img
img

மலேசியாவிற்காக ஒரு புதிய தேசத்தை உருவாக்குபவரைத் தேடுகிறோம்
சனி 12 ஆகஸ்ட் 2023 09:35:46

img


முன்னாள் துணைப்பிரதமர் துன் டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மானின் மறைவை முன்னிட்டு அவரின் 50 ஆவது நினைவு நாள் சடங்கு இம்மாதம் 2 ஆம் தேதி மெர்டேகா சதுக்கத்தில் நடைபெற்றது.

நான் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடுகையில் இதுவே மிகவும் அர்த்தமுள்ள ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது. மலேசியா தற்போது பதினெட்டாவது முறையாக நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒருவரைத் தேடுகிறது. அதற்கேற்ப இந்நாட்டை கட்டியெழுப்பும் வாய்ப்பினை நிரப்புவதற்கான முக்கியமான எடுத்துக்காட்டாக துன் டாக்டர் இஸ்மாயிலின் வாழ்க்கை வரலாறும் அவரின் மரபும் அமைகின்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஏற்கெனவே தயார் செய்யப்பட்டிருந்த உரையிலிருந்து பேசவில்லை. மாறாக, தன் மனதிலிருந்து எழுந்த வார்த்தைகளை அங்கு உரையாக முன்வைத்தார். துன் டாக்டர் இஸ்மாயிலின் நேர்மை, தூய்மை, மற்றும் அவரின் பண்பு ஆகியன இந்நாட்டை நிழல் போல் பாதுகாத்து வந்துள்ளது என்று பிரதமர் கூறினார்.

1970 களில் ஒரு மாணவர் தலைவராக தமது நாட்களை நினைவு கூர்ந்த அன்வார் இப்ராஹிம், அப்போதைய பிரதமர் துன் அப்துல் ரசாக் உடனோ அல்லது வேறெந்த தலைவர் முன்னிலையிலும் துணிச்சலாகப் பேசுவதற்கு பயந்தது இல்லை என்றார். ஆனால் துன் இஸ்மாயிலை பொறுத்த வரையில் மரியாதையுடன் பேசுவதே அவரின் தன்மையாக இருந்தது. இதுதான் துன் டாக்டர் இஸ்மாயிலின் பண்பு.

காலஞ்சென்ற துன் டாக்டர் இஸ்மாயிலுக்கு மற்ற அனைத்தையும் விட இந்த நாடுதான் முக்கியம். தன் உடல்நிலை காரணமாக 1957 இல் அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகினாலும் 1969 ஆண்டு மே 13 ஆம் தேதி சம்பவத்திற்குப் பிறகு அவர் பணிக்குத் திரும்புவதற்குத் தயாராக இருந்தார். பல இன நாடாக மலேசியா உருவாக வேண்டும், லட்சியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும், ருக்குன் தெத்தாங்கா கோட்பாடுகளை கடைப்பிடித்து, பின்பற்ற வேண்டும் என்பதை உறுதிசெய்வதில் அவர் முழுமையாக தன்னை அர்ப்பணித்தார்.

நல்ல வேளையாக டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான இன்றைய ஒற்றுமை அரசாங்கம் துன் டாக்டர் இஸ்மாயிலின் சேவைகளை நினைவுகூரும் முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. மலேசியாவில் அதிகமான அரசியல் பிரமுகர்கள் இருக்கின்ற போதிலும், தங்கள் நேர்மை, பல்லினம் என்ற தூரநோக்கு, நிர்வாகத்தில் ஆற்றல், உலக விவகாரங்கள் மற்றும் புவிசார் அரசியல் விவகாரங்களில் வியூகம் ஆகியவற்றுக்காக பாராட்டப்படுபவர்கள் அவர்களில் அதிகமானவர்கள் இல்லை. துன் டாக்டர் இஸ்மாயிலுக்கு இதன் அனைத்து குணங்களும் திறனும் உள்ளன.

மலாயா, மலேசியா இரண்டுமே உள்நாட்டுப் போர் காலத்தின் மத்தியில் பிறந்தன. அந்த காலத்தில் நாட்டின் பிழைப்பிற்கு புவிசார் அரசியலை கையாள்வது மிகவும் முக்கியமான, அவசியமான ஒன்றாக இருந்தது, இங்குதான் துன் டாக்டர் இஸ்மாயிலின் மகத்துவத்தைக் காண முடிந்தது. காலஞ்சென்ற துன் டாக்டர் இஸ்மாயில், அமெரிக்காவிற்கான முதல் மலேசிய தூதர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐக்கிய நாட்டிற்கான மலேசியாவின் முதலாவது பிரதிநிதியும் இவராவார். Malaya’s First Year at the United Nations: As Reflected in Dr Ismail’s Reports Home to Tuanku Abdul Rahman   என்ற தலைப்பிலான டத்தோ டாக்டர் ஊய் லோ பெங்கின் புத்தகத்தில் இந்த கதை முழுமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

