img
img

2023ஆம் ஆண்டு பட்ஜெட் பி.டி.பி.டி.என். கடன் பட்டவர்களுக்கான அனுகூலங்கள்
புதன் 24 மே 2023 13:49:15

img

கோலாலம்பூர், மே 23-
நிதிப் பிரச்சினை காரணமாக எந்தவொரு மாணவரும் உயர்கல்வி நிலையத்தில்  இயலாத நிலை ஏற்படவே கூடாது. இத்தகைய நிலையினை கருத்தில் கொண்டு அரசாங்கம் தேசிய கல்விக்கடனுதவி கழகத்தை  உருவாக்கியுள்ளது. உயர்கல்வி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கி உதவுவது கல்விக் கடனுதவி கழகத்தின் கடமையாகும்.

உயர்கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் பி.டி.பி.டி.என். என்பது ஓர் ஏஜென்சி. இது 1997ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 31ஆம் தேதி வரையில் இக்கழகம் வழங்கிய கல்விக்கடன் ஆக மொத்தம் 38 லட்சம் பேருக்கு நன்மையளித்துள்ளது. வழங்கப்பட்ட  கடனுதவித் தொகை 69.14 பில்லியன். கல்விக் கடனுதவி என்பது ஒரு மாணவரின் கல்விக் கட்டணம் என்ற தேவையினை நிறைவு செய்வதோடு மாணவரின் வாழ்க்கைச் செலவினத்தின் ஒரு பகுதியினை நிறைவு செய்வதாக இருக்கும். எனினும் இக்கழகத்தின் நோக்கம் என்பது வெறும் கடனை வழங்குவதும் வசூலிப்பதும் மட்டுமே அல்ல. Simpan SSPN என்ற கல்விச் சேமிப்பு திட்டத்தில் சேமிப்பு கலாச்சாரத்தை பேணி வளர்க்கிறது. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் உயர்கல்விக்காக சேமிக்கும் ஒரு தளமாக இது விளங்கும்.

பி.டி.பி.டி.என். கடன் பெற்றவர்களுக்கு இதோ ஒரு நற்செய்தி. கடனை திருப்பி செலுத்துபவர்களுக்கு சில அனுகூலங்கள் 2023ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இரண்டு வகை அனுகூலங்களை அமலாக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. முழுமையான கடன் தொகையினை கட்டி முடிக்கும் வண்ணம் எஞ்சிய கடன்தொகையின் 20 விழுக்காடு கழிவு வழங்கப்படும். மொத்த கடன்தொகைக்கு குறைந்தபட்சம் 50 விழுக்காடு கடன் தொகையினை திருப்பி செலுத்துவதில் 15 விழுக்காடு கழிவு வழங்கப்படும். சம்பளம் பிடித்தம் வழி கடனை திருப்பி செலுத்துபவர்களுக்கு 15 விழுக்காடு கழிவு.

myPTPTN செயலி வாயிலாக கடனை செலுத்துபவர்களுக்கு 5 விழுக்காடு கழிவு வழங்கப்படும். கழிவு வழங்கும் சலுகையானது 2023ஆம் ஆண்டு மார்ச் முதல் தேதி முதல் மே 31ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும். 1,800 வெள்ளிக்கும் குறைவான வருமானம் கொண்ட நபர் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு ஆறு மாத காலகட்டத்திற்கு  ஒத்தி வைத்துக் கொள்ளலாம். இதுதான் இரண்டாவது வகை அனுகூலமாகும். என்ற பி.டி.பி.டி.என். அதிகாரத்துவ  அகப்பக்கத்தின் வழி 2023ஆம் ஆண்டு மார்ச் முதல் தேதி கடனை ஒத்தி வைப்பதற்கான விண்ணப்பம் செய்து கொள்ளலாம். பி.டி.பி.டி.என். என்பது பல்வேறு முன்முயற்சிகளையும் பரிவுமிக்க திட்டங்களை அமலாக்கி வருகிறது.  

கடனை திருப்பி செலுத்துவதற்கான தலைசிறந்த வழிமுறை வாய்ப்புகளை சம்பந்தப்பட்ட தரப்பு தக்க விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏதும் பிரச்சினை என்றால் பி.டி.பி.டி.என்னுடன் கலந்து பேசி பரிகாரம் காணலாம். பி.டி.பி.டி.என். உதவ ஆயத்தமாக இருக்கிறது. கழிவு சலுகை அனுகூலம் என்பது இறுதியாக 2022ஆம் ஆண்டில் அமலாக்கப்பட்டது. சம்பளத்தை பிடித்தம் செய்யும் வகையில் கடனை திருப்பிச் செலுத்தும் வண்ணம் அமலாக்கப்பட்டது. கடனை திருப்பி செலுத்துவதன் தொடர்பில் வழங்கப்படும். கழிவு கட்டண சலுகை பெற அனைவருக்கும் தகுதியுண்டு. அமலாக்கம் நடவடிக்கைக்கு உள்ளானவர்களும் முன் பணம் கட்டணம் பெற்றவர்களும்  இதில் அடங்குவர்.

