img
img

நாடு முழுவதும் இன்று 15ஆவது பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு நடைபெறும்
வியாழன் 17 நவம்பர் 2022 14:33:39

img

பெரா, நவ. 5-
நாடு முழுவதும் இன்று 15ஆவது பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு நடைபெறும் நிலையில் பகாங் பெரா நாடாளுமன்றத் தொகுதியில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வேட்பு மனைவை தாக்கல் செகிறார். பெரா தொகுதி இந்தியர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அவர் அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நாட்டு இந்தியர்கள் எந்த வகையிலும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள். கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் அவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்ற வாக்குறுதியை அவர் அளித்தார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 20 23 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மலேசிய இந்தியர்களுக்காக பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டுள்ளது.

மித்ரா எனும் மலேசிய இந்தியர் உருமாற்ற பிரிவின் கீழ் இந்தியத் தொழில் முனைவர்களுக்காக 10 கோடி வெள்ளி ஒதுக்கீடு செயப்பட்டது அதில் ஒன்றாகும். இதற்கு முன்னதாக மித்ரா தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் செயல்பட்டது. இப்போது பிரதமர் துறையின் கீழ் நேரடியாகப் பிரதமரின் பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்ற செதியையும் இஸ்மாயில் சப்ரி வெளியிட்டார். இதற்குக் கூடுதலாக ஸ்புமி திட்டத்தின் கீழ் இந்திய சமூகத் தொழில் மேம்பாட்டுத் திட்டத்திற்காக அரசாங்கம் மேலும் 2 கோடியே 50 லட்சம் வெள்ளியை வழங்கியுள்ளது.

தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுக் கழக அமைச்சின் கீழ் இந்த ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. மலேசிய இந்தியர்களுக்கான கல்வியை பொருத்தவரையில் கூடுதலாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தேசிய வகை தமிழ் பள்ளிகளுக்கான மேம்பாடும் இதில் அடங்கும். அதேசமயம், கெடா, சுங்கை பட்டாணியில் மஇகா நிர்வகித்து வரும் ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு கூடுதலாக 5 மில்லியன் வழங்கி அப்பல்கலை கழகத்திற்கான மொத்த ஒதுக்கீடு 25 மில்லியன் வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டு இளம் இந்தியர்களுக்காக பல்வேறு துறைகளில் தொழில் திறன் பயிற்சிகளை வழங்குவதிலும் பிரத்தியாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் 42,544 இந்திய பயிற்றுநர்கள் நன்மை அடைந்துள்ளனர். இதற்காக சுமார் 77 மில்லியன் வெள்ளி செலவிடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார் .

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img