வியாழன் 12, டிசம்பர் 2024  
img
img

Simpan SSPN சேமிப்புத் திட்டத்தின் மூலம்
புதன் 28 டிசம்பர் 2022 15:18:01

img

கோலாலம்பூர், டிச. 28-

பி.டி.பி.டி.என். என்ற தேசிய கல்விக் கடனுதவிக் கழகம் நாட்டின் முதன்மையான உயர்கல்வி சேமிப்பு நிறுவனமாக விளங்குகிறது. Simpan SSPN என்ற தேசியக்கல்வி சேமிப்புத் திட்டத்தின் வழி சேமிப்பு வழிமுறைகளுக்கு வகை செய்கிறது.

கடன் சுமையால் மலேசிய சமூகம் பரிதவிக்காமல் இருப்பதற்கு உதவி புரிவது பி.டி.பி.டி.என். நோக்கமாகும். தங்களின் பிள்ளைகளின் கல்வி எதிர்காலத்திற்கும் முன்கூட்டியே நிதி திட்டமிடுதல் மற்றும் சேமிப்பு கலாச்சாரத்தை அமல்படுத்துதல் இக்கழகத்தின் நோக்கமாகும். முன்கூட்டியே நிதி திட்டமிடுதல் என்பது பட்டதாரிகள் எதிர்காலத்தில் கல்விக்கடனை அதிகம் சார்ந்திராக நிலை தோன்றும். கல்விக்கடனை செலுத்துவது அதிக சுமையாக இருக்காது. கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு உதாரணமாக வீடு வாங்குவதற்கும் அந்திம காலத்திற்கு சேமிப்பதற்கும் தங்கள் பிள்ளைகளுக்கான கல்வி நிதியினை நன்கு திட்டமிடுவதற்கும் சம்பளம் பயன்படுவதாக இருக்கும்.

பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் நிலவும் இக்காலகட்டத்தில் பி.டி.பி.டி.என். அனுகூலங்கள் தொடர்ந்து  பொருத்தமான ஒன்றாக விளங்குவதோடு மக்களின் தேர்வாக இருக்கும். Simpan SSPN Prime வழங்கும் பல்வேறு சிறப்புகள் மற்றும் அனுகூலங்கள் பி.டி.பி.டி.என். சேமிப்புத் திட்டங்களுக்கு அஸ்திவாரமாக திகழ்கிறது.

இத்தகைய அனுகூலங்கள் பின்வருமாறு :
1. வருடத்திற்கு 8,000 வெள்ளி வரையிலான வரிவிலக்கு
2. 1,000 வெள்ளி மற்றும் அதற்கும் கூடுதலான சேமிப்பு வைத்திருப்போருக்கு இலவசமான தக்காபுல் காப்புறுதி வழங்கப்படுகிறது.
3. நல்லதொரு லாப ஈவு தொகை
4. தகுதியான ஒரு குடும்பத்திற்கு 10,000 வெள்ளி வரையிலான மானியம்
5. சேமிப்பிற்கு அரசாங்கத்தின் உத்தரவாதம்.
6. பி.டி.பி.டி.என். கல்விக் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்யத் தகுதி.

Simpan SSPN Prime என்ற திட்டத்தை போன்ற Simpan SSPN Plus என்ற திட்டம் ஒரே மாதிரியான பிரத்தியேக அனுகூலத்தை கொண்டவை மானியம் பெறும் சலுகை மட்டும் இதில் விலக்கு.  Simpan SSPN Plus mempunyai bulanan serendah RM 30 sebulan. Simpan SSPN Plus கூடுதலான பிரத்தியேகமான அனுகூலங்களை வழங்குவதுதான் இதில் காணப்படும் விசேஷ அம்சம். தக்காபுல் காப்புறுதி அனுகூலத்தை பெறுவதில் ஒருவர் மூன்றில் ஒரு  நிறுவனத்தை தேர்வு செய்யலாம். Hong Leong MSIG Takaful Berhad, Great Eastern Takaful, Takaful ஆகிய மூன்று நிறுவனங்கள் இவை.

வழங்கப்படும் கூடுதல் அனுகூலங்கள் பின்வருமாறு :
1. தக்காபுல் காப்புறுதி 12 லட்சம் வரையிலான நீங்கள் தேர்வு செய்யும் நிறுவனத்தை பொறுத்து இத்தொகை விகிதம்                   நிர்ணயிக்கப்படலாம்.
2. கடுமையான நோய் வாய்ப்பட்டவருக்கு இரண்டு லட்சம் வெள்ளி வரையில் அனுகூலம்.
3. பிரேதத்தை அனுப்பி வைப்பதற்கு 10,000 வெள்ளி வரையிலான உதவித்தொகை.
4. இறுதிச்சடங்கு மரண சகாய நிதியினை நிர்ணயிப்பது தக்காபுல் நிறுவனத்தை பொறுத்த விஷயம்.
5. கடுமையான நோய்வாய்ப்பட்டவருக்கு அனுகூலம்.
6. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவருக்கு அலவன்ஸ்.
7. 69 வயது வரை முதலீட்டாளருக்கு தக்காபுல் காப்புறுதி அனுகூலம். சம்பந்தப்பட்ட தக்காபுல் நிறுவனத்தை பொறுத்த விஷயம்.

