img
img

டைனோசர்களின் இறப்பில் மர்மம்!
வியாழன் 19 ஜனவரி 2017 14:51:13

img

டைனோசர்களின் இறப்பில் மர்மம்! உண்மைகள் வெளியானது பூமியில் வாழ்ந்து முற்றாக அழிந்துபோனதாகக் கருதப்படும் டைனோசர்கள் தொடர்பில் தற்போதும் ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த இராட்சத விலங்கு இனம் அழிந்ததற்கு பூமியுடன் வான் பொருட்கள் மோதியமை காரணமாக இருக்கலாம் எனவும், அமில மழை பெய்தமை காரணமாக இருக்கலாம் எனவும் வெவ்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. எவ்வாறெனினும் குறித்த தாக்கத்தினால் டைனோசர் இனமானது குறுகிய காலத்திலேயே அழிவடைந்து போனதாக இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது மறுக்கப்பட்டு நாம் நினைப்பதை விடவும் டைனோசர்கள் முற்றாக அழிவடைவதற்கு நீண்ட காலம் சென்றதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜேர்மனியில் உள்ள Potsdam Institute for Climate Impact Research (PIK) ஆராய்ச்சியாளர்களே இந்த தகவலை தெரிவித்துள்ளனர். மேலும் 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் காணப்பட்ட உறை வெப்பநிலையும், இருள் சூழ்ந்த தன்மையுமே டைனோசர்கள் மெதுமெதுவாக அழியக் காரணம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு: விவேகம் விதைத்த தமிழ்ப்பள்ளி ஆண்டு 5/18

தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய

மேலும்
img
பிடி 3 தேர்வில் இந்திய மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி: மயில்வண்ணன் 9ஏ பெற்று சாதனை!

பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று

மேலும்
img
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு : வெற்றிக்கு வித்திட்ட தமிழ்ப்பள்ளி ஆண்டு 5/16

பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்

மேலும்
img
டெக் டெரெய்ன் கல்லூரியின் 10ஆவது பட்டமளிப்பு விழா - 400 திவெட் பட்டதாரிகளுக்கு வேலை உத்தரவாதம்

டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற

மேலும்
img
தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் இணைத்து வாழ்க்கையில் உயரவைத்த தமிழ் உணர்வாளர் ந.பச்சைபாலன்-ரே.கமலாதேவி தம்பதியர்.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img