முழுக் கடனை கட்ட விரும்புவர்கள் அல்லது குறைந்தபட்சம் 50 விழுக்காடு பாக்கி தொகையினை செலுத்த விரும்புபவர்கள் தங்களின் கடன்பாக்கி எவ்வளவு என்பதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு myPTPTN செயலி வழி அல்லது என்ற  பி.டி.பி.டி.என். அதிகாரத்துவ அகப்பக்கத்தின் வழி விண்ணப்பம் செய்து கொள்ளலாம். அல்லது இதர வழிமுறைகளின வாயிலாக கடனை திருப்பிச் செலுத்துவதற்கு முன்பாக பி.டி.பி.டி.என். சந்தை நிர்வாகியுடன் தொடர்பு கொள்ளலாம். சம்பளம் பிடித்தம் அல்லது Direct Debit வழி கடனை செலுத்த விரும்புபவர்கள்  myPTPTN செயலி அல்லது என்ற பி.டி.பி.டி.என் என்ற அதிகாரத்துவ அகப்பக்கம் வழி விண்ணப்பம் செய்யலாம். சம்பளப் பிடித்தம் வழி அல்லது Direct Debit கடனை செலுத்துபவர்கள் 15 விழுக்காடு கட்டண கழிவு பெற தகுதியானவர்கள். இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் 31 ஆம் தேதி வரையில் கடனை திருப்பி செலுத்தியவர்களாக இவர்கள் விளங்கவேண்டும்.myPTPTN செயலி மூலம் கடனை திருப்பி செலுத்துபவர்கள் 5 விழுக்காடு கழிவு சலுகை பெற தகுதியுடையவர்கள். இத்தகைய செயலியை துரிதமாகவும் பாதுகாப்பாகவும் நாம் பயன்ப்படுத்திக் கொள்ள முடியும்.  PTPTN.gov.my என்ற வழிமுறையின் வழி myPTPTN அகப்பக்கத்தை அலச முடியும்.

கழிவு கட்டண சலுகை சம்பந்தமான ஆக இறுதியான நிலவரங்கள் ஒவ்வொரு மாதம் இறுதியில் கடன் பெற்றவரின் கணக்கில் இடம் பெறும்.ஒவ்வொரு மாதம் 7ஆம் தேதி முதல் இந்த விவர அறிக்கையினை சரிபார்த்துக் கொள்ளலாம். கட்டண கழிவு சலுகையினை சம்பந்தப்பட்டவர்கள் துரிதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 20 விழுக்காடு கழிவு கட்டண சலுகையானது கடன் வாங்கியவருக்கு ஓர் அனுகூலமாக அமையும். 20 விழுக்காடு கழிவு கட்டண சலுகை ஒருங்கிணைக்கப்பட்டு 14 நாட்கள் சென்ற பிறகு கடன் கட்டியதற்கான கடிதம் வெளியிடப்படும்.கடனை செலுத்தியதற்கான கடித அறிக்கையினை myPTPTN செயலி அல்லது என்ற பி.டி.பி.டி.பின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக இயங்கிவரும் பி.டி.பி.டி.என். எதிர்பார்ப்பது என்னவெனில் கல்விக்கடன் பெற்றவர்கள் அரசாங்கத்தின் முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும். கடனை திருப்பிச் செலுத்தும்  பொறுப்பினை நிறைவாக நிறைவேற்றும்போது  எதிர்கால தலைமுறையினரின் கல்வி நலன்கள் காக்கப்படுவதே இதன் அர்த்தமாகும். கழிவுக் கட்டணம் ஊக்குவிப்பு திட்டமானது இவ்வாண்டு மே 31ஆம் தேதியன்று முடிவுக்கு வருகிறது. வழங்கப்படும் வாய்ப்பினை துரிதமாக பயன்படுத்திக் கொள்வீர். கடனை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையை உடனடியாக அமலுக்கு கொண்டு வருவீர்.

மக்கள் சேமிப்பில்  ஆர்வம் காட்டும் வண்ணம் பி.டி.பி.டி.என். SSPN என்ற கல்விச் சேமிப்பின் மூலம் அதிர்ஷ்டக் குலுக்கல் பிரச்சாரம் மார்ச் முதல்  தேதியிலிருந்து மே 31ஆம் தேதி வரை நீடிக்கும் ரொக்கப் பணம் பரிசு ஏறத்தாழ 50 ஆயிரம் வெள்ளி. 23 வெற்றியாளர்களுக்காக காத்துக் கிடக்கிறது. முதலீட்டாளர்களுக்கு நல்லதொரு திட்டத்தையும் வியூக திட்டத்தையும்  தேடித் தருவதில் பி.டி.பி.டி.என். எப்போதுமே மும்முரமாக  இருந்து வருகிறது. சம்பந்தப்பட்ட பிரச்சார இயக்கம் பெற்றோர்கள் மத்தியில் சேமிப்பு கலாச்சாரம் இருக்க வேண்டும் என்பதற்கு இதுவொரு தன்முனைப்பு தூண்டலாக இருக்கும். கணக்கு திறத்தல் அல்லது Simpan SSPN சேமிப்பை அதிகரித்தல் ஆகிய பணிகளை என்ற அகப்பக்கம் அல்லது செயலி மூலம் எளிதாக மேற்கொள்ளலாம்.

