கோலாலம்பூர், டிச. 16-
நாட்டின் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விதிக்கும் சேவை கட்டணங்களைக் குறைப்பது குறித்து அமைச்சு ஆராயும் என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாமி பாட்ஸில் நேற்று கூறினார். மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையமும் டெல்கோஸ் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் இணைந்து இது குறித்து ஆலோசனை நடத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு இந்த கட்டணங்கள் குறைவாக இருக்க வேண்டும். குறிப்பாக பல்லூடக தகவல் தொடர்பு ஆணையத்துடன் விரைவில் நான் சந்திப்பு நடத்தி இது சம்பந்தமான வழிகள் குறித்து பேசுவேன் என்று அவர் கூறினார்.
நாட்டில் உள்ள இளைஞர்கள் இணையச் சேவை மற்றும் தொலைபேசி சேவைகளுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
எதிர்வரும் வாரங்களில் இதுகுறித்து விரிவாக பேசப்படும். 4ஜி, 5ஜி அலைக்கற்றை தொடர்பு சேவைகளையும் மேம்படுத்தவும் அதன் தரத்தை உயர்த்தவும் அமைச்சு பாடுபடும் என்றார் அவர். இதனிடையே வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை வெளியிடுவோர் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து செயல்பட வேண்டும். ருக்கூன் நெகாரா கோட்பாடுகளை மதித்து யாரையும் புண்படுத்தாமல் கருத்துகளை பதிவு செய்யுங்கள். ஆரோக்கியமான கருத்துகளை சொல்லுங்கள். கருத்து சுதந்திரம் இருந்தாலும் அதற்கும் ஓர் எல்லை இருக்கிறது என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்