img
img

பத்தாங் காலி நிலச்சரிவு:
வெள்ளி 16 டிசம்பர் 2022 15:46:27

img

உலுசிலாங்கூர், டிச. 17-

பள்ளி விடுமுறை தொடங்கிய நிலையில், கேமரன் மலை - பத்தாங் காலி சாலையில் அமைந்துள்ள கோ தோங் ஜெயா பண்ணை பகுதியில் முகாமிட்டிருந்த சுமார் 100 பேர் நேற்று அதிகாலை 2.00 மணியளவில் நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கினர். நேற்று பகல் ஒரு மணி வரையில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 16 ஐ எட்டியது. சுமார் 94 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இன்னும் 17 பேரை காணவில்லை.

தலைநகர், ஜாலான் ஈப்போ, 4 ஆவது மைலில் அமைந்துள்ள மன் சூங் தேசிய வகை சீன ஆரம்பப்பள்ளியின் 20 ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர் உட்பட இன்னும் ஏராளமானவர்கள் அங்கு முகாமிட்டிருந்தனர் என  போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அங்கு விடுமுறைக்காக செல்வதற்கு முன்னதாக அவ்விடம் பாதுகாப்பானது என தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாக அப்பள்ளியின்  பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் யூ சின் ஓங் கூறினார்.

முகாமிடும் ஆர்வம் உள்ளவர்கள் அடிக்கடி வந்து செல்லும் அப்பகுதி சம (தட்டையான) நிலத்தில் இருப்பதாக தங்களிடம் கூறப்பட்டது என குறிப்பிட்ட அவர், இப்பள்ளியைச் சேர்ந்த சுமார் 20 ஆசிரியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கடந்த மூன்று தினங்களாக அங்கு முகாமிட்டிருந்ததாகவும் சம்பவம் நடந்த தினமான நேற்றுக் காலை 10.00 மணிக்கு அவர்கள் வீடு திரும்புவதாக இருந்தது என்றும் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் முகாமிட்டிருந்த இடத்தின் எதிர்புறத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. சாலையோரமிருந்து மண் சரிந்து, முகாம்களையும் இடித்துத் தள்ளியது. அதில் இருந்த பலர் மண்ணோடு புதையுண்டனர். உலுயாம்பாரு போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் அறிய வந்திருந்தபோது யூ நிருபர்களிடம் பேசினார். தங்கள் பள்ளியைச் சேர்ந்த பலர் இச்சம்பவத்தின்போது சுற்றியுள்ளவர்களால் காப்பாற்றப்பட்ட தகவலையும் அவர் தெரிவித்தார். அப்பகுதியில் உள்ள ரிவர் ஹில்டாப், ஃபார்ம்வியூ, ரிவர் சைட் ஆகிய மூன்று முகாம்களும் நிலச்சரிவில் புதையுண்டன.

இங்கு இதுவே முதல் சம்பவம்

இப்பகுதியில் இதுவே இம்மாதிரியான முதல் நிலச்சரிவுச் சம்பவம் என உலுயாம் கிராமத்து தலைவர் நபில் சலேஹாட் கூறினார்.
கடைசியாக 2016 இல் செராண்டாவில் ஒரு நிலச்சரிவுச் சம்பவம் நிகழ்ந்தது. ஆனால், இதைவிட அது மோசமில்லை என்று அவர் சொன்னார். இப்பகுதியில் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

என் காலடியில் பூமி நகர்ந்தது

தாங்கள் முகாமிட்டிருந்த பகுதியில் தன் காலடியில் பூமி நகர்வதை தாம் உணர்ந்ததாக இச்சம்பவத்திலிருந்து தப்பிய, அப்பகுதியில் முகாமிட்டிருந்த 57 வயது ஆடவர் கூறினார். நாங்கள் அனைவரும் உறக்கத்தில் இருந்தபோது அதிகாலை 2.00 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்தது. அப்போது கும்மிருட்டாக இருந்ததால் என்னதான் நடக்கிறது என்பதை எங்களால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை என்று லியோங் ஜிம் மெங் தெரிவித்தார்.

தன் குடும்பத்துடன் அவர் இங்கு முகாமிட வந்திருந்தார். நாங்கள் இங்கு தங்கியிருந்த சில நாட்களாக தூறல் மட்டுமே இருந்ததே தவிர கனமழை எதுவும் கிடையாது. எனவே, நிலச்சரிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றார் அவர். தாங்கள் தங்கியிருந்த முகாமும் மண்ணில் புதையுண்டது. இருந்தாலும், தாங்கள் அங்கிருந்து மீண்டு அருகில் இருந்த வாகன நிறுத்துமிடத்திற்கு தப்பிச்சென்றதாகவும் லியோங் விவரித்ததாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

இளைய சகோதரர் இறந்தார்

தன் இளைய சகோதரர் ஒருவர் இச்சம்பவத்தில் மரணமடைந்த அதே சமயம், மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக 22 வயது தே லின் சுவான் கூறினார். நிலச்சரிவு நிகழும்போது தங்கள் முகாமிற்கு கீழே மண் அசைவதை தங்களால் உணர முடிந்தது என்றும் தாமும் தன் தாயாரும் பாதுகாப்பாக வெளியே வர முடிந்தது என்றும் அவர் சொன்னார்.

12 பேர் தப்பினோம்

ஃபாதர்ஸ் ஓர்கெனிக் ஃபார்ம் முகாம் தளத்திலிருந்து சம்பவத்தின்போது தாமும் இதர 12 ஊழியர்களும் தப்பிக்க முடிந்ததாக தாவ்ன் யுக் (35) கூறினார்.  

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
2023ஆம் ஆண்டு பட்ஜெட் பி.டி.பி.டி.என். கடன் பட்டவர்களுக்கான அனுகூலங்கள்

நிதிப் பிரச்சினை காரணமாக எந்தவொரு மாணவரும் உயர்கல்வி நிலையத்தில் இயலாத

மேலும்
img
பிரதான சந்தை தளத்தை அடிப்படையாகக் கொண்ட DXN HOLDINGS

2023ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதியன்று Bursa Malaysia Securities

மேலும்
img
யுபியு இணையத்தள வழியிலான பல்கலைக்கழகத்தில் நுழைவு விண்ணப்பங்கள்

உயர்கல்வி இலாகாவின் மாணவர் பல்கலைக்கழக நுழைவு

மேலும்
img
கவர்ச்சிகரமான அதிர்ஷ்டக்குலுக்கல் திட்டம்

2023 எஸ்எஸ்பிஎன் கல்வி சேமிப்பு கவர்ச்சிகரமான பரிசுகள் உண்டு

மேலும்
img
Simpan SSPN சேமிப்புத் திட்டத்தின் மூலம்

8,000 வெள்ளி வரையிலான வரிவிலக்குச் சலுகை பி.டி.பி.டி.என். 25ஆம் ஆண்டு சிறப்புக்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img