நரேன்குமாரின் கருத்து
காவல்துறையினை சேர்ந்த நரேன்குமார் பி.டி.பி.டி.என் கழிவு கட்டண சலுகையை வெகுவாக வரவேற்றார்.கல்வி கடனுதவி கழகம் வழங்கம் கழிவு சலுகை கடன் பெற்றவரின் நிதிச்சுமையினை குறைத்து உதவுகிறது.குறைந்த விகித்த்தில் கடனை முழுமையாக கட்டிமுடிப்பதற்கு இது உறுதுனையாக இருக்கிறது.சம்பளத்தை பிடித்தம் வழியில் கடனை திருப்பி செலுத்துவதற்கான கழிவு கட்டண சலுகையினை தாம் வரவேற்பதாக நரேன்குமார் தெரிவித்தார்.கடனை செலுத்துவதற்கான வழிமுறை எளிதாக இருக்கிறது.பி.டி.பி.டி.என் கடன் பெற்றோர் கடனை திருப்பி செல்லுத்துவது.இவர்களின் கடனை கடன் பெற்றவர்கள் அனைவரும் அரசாங்கம் வழங்கும் கழிவு கட்டண வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நரேன்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
        

சசிகலாவின் கருத்து 
பி.டி.பி.டி.என் என்ற கல்விக் கடனுதவி கழகம் வழங்கும் கழிவு கட்டண சலுகையினை மாணவரின் சுமையினை பெரிதும் குறைப்பதாக இருக்கிறது என்று சசிகலா வீரமோகன் கருத்துரைத்துள்ளார்.உயர்கல்வியினை நிறைவு செய்த பிறகு கடனை விரைவாக கட்டி முடிப்பதற்கு ஓர் ஊக்குவிப்பாக இருக்கிறது.myPTPTN செயலி மூலமாக தாம் முதன் முதலில் 5 விழுக்காடு கழிவு கட்டண சலுகை பெற்றதாகவும் பிறகு வழங்கப்பட்ட 20 விழுக்காடு கழிவு கட்டண சலுகையினை கொண்டு முழுக்கடனை கட்டி முடித்ததாக சசிகலா தெரிவித்தார். கடனை முற்றாக செலுத்திய பிறகு தமக்கு மாபெரும் மகிழ்ச்சி.20 விழுக்காடு கழிவு கட்டணம் ஒருவகையில் எனது நிதி சுமையினை பெருமளவில் குறைப்பதாக இருந்தது. குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு முன்கூட்டியே கடனை திருப்பி செலுத்துவதற்கு இது உறுதுணையாக இருந்தது. ஆக மொத்த கடன் தொகை செலுத்த வேண்டியதில் குறைவாக தொகை செலுத்துவது என்பது எங்களுக்கு இது ஒரு சிக்கனமாகும்.சசிகலா வீரமோகன் கேட்டுக்கொள்வது எல்லாம் என்னவென்றால்அரசாங்கம் வழங்கும் கழிவு கடன் ஊக்குவிப்பை பயன்படுத்திக் கொண்டு பி.டி.பி.டி.என்.னிடமிருந்து பெற்ற கடனை கட்டி முடித்திட வேண்டும். இது ஒருவகையில் நமது நிதி நிர்வாகம் சீராகவும் பாதுகாப்பாகவும் எளிதாகவும் அமைவதற்கு உறுதுணையாக இருக்கும்.

பி.டி.பி.டி.என். அனுகூலங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
- அனுஸ்யா கருத்து

பி.டி.பி.டி.என். வழங்கும் பொன்னான வாய்ப்புகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அனுஸ்யா கேட்டுக் கொண்டுள்ளார். எனக்கு 20 விழுக்காடு கழிவு கட்டணம் கிட்டியது. கடனை கட்டி முடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. பி.டி.பி.டி.என். மேற்கொள்ளும் ஒவ்வோர் ஆக்ககரமான நடவடிக்கைக்கு நாம் எல்லோருமே உறுதுணையாகவும் பெருந்துணையாகவும் இருக்க வேண்டும். உயர்கல்வியினை மேற்கொள்வதற்கு நிதிப் பிரச்சினை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று உன்னத நோக்கத்திற்கு நாம் அனைவரும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img