சேமிப்பில் முதலீடு செய்தவர்கள், வழங்கப்படும் பல்வேறு வகை அனுகூலங்களை  பயன்படுத்தும் வாய்ப்பினை தவற விடக்கூடாது. இதனை முன்னிட்டு பி.டி.பி.டி.என். முதலீட்டாளர்களின் கவனத்தை மும்முரமாக ஈர்த்து வருகிறது. பறைசாற்றும் பிரச்சாரம் பல முனைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேமிப்பு கலாச்சாரத்தை மலேசியர்கள் தொடர்ந்து போற்றிவர வேண்டும். பல்வேறு பரிசுகளை பெறுவதில் வெற்றியடைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. SSPN Simpanan என்பது 8,000 வெள்ளி  வரையிலான வரிவிலக்கு வழங்கும் ஒரு திட்டம்.

வருடந்தோறும் வரிவிலக்கு 8,000 வெள்ளி வரையில். இதில் இரண்டு வகை உண்டு. கணவன் - மனைவியும் தனித்தனியாக வருமானவரி செலுத்துபவர்களாக இருந்தால் இருவரும் தங்களின் பிள்ளைகளுக்காக தனித்தனியாக சேமிப்புக் கணக்கை வைத்துக் கொள்ளலாம். கூடுதல் பட்சமாக 8,000 வெள்ளி வரிவிலக்கு சலுகை உண்டு. சேமிப்பு வைத்துக் கொள்ளும் பெற்றோர்கள் 11,000 வெள்ளி வரை வரிவிலக்கு அனுகூலம் பெற அருகதையுடையவர்கள்.  Skim Pencen திட்டத்தை தேர்வு செய்யும் முதலீட்டாளர்கள் 15,000 வெள்ளி வரையில் வரிவிலக்கு பெற தகுதியுடையவர்கள்.

நடப்பு ஆண்டில் கொண்டுள்ள சேமிப்பின் அளவை அடிப்படையாகக் கொண்டு  வரிவிலக்கு அனுகூலம் வழங்கப்படுகிறது. வரி விலக்கு மற்றும் வழங்கப்படும் டிவிடென் ஆகிய அனுகூலங்களை கூட்டிப் பார்த்தால், Simpan SSPN  முதலீட்டாளர் பெறும் லாபம் மூன்று விழுக்காட்டிற்கும் மேல் Simpan SSPN திட்டத்தில் விரைவாக முதலீடு செய்யுமாறு மலேசியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். முதலீடு செய்து வரி விலக்கு பயன்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தங்களின் திட்டங்களை முன்னிலைப்படுத்தும் வண்ணம் பிற நிதி நிறுவனங்கள் பல பரிசுத் திட்டங்களை வழங்கி செயல்பட்டு வருகிறது. பி.டி.பி.டி.என். இதில் பின்தங்கி விடவில்லை. இப்போது இது வெற்றிநடை போட்டு வருகிறது.

Kempen Cabutan Wow என்பது வருடாந்திர மகத்தான திட்டம். 25ஆம் ஆண்டு சிறப்புக் குலுக்கல் என்பது பி.டி.பி.டி.என்.னின் வெள்ளி விழாவிற்கு கட்டியம் கூறுவதாக இருக்கிறது. வழங்கப்படும் வெகுமதிகள் கவர்ச்சிகரமானவை. ஏறத்தாழ இதன் மொத்த பண மதிப்பு ஏறத்தாழ 10 லட்சம் வெள்ளி. 350 வெற்றியாளர்களுக்கு இத்தொகை காத்துக் கிடக்கிறது. வெள்ளி விழாவினை முன்னிட்டு சிறப்பு குலுக்கல் திட்டம் வலம் வருகின்றது. முதலாவது பரிசு மெர்சிடிஸ் பென்ஸ் கார். இரண்டாவது பரிசு ரொக்கப் பணம் ஒரு லட்சம். மூன்றாவது பரிசு ரொக்கம் 50,000. ஆறுதல் பரிசும் உண்டு. அடுக்கடுக்காக பல்வேறு பரிசுகள்.

அனைத்து மலேசியர்களும் தங்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்காக சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும். இச்சேமிப்பு கணக்கு வழி பல்வேறு பிரத்தியேக நன்மைகளும் அனுகூலங்களும் வழங்கப்படுகிறது. my PTPTN என்ற செயலி வாயிலாக Simpan SSPN இல் எளிதாக, துரிதமாக மற்றும் பாதுகாப்பாக கணக்கு திறக்கலாம்.

கல்வியில் தங்களின் பிள்ளைகள் வெற்றி நடைபோட வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள் பிள்ளைகள் சிறு வயதாக இருக்கும்போதே சேமிப்பினை தொடங்க வேண்டும். உங்களின் பிள்ளைகளை வெற்றி வீரர்களாக விளங்க வைப்பீர். உங்களுக்கான அரிய வாய்ப்பு இதுதான்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img