பொறுப்புணர்வோடு உருவாக்கப்பட்ட பட்ஜெட்
2023 ஆம் ஆண்டுக்கான பேரா மாநில அரசின் வரவு செலவு திட்டத்தின் 1.19 பில்லியன் ரிங்கிட்டில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 395 மில்லியன் ரிங்கிட்டும் (33.2%) நிர்வாகச் செலவுக்கு 794 மில்லியன் ரிங்கிட்டும் (66.8%) ஒதுக்கப்பட்டுள்ளது.
பேரா மாநில அரசின் பொருளாதார நிதி நிலைமை சீராக இருந்த போதிலும் நமது நாட்டில் மட்டுமின்றி உலக அளவிலும் விலைவாசி உயர்வும் பொருளாதார மந்தமும் மக்களின் வாழ்க்கையில் ஓர் அழுத்தத்தைக் கொண்டு வருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு இந்த வரவு செலவின் முக்கியத்துவத்தையும் எண்ணி மாநில அரசில் உள்ளவர்களோடு தானும் சேர்ந்து பொறுப்புணர்வுடன் இந்த வரவு செலவு திட்டம் வரையப்பட்டதாக மந்திரி புசார் தெரிவித்தார்.
அரசாங்க ஊழியர்களுக்குச் சிறப்பு உதவி நிதி (போனஸ்)
மாநில அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான சேவையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒன்றரை மாதச் சம்பளத்தை அல்லது அதிகபட்சம் வெ. 2,000 சிறப்பு உதவி நிதியாக வழங்கப்படுகிறது.
விவாசாயத் துறை
பேரா மாநில அரசின் பேரா செஜாஹ்தெரா 2030 திட்டத்தில் விவசாயத் துறையை மேம்படுத்துவதும் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக அமைகிறது. அதன் அடிப்படையில் மக்களின் தேவைக்கும் வேண்டுகோளுக்கும் ஏற்றவகையில் உணவுப்பொருள்கள் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்யும். எனவே, அதன் தொடர்பான அரசு துறைகளுக்கு வெ. 55 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறை
விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் மாநில அரசு கீழ்க்காண்பவைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது:
அ) விளையாட்டுத் திடம் மற்றும் உபகரணங்களின் வாடகை :வெ. 1.4 மில்லியன்
ஆ) அரசு ஊழியர்களின் சமூகநல விளையாட்டுச் சங்கத்திற்கு : வெ. ஆறு லட்சம்
இ) பேரா மாநில விளையாட்டுத் திட்டங்கள் : வெ. ஐந்து இலட்சம்
ஈ) பேறு குறைந்தோர் விளையாட்டுகளுக்கு : வெ. நான்கு இலட்சம்
உ) மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் : வெ. 12 இலட்சம்
பொதுப்பணித் துறை
பொதுப்பணித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒன்பது கோடி வெள்ளிக்கான விவரம் :
அ) சாலை மற்றும் பாலம் : மூன்று கோடி ஐம்பது இலட்சம் வெள்ளி
ஆ) மேம்பாட்டுத் திட்டம் : ஐந்து கோடி ஐம்பது இலட்சம் வெள்ளி
சமூகநல இலாகா
சமூக நல இலாகாவுக்கு நான்கு கோடியே 23 இலட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று கோடியே 64 இலட்சம் வெள்ளி பொதுஉதவிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பி40 மக்களுக்கு வழங்கப்படும் பேரா செஹ்ஜாத்ரா அட்டைக்கு இரண்டு கோடியே 52 இலட்சம் வெள்ளியும் உணவுப் பொட்டலம் வழங்கும் திட்டத்திற்கு 50 இலட்சம் வெள்ளியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மரண சகாய நிதிக்கு 40 இலட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு சாரா இயக்கங்கள்
அரசு சாரா இயக்கங்களுக்கு 10 இலட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் உதவிநிதி
பாலர் பள்ளி, தேசிய இடைநிலைப்பள்ளி, தமிழ் மற்றும் சீனப்பள்ளிகள், தனியார் சீனப்பள்ளி மாணவர்களுக்கு 50 இலட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி மாணவர்களுக்கு உதவிநிதியாக 62 இலட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
புறநகர்களுக்கு பேருந்து போக்குவரத்து வசதி
புறநகர் பகுதிகளான மஞ்சோங், லாருட் மாத்தாங், செலாமா, கோலக்கங்சார், பத்தாங் பாடாங் ஆகிய மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு 21 இலட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடு :
பேரா மாநிலத்திலுள்ள 59 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சிறுசிறு திட்டங்களைச் செய்வதற்கும் தலா மூன்று இலடம் வெள்ளியும் சட்டமன்ற சேவை மையத்திற்கு மாதம் 7,000 வெள்ளியும் வழங்கப்படும். அதே வேளையில் அரசு ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு கூடுதலாக மூன்று இலட்சம் வெள்ளியும் வழங்கப்படும்.
சுகாதாரம்
மாநிலத்தின் சுகாதார மேம்பாட்டுக்காக நடத்தப்படும் திட்டங்களுக்கு இரண்டு இலட்சம் வெள்ளியும் மனநல மேம்பாட்டு திட்டங்களுக்கு மூன்று இலட்சம் வெள்ளியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மேம்பாடு
மாநிலச் சுற்றுலா மேம்பாட்டுக்காக 80 இலட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர் மேம்பாடு
இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இரண்டு கோடியே 16 இலட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்