கோலாலம்பூர்,மே
தொழில்நுட்பத்தின் அபரிமித வளர்ச்சியின் ஒரு பகுதியாகத்தான் இன்று நாடெங்கும் 5ஜி பற்றியே பேச்சாக இருக்கின்றது. நமது அன்றாட பணிகளிலும் சரி, பொழுதுபோக்கு மற்றும் நடவடிக்கைகளிலும் சரி கைப்பேசியும் இணைய இணைப்பும் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது, அந்த அளவிற்கு புதிய பரிமாணமும் புதிய பரிணாமமும் நம்மை ஆட்கொண்டுள்ளது.
5ஜி என்றால் என்ன?
அண்மைக் காலமாக இந்த புதிய தொழில்நுட்பம் பற்றியே மலேசியர்கள் சிந்தித்தும் பேசியும் வருகின்றனர். தங்களுக்கு ஒரு புதிய சகாப்தத்தை 5ஜி உருவாக்கித்தரும் என்ற பெரிய எதிர்பார்ப்புகளுடன் உற்சாகத்துடனும் அவர்கள் காத்திருக்கின்றனர். 5ஜி என்பது கைப்பேசி நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் ஐந்தாவது தலைமுறை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கின்றன: இது பற்றி விவரிக்கின்றார் செல்கோம்டிஜி நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ இட்ஹாம் நவாவி.
* முதலில் இணையத் தொடர்பில் அதிவேகத்தை இது தருகிறது. நாம் கண் இமைக்கும் நேரத்தில் நமக்கு வேண்டிய தகவல்கள் நம் விரல் நுனியில் இருக்கும். அதுதான் 5ஜி யின் தனித்துவம். தற்போதைய 4ஜி அளவை விட 5ஜி யின் வேகம் சுமார் 20 மடங்கு அதிகம் என்றால் மிகையாகாது.
* பல்வேறு சாதனங்களை ஒரே நேரத்தில் இணைக்கும் வல்லமை பெற்றது. ஒரு சதுர கிலோ மீட்டர் தூரத்திற்குள் சுமார் 10 லட்சம் சாதனங்கள் வரை இணைப்புகளை பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 4ஜி அளவை விட 10 மடங்கு முன்னேற்றம் என்றே சொல்லலாம்.
* ஒரு முறை கிளிக் செய்ததும் உங்களுக்கான தொடர்பு அதிவேகத்தில் கிடைத்து விடும். ஒரு மில்லி விநாடிக்கும் குறைவான நேரத்தில் உடனடியாக தொடர்பு அல்லது இணைப்பு கிடைக்கக்கூடிய வாய்ப்பினை 5ஜி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 ஜிக்கு மாறுவதற்கு கைப்பேசிகளை மாற்ற வேண்டுமா?
5ஜி பயன்படுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் 5 ஜி ஏற்புடைய விவேக கைப்பேசிகளை பயன்படுத்த வேண்டும். 2021 முதல் விற்பனையாகும் கைப்பேசிகள் 5ஜி அம்சம் பொருந்தியவை. ஒவ்வொரு மாதமும் வாங்கும் சக்திக்கேற்ற 5ஜி கைப்பேசிகள் விற்கப்பட்டு வருகின்றன. செல்கோம் மற்றும் டிஜி வாடிக்கையாளர்கள் தங்களின் இப்போதைய 5ஜி அம்சம் உள்ள சிம் கார்டுகளை பயன்படுத்தலாம்.
நன்மைகள் என்ன?
வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்துறை சார்ந்தவர்களுக்கு 5ஜி மூலம் எம்மாதிரியான நன்மைகள் கிடைக்கின்றன என்பது உங்களின் மற்றொரு கேள்வியாக இருக்கலாம். 5ஜி என்பது ஓர் இறுதி இலக்கு என்று சொல்லிவிட முடியாது. மாறாக, ஒன்றை செயல்படுத்தும் பணியை அது தொடர்ச்சியாக செய்கின்றது.
இதன் அர்த்தம் என்ன? பல்வேறு டிஜிட்டல் செயலிகளின் செயல்பாட்டிற்கான ஒரு தொடர்ச்சியான இணைப்பு முறைதான் இந்த 5ஜி தொழில்நுட்பம் என அவர் தெரிவித்தார். வாடிக்கையாளர்களுக்கும் தொழில்துறை சார்ந்தவர்களுக்கும் இதன் உண்மையான நன்மைகள் Artificial Intelligence (AI), Internet of Things (IOT) மற்றும் 5ஜியை பயன்படுத்தும் இதர புதிய தொழில்நுட்பங்களின் மூலம் கிடைக்கின்றது. வாடிக்கையாளர்களை பொறுத்த வரையில், யூ-டியூப் காணொளிகளை பார்ப்பது, உணவுகளுக்கு ஆர்டர் கொடுப்பது, அல்லது இணையம் வாயிலாக பொருட்களை வாங்குவது போன்ற தினசரி பயன்படுத்தும் செயலிகளின் செயலாக்கம் 5ஜி இணைப்பால் மேலும் மேம்படும் என்று எதிர்பார்க்க முடியாது. இச்செயலிகள் ஓரளவுக்கான வேகத்தை மட்டுமே பயன்படுத்துவதால் 4ஜி பயன்பாடு போதுமானது.
தொழில்துறை சார்ந்தவர்களுக்கு 5ஜி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. மிகச்சிறந்த செயல்பாட்டினை வெளிப்படுத்துவதற்கும் அதனை அடைவதற்கும் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கி உருமாற்றம் செய்வதற்கு இச்செயலிகள் உதவ முடியும். உதாரணமாக:
* கனரக தொழில்துறைகளில் ஷிப்பிங் கொள்கலன்கள், கேமரா தொடர்புகள், துறைமுக பாரந்தூக்கிகள், ஃபோர்க்லிஃப்டுகள், தானியங்கி இயந்திரங்கள், வாகனங்கள் போன்றவற்றின் பயன்பாட்டில் 5ஜி பேருதவியாக விளங்கும்.
* தயாரிப்புத் தொழில்துறையிலும் எரிவாயு, எண்ணெய் தொழில்துறையிலும் சில கோளாறுகளை அல்லது இயந்திரங்கள் பழுதாவதை முன்கூட்டியே கண்டறியும் ஆற்றலை 5ஜி வழங்குகிறது. அபாயகரமான நடவடிக்கைகளின்போது நம்பகமான முன்கூட்டியே தடுக்கும் அம்சங்களை இது வழங்குகிறது. மலேசியாவில் இவை தற்போது பரீட்சார்த்த முறையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
5ஜி என்னென்ன நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும் என்ற விஷயத்தில் செல்கோம்டிஜி நிறுவனம் பல்வேறு சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. தொழில்துறைகள் சார்ந்தவர்களுடனும் அரசாங்கத்துடனும் அணுக்கமாக ஒத்துழைத்து வருகிறது. இது மட்டுமின்றி, புதிய பரிணாம தொழில்நுட்பங்களை ஆராய்வதற்காக புத்தாக்க மையம் ஒன்றையும் நாங்கள் அமைத்துள்ளோம். 5ஜி க்கு மாற வேண்டுமானால் கைப்பேசியை நாம் மாற்ற வேண்டுமா? தேவை இல்லை. இன்றைய பெரும்பாலான கைப்பேசிகள் 5ஜி பயன்பாட்டிற்கு ஏற்பவையாகவே அமைந்துள்ளன என்று டத்தோ இட்ஹாம் நவாவி மேலும் விவரித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்