சைபர் ஜெயா, மே 19-
DXN Holdings Bhd (DXN) என்பது ஓர் உலகளாவிய சுகாதார மற்றும் உடல் நலத்தை சம்பந்தப்பட்ட நேரடி விற்பனை நிறுவனம். நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான டிஎக்ஸ்என் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் தணிக்கை செய்யப்படாத லாப விவரங்கள் அறிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட காலாண்டில் DXN குழுமம் திரட்டிய வருமானம் 405 மில்லியன் வெள்ளி. முந்தைய நிதியாண்டின் குறிப்பிட்ட காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 19.3 விழுக்காடு அதிகம். மும்முரமான விற்பனையானது வருமான அதிகரிப்பிற்கு வித்திட்டது என்றுதான் சொல்ல வேண்டும். லத்தின் அமெரிக்கா, மொரோக்கோ, இந்தியா ஆகிய நாடுகளில் உணவு மற்றும் குளிர்பானங்களின் விற்பனை வளர்ச்சி இதற்கிடையே டிஎக்ஸ்என் குழுமத்தின் வரிக்கு முந்தைய லாப அளவு மற்றும் வரிக்கு பிந்தைய லாப அளவும் இங்கே விவரிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட காலாண்டில் வரிக்கு முந்தைய லாப அளவு 112.4 பில்லியன் வரிக்கு பிந்தைய ஆதாய அளவு 57.9 மில்லியன்.
2023ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று முடிவுற்ற நிதியாண்டில் DXN குழுமம் உயர்வான அளவு வருமானத்தை ஈட்டியது. இதன் மதிப்பு 1.6 பில்லியன். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று முடிவுற்ற நிதியாண்டில் ஈட்டிய வருமானம் 1.2 பில்லியன்.
எனவே 1.6 பில்லியன் என்பது 28.8 விழுக்காடு வருமான அதிகரிப்பை பிரதிபலிக்கிறது. 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி நிதியாண்டிற்கான DXN குழுமம் ஈட்டிய வரிக்கு முந்தைய வருமானம் 455.5 மில்லியன். வரிக்கு பிந்தைய வருமான அளவு 289.3 மில்லியன். வருடாந்திர நிதியில் கணக்கிட்டால் இது 25.5 விழுக்காடு மற்றும் 17.9 விழுக்காடு என்று எடுத்துக் கொள்ளலாம். DXN நிறுவன மற்றும் நிர்வாகப் பொறுப்புகளுக்கு அப்பாற்பட்ட தலைவர் டத்தோ லிம் சியோ ஜின் இங்கே அத்தியாவசிய அம்சங்களை பகிர்ந்து கொள்கிறார்.
2023ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதிக்கான நிதியாண்டில் நிகழ்ந்த நிதி அடைவு நிலை குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம். எங்களின் உணவு மற்றும் குளிர்பானங்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. உலகளாவிய நிலையில் எங்களின் Coffee Products உற்பத்திப் பொருட்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோகமான தேவை ஏற்பட்டுள்ளது. எங்களின் நோக்கம் எல்லாம் முன்னோக்கியே செல்கிறது.
எங்களின் உத்வேகத்தை நாங்கள் நிலைநாட்ட இயலும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களின் உற்பத்திப் பொருட்கள் விரிவாக்கம் கண்டு வருகிறது. நடப்பு மற்றும் புதிய சந்தைகளில் எங்களின் பிரவேசத்தை பலப்படுத்தி வருகிறோம். தலைசிறந்த சேவையினை தோற்றுவிப்பது மற்றும் வாடிக்கையாளர் பெருமக்களின் தேவையினை நிறைவு செய்து மனநிறைவினை ஏற்படுத்துவது என்பது எங்களின் கடமையாகும். எங்களின் வர்த்தக வியூகத்தில் இத்தகைய அணுகுமுறையானது தொடர்ந்து முன்னணி அம்சமாக விளங்கும். தொடர்ந்து வளர்ச்சியினை நோக்கி பயணம் செய்வதற்கும் எங்களின் பங்குதாரர்களுக்கு ஒரு மதிப்பான நிலையினை தோற்றுவித்து தருவதில் நாங்கள் மிகவும் உற்சாகம் கொண்டுள்ளோம்.
DXN பற்றிய விவரங்கள்
DXN நிறுவனம் முதலீட்டு துறைகளிலும் நிர்வாகச் சேவைகளிலும் பிரதான ஈடுபாடு காட்டி வருகிறது. இதன் துணை நிறுவனங்கள் உடல்நலம் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பயனீட்டாளர் உற்பத்திப் பொருட்கள், நேர்முக விற்பனை ரீதியில் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறது.
DXNயின் நேரடி விற்பனை முறையினை சார்ந்தவர்கள், அதன் உறுப்பினர்கள், பொருள் கையிருப்பாளர்கள், வெளியே உள்ள விற்பனை ஏஜென்சிகள் ஆகியோர் இதர உறுப்பினர்களுக்கும் பயனீட்டாளர்களுக்கும் இத்தகைய பொருட்களை விற்பதும் விநியோகிப்பதும் இவர்களின் பணியாகும். மேலும் விவரம் வேண்டுமானால் https://www.dxn2u.com என்ற அகப்பக்கத்தை அலசலாம். DXN Holdings Bhd சார்பாக இமேஜ் ஜீவா கம்யுனிகேஷன் செண்டிரியான் பெர்ஹாட் இத்தகைய விவரங்களை வெளியிட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்