திங்கள் 09, டிசம்பர் 2024  
img
img

வேகமாக மீள்வோம்; உத்வேகத்துடன் மீள்வோம்
வெள்ளி 04 நவம்பர் 2022 12:33:24

img

தேசிய மீட்பு மன்றத்தின் பங்களிப்பு அதன் பணிகள் அதன் அடைவு நிலைகள்  குறித்து அதன் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் அளித்த நேர்காணலின் தொகுப்பு.

1. தேசிய மீட்பு மன்றத்தின் பங்கு என்ன? எதற்காக அது தோற்றுவிக்கப்பட்டது?
நான் பிரதமராக இருந்த போது இந்த மன்றம் உருவாக்கப்பட்டது. தேசிய மீட்புத் திட்டம் வகுக்கப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மக்களை பொருளாதார சுமையிலிருந்து மீட்பதற்காக  உருவாக்கப்பட்டது. எனினும் கோவிட் -19 பெருந்தொற்றின் நிலை மிகக் கடுமையாக இருந்தது. பொது முடக்கங்கள் பொருளாதாரத்தை பாதித்தன பெமூலே  என்ற திட்டத்தின் கீழ் 530 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள 8 பொருளாதார மீட்பு உதவித்  திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
பிரதமர் பதிவியிலிருந்து நான் விலகிய பின்னர் தேசிய மீட்பு மன்றத்தின் தலைவராக அமைச்சரவைக்கு ஆலோசனை சொல்லும் பணியில் நான் இருந்தேன். மொத்தம் 90 க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை இம்மன்றம் வழங்கியிருக்கிறது.

2.இது ஒரு பொருளாதார மீட்சி மட்டும் அல்ல, சமூக பொருளாதார மீட்சி என்று குறிப்பிடுகிறீர்கள். மன்றம் விவாதித்த அம்சங்கள் என்ன?
நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையும் குறிப்பாக சிறிய   குறு நடுத்தர நிறுவனங்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகள், அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை, சமூக நலப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், கோவிட்-19 ஆல் மாணவர்களுக்கு ஏற்பட்ட தலைமுறை பாதிப்பு நிலைகள் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

3. வர்த்தக சமுதாயத்துடன் தேசிய மீட்பு மன்றத்தின் தொடர்பு நிலைகள் என்ன?
அவர்கள் கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டுமல்ல நாடு தழுவிய நிலையில் அவர்களுடன் ஏராளமான சந்திப்புகள் தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டன. நான் லங்காவி, மலாக்கா, ஜொகூர், கிளந்தான், திரெங்கானு ஆகிய இடங்களுக்கு வருகை புரிந்து இளைஞர் அமைப்புகளை, கல்வியாளர்களை, அரசு சார்பற்ற அமைப்புகளை, வர்த்தக அமைப்புகளை சந்தித்தேன். பெருந்தொற்று தாக்கத்திலிருந்து மீள மலேசியாவின் வியூக திட்டங்களை மற்ற நாடுகள் பாராட்டின.  மலேசியாவில் உள்ள வர்த்தக சமுதாயமும் எங்கள் நடவடிக்கைகளை பாராட்டின.

பெரும்பாலான வர்த்தகர்கள் நன்றி சொன்னார்கள். எங்கள் வர்த்தகத்தை மூடவில்லை. தொழிலாளர்களை நிறுத்த வில்லை. சம்பள உதவித் திட்டத்தை எடுத்துக் கொண்டு அதை சீர்படுத்தினோம் என்றார்கள். சம்பள உதவித் திட்டத்தின் கீழ்  15 பில்லியன் வெள்ளியை செலவிட்டு 300,000 வர்த்தகங்களுக்கு உதவி செய்தோம். 30 லட்சம் வேலைகள் காப்பாற்றப்பட்டன. 50 மில்லியன் உணவு கூடைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன.  எம்பிக்களிடம் இந்த  5 லட்சம் வெள்ளி ஒப்படைக்கப்பட்டு இந்த உணவு கூடைகள் வழங்க ஆவன செய்தோம். மொத்தம் 22 பில்லியன் ரொக்க உதவிகள் வழங்கப்பட்டு 10.1 மில்லியன் மக்கள் பயனடைந்தனர். ஆரம்பத்திலிருந்து 140 % மக்களுக்கு தடுப்பூசி திட்டத்திற்காக வெ.5 பில்லியன் ஒதுக்கப்பட்டது. பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசிகளும் கொண்டு வரப்பட்டன.

4. பொதுவாக இந்த மீட்பு திட்டத்தில் உங்களுக்கு திருப்தி உண்டா?
அது இன்னும் கூட சிறப்பாக இருந்திருக்கலாம். சுற்றுலா தயாரிப்புத் துறை ஆகியவை மிக மெதுவாக மீட்சி கண்டன. மீட்பு என்பது ஒரு குறுகிய காலத்திட்டமல்ல. 12 ஆவது மலேசியத் திட்டத்துடன் ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு நீண்ட காலத்திட்டமாகும். பொருளாதார மீட்புக்கு நாம் முன்னுரிமை தராவிட்டால் அதன் இரண்டாண்டுகள் பாதிப்பு பல்லாண்டுகள் வரை நீடிக்கும் நிலை ஏற்பட்டு விடும்.

