பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல்
பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் மிகவும் தீவிரமான விஷயமாகும். மேலும் அதைக் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால் மாணவர்களின் மன உறுதியைக் குலைத்து, அவர்களின் மனநல நிலையை மோசமாக பாதிக்கும். உதாரணமாக, பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் பல்வேறு வடிவங்களில் வரலாம்.
பதிவுசெய்யப்பட்ட பெரும்பாலான சம்பவங்களில், மாணவிகளே இந்த வகையான பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்துதலுக்கு உள்ளாகிறார்கள். சமீபகாலமாக குடியிருப்புப் பள்ளிகள் போன்ற நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் வார்டன்கள் மாணவிகளிடம் உண்மையிலேயே மாதவிடாய் இருக்கிறதா என்று பார்க்க கேட்பது அல்லது சில செயல்களில் இருந்து தப்பிக்க சாக்காகச் சொல்லப்படுகிறதா? என்பன போன்ற செய்திகள் வந்துள்ளன. இந்த வகையான அவமானகரமான செயல் பாலியல் துன்புறுத்தலின் ஓர் அப்பட்டமான வடிவமாகவும் கருதப்படுகிறது. ஏனெனில் மாணவர்கள் தங்கள் சானிட்டரி நாப்கின்களை அதிகாரத்தில் உள்ள ஆசிரியர்களிடம் அவர்களுக்கு மாதவிடாய் வந்ததற்கான சான்றாகக் காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டடுள்ளனர்.
இது வரை 311 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஆசிரியர்கள், வார்டன்கள் மற்றும் மூத்த மாணவர்கள் என்று அனைத்து மகளிர் நடவடிக்கை சங்கத்தின் (அவாம்) ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்றோர் ஆய்வில் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மார்ச் மாதம், 11 வயது சிறுமியின் வேன் ஓட்டுனரால் சில்மிஷம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதன் தொடர்பில் பெற்றோர் போலீசில் புகார் அளித்து, மகள் தனக்கு நடந்ததை கூறி கண்ணீர் விட்டு அழுதார். தகாத செயல்கள் இளம் குழந்தைகளை மிகவும் பாதிக்கலாம்.
இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் சைகைகள் பாதிப்பில்லாதவை என்று பல குழந்தைகள் பொதுவாகக் கருதுவார்கள் என்று கல்விக்கான பெற்றோர் நடவடிக்கைக் குழுவின் தலைவர் நூர் அசிமா அப்துல் ரஹீம் கூறினார். எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்துவது முக்கியமாகும். இதனால் அவர்கள் மீது ஏதேனும் பாலியல் துஷ்பிரயோகம் அல்லது துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டால் உடனடியாக செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பள்ளிகள், வீடுகள் இரண்டிலும் பாலியல் துன்புறுத்தல் குறித்து முறையான போதனைகள் வழங்கப்பட வேண்டும் என சுஹாகாமின் பிள்ளைகளுக்கான ஆணையர் நூர் அசியா முகமட் அவல் ஆலோசனை கூறினார்.
பெற்றோர்கள் பாலியல் துன்புறுத்தல் பற்றிய அடிப்படை போதனைகளை பெற்றிருக்க வேண்டும். இதனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டவும் எச்சரிக்கவும் முடியும் என்றும் அவர் கூறினார். பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க பெற்றோர்கள் செய்யக்கூடிய சில விஷயங்களை போதிப்பது அவசியமாகும். அதே சமயம் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பெற்றோருக்கு அல்லது காப்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு அறிவுரை கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்