்கு ஏற்ப மடானியை தோற்றுவித்துள்ளது. அதாவது இது AL-Umah மற்றும் AL-Madinah என்பதுதான் இதன் பொருளாகும். இஸ்லாம் சமயத்தை பின்பற்றுவோர் எஸோ டெரிக் பரிமாணம் கொண்டவர்கள். இச்சமூகம் ஒரே நம்பிக்கை கொண்டவர்கள். சமத்துவம் மற்றும் நீதி நியாய பண்புகள் நோக்கத்தை கொண்டவர்கள். சகோதரத்துவமும் சமத்துவமும் ஒருங்கே மிளிரும் ஒன்று. மதினா ஓர் எஸோ டெரிக் பரிமாணம். சமுதாயத்தின் படைப்பாற்றல் தன்மையின் உருமாற்றம் இது. மேம்பாடு அடைந்த Masyarakat Nabawi சமூகம் என்பது பல இன சமுதாயம். சமாதானமாக வாழும் சமுதாயம். ஒருவரை ஒருவர் மதிக்கும் கலாச்சாரத்தைக் கொண்ட சமுதாயம். ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து ஒரே  லட்சியத்தை உருவாக்கும் சமுதாயம் இது. சம்பந்தப்பட்ட Wawasan Madani Nabawi என்ற கோட்பாடு நபிகள் நாயகத்திற்கு பிறகு சமூக கலாச்சாரம், அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு கோட்பாடுகள் மற்றும் கனவு லட்சியங்களுடன் சமய அறிஞர்களால் மேம்படுத்தப்பட்ட ஒன்று.

இவர்கள் பல்வகை விருப்பங்களை முன்னிலைப்படுத்துகின்றனர். Negara Sejahtera என்ற கோட்பாடு முன்னிலைப்படுத்தப்படுகிறது. இம்மையிலும் மறுமையிலும் மன மகிழ்வான வாழ்க்கையினை உருவாக்குவோம் என்பதே இதன் நோக்கமாகும். Al-Farab போன்ற தத்துவ மேதைகள் நாட்டின் முதன்மையான கோட்பாட்டை முன்வைத்துள்ளனர். நன்னெறிகளையும் தார்மீக பண்புகளையும் நாடும் சமுதாயமும் உறுதியாக கடைப்பிடிப்பதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். Al-Ikhwan Al-Safa என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட தத்துவஞானிகள் குழு ஒன்று இதர வழிமுறைகளை முன் வைத்துள்ளது.

சமய அறிஞர் முகமது அப்டு ஓர் அத்தியாவசிய அம்சத்தை  வலியுறுத்திகிறார். முஸ்லிம் சமுதாயத்தினர் பல இன சமுதாயத்தில் இதர இனங்களுடன் சகோதரத்துவமாக வாழ்கின்றனர். முஸ்லிம் சமூகம்  பெரும்பான்மை சமூகமாக இருந்தாலும் சரி சிறுபான்மை சமூகமாக இருந்தாலும் சரி நாட்டை மேம்படுத்துவதில் சமாதான சகவாழ்வு கொள்கையுடன் வாழ்கிறோம். இதன் தொடர்பில் பிரதமர் முன்வைத்துள்ள வவாசான் மலேசிய மடானி கோட்பாடு பொருத்தமானது, பாராட்டத்தக்கது மற்றும் போற்றத்தக்கது என்று பேராசிரியர் டாக்டர் எம்.டின் சயாம்சுடின் விவரிக்கிறார்.

மலேசியாவிற்காக அன்வார் தோற்றுவித்த வவாசான் மடானி கோட்பாடு குறித்து விவாதிப்பது என்பது சுவாரஸ்யமான ஒன்று. இதில் நீடித்த நிலைமை, பரிவும் பாசம், மரியாதை, புத்தாக்கம், வளமை, நம்பிக்கை போன்ற அம்சங்களின் அர்த்தங்கள் விளங்கக்கூடிய வகையில் உள்ளன. மேம்பாட்டிற்கும் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் இது உகந்த சூழ்நிலையினை உருவாக்கும். மடானி என்றால் அரபிய மொழியில் முன்னேற்றம் என்று பொருள். நாகரிகம் என்ற ஆங்கில மொழி வார்த்தைகளுடன் இது தொடர்பு கொண்டுள்ளது. உன்னத உயர்ந்த நாகரிகத்தை உருவாக்கும் நோக்கத்தை இது கொண்டுள்ளது.

முன்னேற்றகரமான, தலைசிறந்த மற்றும் வெற்றிகரமான மலேசியாவை தோற்றிவிக்கக்கூடிய மகத்தான லட்சியக்கனவை மடானி கோட்பாடு கொண்டுள்ளது. சிறந்த மலேசியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் தீட்டிய கருத்துப் பெட்டகத்தில் மிகவும் தெளிவாகவும் திட்டவட்டமாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது. அன்பு, பண்பு, பரிவு, பாசம், பரஸ்பர மரியாதை, புத்தாக்கம், நம்பிக்கை, சமத்துவத்துடன் அனைவரையும் அரவணைத்துச் செல்வோம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு நீடித்த நிலையான மற்றும் வளமையான மலேசியாவை நிர்மாணிப்போம்.

இறுதியாக நீதியான சமுதாயத்தை நிர்மாணிப்பதே நமது லட்சியம். பரிவுமிக்க நாடும் நீதியான நியாயமான நாடும் ஒருசேர அமைய வேண்டும். சமத்துவம், நீதி, சகோதரத்துவம், முன்னேற்றம், தலைசிறந்த நிலை மற்றும் வெற்றி எதிரொலிக்கட்டும் என்று பேராசிரியர் டாக்டர் எம்.டின் சயாம்சுடின் (Professor Dr. M.Din Syamsuddin) விமர்சனம் செய்துள்ளார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img