5.உயர்ந்த பண வீக்க விகிதமும் மலேசிய ரிங்கிட் வீழ்ச்சியும் பொருளாதார மீட்புக்கு தடையாக இருந்ததா?
2022 ஆம் ஆண்டு நமக்கு சிறந்த ஆண்டாக இருக்கும்  என்று நாம் நம்பினோம்.  முதல் பாதியாண்டு வளர்ச்சி 6.9% ஆக இருந்தது  இரண்டாவது கட்ட வளர்ச்சி 8.9% ஆக இருந்தது. நாணய மதிப்பின் வீழ்ச்சி நமது இறக்குமதி செலவை பாதித்தது. விலைகள் உயர்வு மக்களை பாதித்தது. நாணய மதிப்பின் வீழ்ச்சி நமது பொருளாதார வீழ்ச்சியை பெரிதும் பாதித்தது என்பதை மறுக்கவும் முடியாது. பண வீக்கமும் நாணய மதிப்பும் இணைந்து நாம் ஏற்படுத்திய பொருளாதார மீட்பை பாதித்தன.

6. பி40 பிரிவினர் பி61 பிரிவினராக மாறிவிட்டனர் என்று நீங்கள் சொன்னீர்கள். இவர்களை எப்படி மீட்பது? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

பி40, எம்40, டி20 ஆகிய பிரிவினர்க்கே வருமான விகிதங்கள் வேறுபடுகின்றன. பி 40 பிரிவினர் 5,000 வெள்ளிக்கும் உட்பட வருமானத்தை கொண்டவர்கள். எம்40 பிரிவினர் 5,001 லிருந்து 10,000 வெள்ளிக்குட்பட்டவர்கள். டி 20 பிரிவினர் வெ.10,000 மேற்பட்ட வருமானத்தையும் கொண்டவர்கள். பி40 பிரிவினர் 61 விழுக்காட்டினர் எம்40 பிரிவனர் 14 விழுக்காட்டினர் டி20 பிரிவினர் 18 விழுக்காட்டினர் 7 விழுக்காட்டினரை அடையாளம் காணமுடியவில்லை. ஆனால் 70 விழுக்காட்டு மக்கள் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டனர். 76 விழுக்காட்டினர் பி61 பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு கவலைக்குரிய புள்ளி விவரமாகும். இவர்கள் தான் உணவு வாங்க வழியில்லாமல் நாள் ஒன்றுக்கு 1 வேளை உணவு உண்கின்ற 2,965 வெள்ளிக்கும் குறைவான வருமானம் பெறுகின்றவர்கள்.

இவர்களை மீட்பதற்கான வழி என்ன என்று கேட்டால் அவர்களுக்கான சமூக பாதுகாப்பு வலைகளை வலுப்படுத்துவது. இ -காசே என்ற உதவித் திட்டத்தை மறு சீரமைப்புச் செய்வது. அன்றாட தொழில்களை செய்கின்ற தற்காலிக பணியாளர்களுக்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துவது. இப்படி பலவற்றை நாம் செய்ய வேண்டும். மேலும் வறுமைக் கோட்டின் அளவை நாம் மறு ஆய்வு செய்ய வேண்டும். நான் பிரதமராக இருந்த போது  2020 இல்  வறுமை கோட்டின் வருமான வரம்பை 980 வெள்ளியிலிருந்து 2,208 ஆக மாற்றியமைத்தேன்.

7. 2023 ஆம் ஆண்டு பொருளாதாரம் இன்னும் சரிவடையும். உலகளாவிய பொருளாதாரம் அடுத்தாண்டு 2.7 விழுக்காடாக வீழ்ச்சியடையும் என்று உலக பொருளாதார நிதியம் கணித்திருக்கிறது. இது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்?
நமது மீட்பு முயற்சிகளை அது பாதிக்கும். நமது ஏற்றுமதிகளுக்கு குறைவான மதிப்பு ஏற்படும். நாணய மதிப்பின் வீழ்ச்சியால் நமது ஏற்றுமதி பொருட்கள் ஒரு மலிவாக நிலையை பெறும். உலகளாவிய பொருளாதார மந்த நிலை பல பிரச்சினைகள் உருவாகலாம். ஆட்குறைப்பு தொழிலாளர் குறைப்பு ஏற்படலாம். சுற்றுலா உலகளாவிய பயணங்கள் பாதிக்கப்படலாம். 2023 ஆம் ஆண்டு ஒரு சவால் மிக்க ஆண்டாக விளங்கலாம்.

8. உலகளாவிய பொருளாதார தாக்கத்திலிருந்து மீள இந்த மீட்பு மன்றம் அரசாங்கத்திற்கு என்ன ஆலோசனை சொல்லும்?
பொருளாதார பிரிவுகள் சுய பாதுகாப்பு நிலைகளை வலுப்படுத்த வேண்டும். அதிகமான வேலை வாய்ப்புகளை  உருவாக்க வேண்டும். சிறு, குறு, நடுத்தர வர்த்தகங்களை பாதுகாப்பதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும். சுற்றுலாத் துறைக்கு ஒரு புத்தாக்க வியூகத்தை ஏற்படுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். மக்களை பாதுகாக்க வேண்டும். பெருந்தொற்றுக்கு முன்னால் நம்மால் செய்ய முடிந்தது. சரியான நிலையான கொள்கை. சிறந்த தலைமைத்துவத்தால்  பொருளாதார புயலிலிருந்து மலேசியா மீள முடியும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img