கோலாலம்பூர், நவ. 15-
பேசுவதற்கு வேறு விஷயமே இல்லாததால் தான் பொதுத் தேர்தலுக்கு பிறகு ஜாஹிட் ஹமிடி பிரதமராக வருவார் என்று பல கட்டுக்கதைகளை எதிர்க்கட்சிகள் அரங்கேற்றி வருகின்றன என்று அம்னோ உதவித் தலைவரும் பராமரிப்பு அரசாங்க பிரதமருமான டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி கூறினார். எல்லா விஷயங்களும் காலாவதியாகிப் போன நிலையில் எதைப் பேசுவது என்று தெரியாமல் பிரதமர் பதவியை பற்றியே இவர்கள் தேர்தல் பிரச்சார மேடையில் தொடர்ந்து பேசி மக்களைக் குழப்பி வருகிறார்கள் என்றார் அவர்.
என்னைக் கண்டு அச்சமா?
பிரதமர் பதவிக்கு இஸ்மாயில் சப்ரியை அம்னோ- தேமு முன்மொழிந்திருந்தாலும் தேர்தல் முடிந்து ஜாஹிட் ஹமிடி தான் பிரதமர் ஆவார் என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தில் கூறி வருகின்றன. நான் இன்னும் பிரதமர் வேட்பாளராக இருப்பதால் ஒரு வேளை எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றனவோ என்னவோ? அதனால்தான் வாக்காளர்களை குழப்ப அவர்கள் முயல்கிறார்கள் என்றார் அவர்.
இது அம்னோ தேசிய முன்னணித் தலைவர்களை பிளவுபடுத்தும் வேலை. அம்னோ உச்சமன்றம் அம்னோ அரசியல் பிரிவு மற்றும் அம்னோவின் பொதுப் பேரவையால் செய்யப்பட்ட முடிவுதான் நான் பிரதமர் வேட்பாளர் என்பது. டத்தோ ஸ்ரீ ஹமிடி, துணைத்தலைவர் முகமட் ஹசான், உட்பட ஒட்டுமொத்த அம்னோ - தேமு தலைவர்களே நான் மட்டுமே பிரதமர் வேட்பாளர் என்பதை தெளிவுபடச் சொல்லிவிட்ட பின்னரும் இதைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு மேடையாக மக்களைக் குழப்புகிறார்கள் என்றார் அவர்.
மக்களைக் குழப்பும் வேலை
தேசிய முன்னணி ஆற்றல் மீது மக்களுக்கு சந்தேகம் வர வேண்டும். அவர்கள் வாக்களிக்க மறுக்க வேண்டும் என்பது தான் இவர்களின் திட்டம். பக்காத்தானோ பெரிக்காத்தானோ இவர்களுக்கு ஒரு நிலையான அரசாங்கத்தை உருவாக்கும் தகுதி இல்லை. ஆனால் நாங்கள் தெளிவான நிலையில் இருக்கிறோம். எங்களின் தேர்தல் கொள்கை அறிக்கை பொருளாதாரத்தை மட்டும் சார்ந்ததல்ல. மாறாக அனைத்து நிலைகளிலும் ஒரு புதிய உருமாற்றத்தை கொண்டு வருவது என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்