புத்ராஜெயா, டிச. 16-
தேசிய கல்வித் துறையை மேம்படுத்த 7 முக்கியக் கூறுகளில் கல்வியமைச்சு கவனம் செலுத்தும் என்று கல்வியமைச்சர் பாட்லினா சிடேக் நேற்று கூறினார். கல்வியமைச்சராகத் தாம் பொறுப்பேற்ற பிறகு பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று பிரச்சினைகளைக் கேட்டறிந்ததாகவும் கல்வித்துறையில் தொடர்புடையவர்கள், ஆசிரியர் சங்கம், தலைமையாசிரியர்கள் மன்றங்கள் ஆகியவற்றுடன் சந்திப்பு நடத்தப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
அதன் பின் நாட்டின் கல்வித்துறையை மேம்படுத்துவதற்கு 7 முக்கிய கூறுகள் அடையாளம் காணப்பட்டு, அதன் வாயிலாக கல்வியமைச்சு நடவடிக்கைகளை தொடரவுள்ளது என்று நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பாட்லினா சிடேக் கூறினார். 7 முக்கியக் கூறுகளில் கல்வி அமைச்சுடனான தொடர்பு முறை முதன்மை வகிக்கிறது. ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உள்ள இடைவெளி, பகடிவதை உட்பட பல பிரச்சினைகளை கையாள பொது புகார் பிரிவு, வாடிக்கையாளர்களுக்கான முகப்பிடம் ஆகியவை அதில் அடங்கும்.
இதை தவிர்த்து பள்ளிகளில் நிகழும் பாலியல் தொல்லை, பகடிவதை, குண்டர் கும்பல் உட்பட பல பிரச்சினைகளை தீர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். பள்ளிகளில் பயிலும் பி40 மாணவர்களின் ஏழ்மையை போக்குவது, கல்வி பயில்வதில் இருந்து எந்த மாணவர்களும் விடுபடக்கூடாது, பள்ளி ஆசிரியர்களின் நலன் பாதுகாப்பது, பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது குறிப்பாக சபா, சரவாக்கில் பள்ளிகளில் அதிக கவனம் செலுத்துவது, இணைய கல்வி முறையை ஊக்குவிப்பது ஆகியவை அந்த முக்கிய கூறுகளில் அடங்கும் என அவர் விவரித்தார்.
ஆக மொத்தத்தில் பாலர் பள்ளி முதல் படிவம் 5 வரையிலான மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் என அனைத்திலும் கல்வியமைச்சு கவனம் செலுத்தும் என்று அவர் பாட்லினா சிடேக் கூறினார். கல்வியமைச்சின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் துணை கல்வியமைச்சர் லிம் ஹுய் யிங், தலைமைச் செயலாளர் டத்தோ யுஸ்ரான் ஷா, தலைமை இயக்குநர் டத்தோ பாக்ரூடின் கசாலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்