உலு சிலாங்கூர், டிச. 17-
பத்தாங் காலியில் நேற்று அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவு சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றி அனைத்து வகை வெளிப்புற பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நாசுதியன் இஸ்மாயில் கூறினார்.
அதே சமயம், அம்முகாம் தளங்கள் சட்டபூர்வமாக செயல்படுகின்றனவா என்பதும் சோதனையிடப்படும் என பாதிக்கப்பட்ட பகுதிக்கு வருகை மேற்கொண்டிருந்த சமயம் அவர் நிருபர்களிடம் தெரிவித்தார். இதனிடையே, சம்பந்தப்பட்ட கோ தோங் ஜெயா பகுதியில் முகாமிட்டிருந்தவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதி செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர்,
அங்கு முகாமிட்டிருந்தவர்கள் 94 பேர் என்பதை பதிவு காட்டினாலும் அது சரியானதாக இல்லாதிருக்கலாம். காரணம், ஒரு குடும்பத்தில் மூவர் அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் சார்பாக ஒருவர் மட்டும் பெயரை பதிந்திருக்க வாய்ப்புள்ளது என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மற்றொரு நிலவரத்தில், நிலச்சரிவிற்கான காரணத்தைக் கண்டறிய தடயவியல் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சிலாங்கூர் அடிப்படை வசதிகள், விவசாயக் குழுவின் தலைவர் இஸாம் ஹாஷிம் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்