வெள்ளி 13, டிசம்பர் 2024  
img
img

யுபியு இணையத்தள வழியிலான பல்கலைக்கழகத்தில் நுழைவு விண்ணப்பங்கள்
புதன் 10 மே 2023 10:11:00

img

யுபியு இணையத்தள வழியிலான பல்கலைக்கழகத்தில் நுழைவு விண்ணப்பங்கள்

உயர்கல்வி இலாகாவின் மாணவர் பல்கலைக்கழக நுழைவு பிரிவின் மூலம் உயர்கல்வி அமைச்சு பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்களை கையாண்டு வருகிறது. UPU Online என்ற இணையத்தளத்தின் வழி அமைச்சு விண்ணப்பங்களை ஒருங்கிணைப்பதும் பரிசீலிப்பதும் மற்றும் மாணவர்களின் முறையீட்டை கவனத்தில் எடுத்துக் கொள்வதும் போன்ற நடவடிக்கைகளை உயர்கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

பொதுப் பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக், சமுதாயம் சார்ந்த கல்லூரிகள், பொது தன்னாற்றல் பயிற்சி நிலையம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். UPU Online என்பது விண்ணப்பதாரர்களுக்கான ஒருங்கிணைப்பு முறையாகும். இதன்வழி அடிப்படை பயிற்சி, சான்றிதழ், டிப்ளோமா, இளநிலை பட்டப்படிப்பு ஆகியவற்றின் வாய்ப்புகளுக்கு மாணவர்கள் இந்த ஒரே UPU Online வழி விண்ணப்பம் செய்யலாம். அதிகமான மாணவர்கள் தங்களின் மேற்கல்வியினை தொடர்வதற்கும் தாங்கள் விரும்பும் பட்டப்படிப்பை தேர்வு செய்வதற்கும் இத்தகைய முறை இவர்களுக்கு ஏதுவாக இருக்கிறது.

எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் கல்வியினை நிறைவு செய்தவர்கள் பொதுப் பல்கலைக்கழகங்களின் பொது  தன்னாற்றல் பயிற்சி மையத்தில் சேருவதற்கும் தங்களின் விண்ணப்பங்களை UPU Online இணையத்தள வழிமுறை மூலம் முன்மொழியலாம். இதற்கான அகப்பக்க விவரம் இதுதான். <https://upu.mohe.gov.my> இதன் தொடர்பிலான நிபந்தனைகள் மற்றும் பிரத்தியேக நிபந்தனைகள் பற்றிய விவரங்களையும் தகவலையும் BKPA (e Panduan) என்ற அதிகாரப்பூர்வ அகப்பக்கம் மற்றும் UPU Pocket என்ற செயல் வழியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

2023/2024ஆம் கல்வியாண்டிற்கான Fasa Permohonan UPU Online இரண்டு கட்டங்களாக திறக்கப்படும். UPU Online (R) Fasa 1 என்ற இணையத்தளத்தில் விண்ணப்பங்களை மேற்கொள்வதற்கும் இவ்வாண்டு பிப்ரவரி 7ஆம் தேதியிலிருந்து  மார்ச் 28ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் கட்டத்தின் எஸ்பிஎம் தகுதி கொண்ட மாணவர்களிடமிருந்து வந்த மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 91,700 ஆகும். எஸ்டிபிஎம் அல்லது இதற்கு இணையான கல்வித்தகுதி கொண்டவர்களிடமிருந்து வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 104,821 ஆகும்.

இணையத்தள வசதிகளை பொறுத்தவரையில் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள விண்ணப்பதாரர்களின் சிரமங்களை உயர்கல்வி அமைச்சு கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட விண்ணப்பம் 26 நாட்களுக்கு நீடிக்கும். முதல் கட்டத்தின்போது விண்ணப்பம் செய்யாதவர்கள் இரண்டாவது கட்டத்தின் போது விண்ணப்பிக்கலாம்.

2023ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி முதல் (நண்பகல் 12 மணிக்கு) 2023ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி வரை இயங்கி வரும். இது சம்பந்தமாக பிரத்தியேகப் பேட்டி அல்லது குறிப்பிட்ட சோதனை எல்லாம் இருக்காது. Fasa pengemaskinian UPU Online (R) என்ற ஆக இறுதி நிலவரம் கொண்ட எஸ்பிஎம் கல்வித் தகுதிக்கான திட்டமானது வரும் ஜூன் 5ஆம் தேதி முதல் ஜூன் 9ஆம் தேதி வரை இயங்கி வரும். இந்த காலகட்டத்தின் போது எஸ்பிஎம் தகுதி கொண்டவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை மையமாக வைத்து தங்களின் முடிவில் திருத்தம் செய்து கொள்ளலாம்.

இதற்கிடையே எஸ்டிபிஎம் அல்லது இதற்கு இணையான கல்வித் தகுதி கொண்டவர்கள்  Fasa Pengemaskinian UPU Online (R) என்ற திட்டத்தின் கீழ் ஆக இறுதி நிலவரங்களை சேர்த்துக் கொள்ளலாம். 2023ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை இதற்கான வாய்ப்பு வழங்கப்படும். பிரத்தியேகப் பேட்டி அல்லது குறிப்பிட்ட சோதனை இல்லாத கல்வித் திட்டங்களில் எஸ்டிபிஎம், மெட்ரிகுலேசி, அடிப்படை பயிற்சி கல்வித்திட்டம் பெற்றவர்கள் தங்களின் ஆக இறுதி நிலவரங்களை சேர்த்துக் கொள்ளலாம். டிப்ளோமா அல்லது இதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் தங்களின் கல்வி சம்பந்தமான ஆக இறுதி நிலவரங்களை சேர்த்துக் கொள்ள முடியும். அதோடு ஆவணங்களை பதிவேற்றம் செய்து கொள்ள மட்டும் அனுமதிக்கப்படும்.
2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்தாவது வாரத்தில் எஸ்பிஎம் படிப்பை முடித்தவர்களுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை நான்காவது வாரத்தில் புதிய மாணவர்கள் பதிவு மேற்கொள்ளப்படும். எஸ்டிபிஎம் அல்லது இதற்கு இணையான படிப்பினை முடித்தவர்களுக்கான முடிவுகள் 2023 செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம். 2023ஆம் ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் புதிய மாணவர்களுக்கான பதிவு நடைபெறலாம். விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு இறுதியானதும் திட்டவட்டமான ஒன்று. மாற்றத்திற்கான விண்ணப்பம் அனுமதிக்கப்படாது. வாய்ப்பு கிடைக்காதவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முறையீடு செய்யத் தகுதி உண்டு.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img