கோலாலம்பூர், நவ. 17-
தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளர் தாமே என்பது அதன் கூட்டுக் கட்சிகளின் இணக்கத்துடன் செய்யப்பட்ட ஒரு முடிவு என்று பராமரிப்பு அரசாங்க பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். அம்னோ உச்சமன்றம் பரிந்துரைத்த முடிவு இது. அம்னோ பொதுப் பேரவை செய்த முடிவு இது. தேசிய முன்னணி உச்சமன்றத்தில் அதன் கூட்டுக் கட்சிகள் செய்த முடிவு இது.
நாட்டில் உள்ள அனைத்து டிவிஷன்கள் அடித்தட்டு அம்னோ உறுப்பினர்கள் செய்த ஏகமனதான முடிவு இது. அம்னோ தேசியத் தலைவர் ஜாஹிட் ஹமிடி கூட்டுக் கட்சித் தலைவர்களான டத்தோஸ்ரீ வீ கா சியோங், டான்ஸ்ரீ எஸ். விக்னேஸ்வரன், டான்ஸ்ரீ ஜோசப் குரூப் ஆகியோர் ஒருமனதாக செய்த முடிவு இது.
இது கல்லில் எழுதப்பட்ட எழுத்தல்ல என்றாலும் இது ஒட்டுமொத்த தேசிய முன்னணியின் முடிவு. கட்சியின் தலைவர் ஜாஹிட் ஹமிடியும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசானும் இதை வலியுறுத்தியே வருகிறார்கள் என்றார் அவர். தேசிய முன்னணிக்கு அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் ஜாஹிட் பிரதமராக வருவதற்கு போடும் ஓட்டு என்று எதிர்க்கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தில் கூறி வருகின்றார்கள். மூத்த தலைவர் துன் மகாதீர் இதை பொது மேடைகளில் சொல்லி வருகிறார். பக்காத்தான் தலைவர்களும் இதனை கூறி வருகிறார்கள்.
நாங்கள் பிரதமர் வேட்பாளராக இஸ்மாயில் சப்ரியை முன்மொழிந்திருந்தாலும் இறுதி முடிவை மாமன்னரே செய்வார் என்று ஜாஹிட் ஹமிடி கூறி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்