The Reluctant Politician: Tun Dr. Ismail and His Time என்ற தலைப்பிலான புத்தகத்தையும் எழுதிய டாக்டர் ஊயுடன் எனக்குள்ள நட்புறவின் வாயிலாக துன் டாக்டர் இஸ்மாயிலின் மரபு குறித்து அதிகமாக தெரிந்து கொண்டேன், அதற்கான ஆவலும் எனக்கு அதிகமாக இருந்தது. இந்த புத்தகம் Not Because of Rank: Tun Dr Ismail and his time என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. டாக்டர் ஊய் மூலமாக, துன் டாக்டர் இஸ்மாயிலின் மூத்த புதல்வர் தாவ்ஃபிக் எனக்கு அறிமுகமானார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

கடந்த 2005 இல், படிப்பை முடித்து விட்டு  ஆஸ்திரேலியாவிலிருந்து  நாடு திரும்பியதும் டாக்டர் ஊயிற்கு நான் அறிமுகம் செய்யப்பட்டேன். துன் டாக்டர் இஸ்மாயிலின் நண்பர்களையும் அவருக்குத் தெரிந்தவர்களையும் பேட்டி எடுப்பதற்காக அப்போது அவர் கோலாலம்பூரில் இருந்தார். என்னை பொறுத்த வரையில், அந்த அறிமுகத்தின் வாயிலாக சிங்கப்பூர், தென்கிழக்காசிய கல்விக்கான யூசுப் இஷாக் கழகத்தின் ஓர் உறுப்பினராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 2006 டிசம்பர் மாத இறுதியில் The Reluctant Politician  என்ற புத்தகத்தை படித்த ஞாபகம் இன்றும் எனக்கு இருக்கிறது.  2007 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இந்த புத்தகம் பற்றியே எங்கும் பேச்சாக இருந்தது.

அந்த காலகட்டத்தில் டத்தோ கலிமுல்லா ஹசான் தலைமையில் செயல்பட்ட தெ நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் மற்றும் சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆகியன அந்த புத்தகத்திலிருந்து சில பகுதிகளை தினசரி பிரசுரித்து வந்தன. 2007 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த புத்தகம் பல தடவை அச்சடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடு மிகவும் பரபரப்பாக இருந்த அந்த காலக்கட்டத்தில் துன் டாக்டர் இஸ்மாயிலின் வாழ்க்கை வரலாற்றில் அதிகமான வாசகர்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவி மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை குறையத் தொடங்கியது மேலும் ஏமாற்றத்தை அளித்த ஒரு காலகட்டம் அது.

அந்த புத்தகத்தை தயார் செய்வதற்காக டாக்டர் ஊய் மேற்கொண்ட ஆய்வுகள் இன்று TTDI அல்லது தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் என்ற பெயரில் தலைநகரில் மிகவும் நேர்த்தியான ஒரு குடியிருப்புப் பகுதி இருப்பதை நினைவுறுத்துகிறது. அரசியலிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள், நாட்டிற்காக பங்காற்ற விரும்புபவர்களுக்கும் நாட்டை கட்டியெழுப்ப நினைப்பவர்களுக்கும்  அரசியல் வகை செய்கிறது என்பதையும் இந்த புத்தகம் நினைவு கூர்கின்றது, இது வீண் போகும் ஒரு விஷயம் அல்ல. மலேசியாவில் இது பயனுள்ள ஒரு முயற்சியாகவே கருதப்படுகிறது.

The Reluctant Politician என்ற புத்தகம் வெளியிடப்பட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தின் வாயிலாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஒரு பொன்னான வாய்ப்பு மலேசியாவிற்கு இப்போது கிடைத்துள்ளது. துன் டாக்டர் இஸ்மாயிலை ஒரு சிறந்த முன்மாதிரியாகக் கொண்டு, இந்நாட்டை கட்டியெழுப்புவதற்காக புதிய தலைமுறையைக் கண்டுபிடித்து, வழிகாட்டும் ஆர்வத்தை பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார்.

அவரின் இந்த ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில், துன் டாக்டர் இஸ்மாயிலை போன்றே சுத்தமான இதயம், தூய்மையான ஆன்மா படைத்த இன்றைய அரசியல்வாதிகள் அனைத்து மலேசியர்களுக்கும் சிறந்த ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைய வேண்டும்.      
   

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img