கோலாலம்பூர், டிச. 16-
2020 சபா தேர்தலின் போது அப்போதைய பிரதமர் மொகிதீன் யாசின் அம்னோவுக்கு கோடிக்கணக்கான வெள்ளி உதவினார் என தாம் கூறியது தொடர்பில் அனுவார் மூசா கடந்த வாரம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்.ஏ.சி.சி.) வாக்குமூலம் வழங்கினார்.
தம்முடைய கூற்றின் தொடர்பில் எம்.ஏ.சி.சியிடம் முழுவிளக்கம் அளித்ததில் தமக்கு மகிழ்ச்சி என கூறிய அனுவார், அந்த நிறுவனத்திற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க தயார் என்றார். என்ன நிகழ்ந்தது என்ற முழுகதையை அவர்களிடம் கூறினேன். அவர்களுக்கு நன்றி கூறினேன். எம்.ஏ.சி.சியுடன் தொடர்ந்து ஒத்துழைப்பேன். அது எனது கடமை என்று அவர் இங்குள்ள முவாஃபாக்காட் நேஷனல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சபாவில் தாம் தங்கியிருந்த போது கோடிக்கணக்கான வெள்ளியை வழங்க தம்மை மொகிதீன் சந்தித்ததாக நவம்பர் 21 ஆம் தேதி ஒரு டிக்டாக் காணொளி பதிவில் அனுவார் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து, அந்த பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்விகள் சமூக ஊடகத்தில் எழுப்பப்பட்டன. பதினைந்தாவது பொதுத் தேர்தல் நடந்து முடிந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த காணொளி பதிவு வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை செய்ய பெரிக்காத்தான் நேஷனல் தலைவரான மொகிதீனையும் எம்.ஏ.சி.சி. அழைக்கவிருக்கிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்