img
img

அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருந்த வட்டியில்லாக் கடன்
வெள்ளி 04 நவம்பர் 2022 12:29:28

img

கோலாலம்பூர், நவ.4-

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகளாக வணிகர்கள் பெரும் அவதிக்குள்ளானதுடன் அவர்களின் வியாபாரங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மூலதனம் பற்றாததனாலும் வியாபாரம் குறைவாக இருந்ததாலும் அவர்களால் வர்த்தகத் துறையில் தொடர்ந்து செயல்பட முடியவில்லை என வர்த்தகர்கள் சிலர் தெரிவித்தனர்.

இவர்களின் பிரச்சினைகளை அறிந்து அரசாங்கம் சரியான நேரத்தில் அவர்களுக்கு நிதியுதவு வழங்கி உதவ முன்வந்தததை தொடர்ந்து அப்பாதிப்பிலிருந்து நாங்கள் சற்று எழுவதற்கான நல்லசூழல் அமைந்தது என கூறுகின்றனர், மின்சார பொருட்களை விற்பனை மற்றும் பழுது பார்க்கும் வர்த்தகத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் ஜெகன் சின்னப்பயன், கணினி மற்றும் அதன் உபகரணப் பொருட்களை விற்னை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருபவரான அருண்குமார் செங்கோடன் மற்றும் தனியார் கல்லூரியை நடத்தி வருபவரான சரவணன் ஆகியோர்.

இது குறித்து மேலும் விவரித்த இவர்கள் , அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருந்த  வட்டியில்லாக் கடன் மற்றும் வங்கியில்  திருப்பிச் செலுத்த வேண்டிய மாதாந்திர கடனுக்கான  கூடுதல் காலக்கெடு ஆகியவற்றுடன்  ரொக்கப்பணமும் வழங்கியதைத் தொடர்ந்து தற்போது இத்துறையில் மெல்ல  முன்பு போல்  ஈடுபட முடிகிறது என்றாலும் ஈராண்டுகளுக்கு முன்பு இருந்து வந்த வர்த்தகம் தற்போது இல்லை. காரணம்  வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் எங்களின் தொழில் துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவி வருவதும் ஒரு தடையாக இருந்து வருகிறது. அரசாங்கம் வழங்கியிருந்த உதவிகள் யாவும் ஓரளவிற்கு மட்டுமே எங்களுக்கு உதவியிருக்கிறது என்றாலும் தொழிலாளர்கள் போதுமான அளவிற்கு இருப்பார்களெனில் மீண்டும் முன்பு மாதிரியான லாபகரமான வர்த்தகத்தில் எங்களைப்போன்று சிறிய மற்றும்  பெரிய அளவில் வர்த்தகத் துறையில் ஈடுபட்டு வருவோருக்கு பேருதவியாக விளங்கமுடியும் என கருத்து தெரிவித்தனர்.  

வர்த்தகத்திற்காகவும் மேலும் பல தேவைகளுக்காகவும் வங்கிகளில் பெற்றுள்ள கடனைத் திரும்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மீண்டும் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒத்தி வைப்பதற்கான வாய்ப்பினை அரசாங்கம்  ஏற்படுத்திக்கொடுப்பதன் மூலமாகவும்  பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து விரைவாக மீள முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே கோவிட்-19 பெருந்தொற்றுக் காலங்களில் வருமானத்தை பெரிதும் இழந்த சிறுதொழில் முனைவோர் மற்றும் சிறுதொழில் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிநிதிகள் தொடர வேண்டும் என சில வர்த்தகர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் வருமானமிழந்து பாதிக்கப்பட்ட இப்பிரிவினருக்கு மலேசிய தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சும், நிதியமைச்சும் பேங்க் நெகாராவுடன் இணைந்து இத்தகைய உதவிநிதிகளை வழங்கி வந்தது.

பொருளாதாரத்தில் சிக்கியிருந்த மைக்ரோ, சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் மீட்சி பெற தேசிய மீட்பு மன்றம் இத்தகைய திட்டத்தினை அமல்படுத்தியிருந்தது. தற்போது பொருளாதார நிலை சற்று மேம்பாடு கண்டிருந்த போதிலும், தேசிய மீட்பு மன்றத்தின்வழி தொடங்கப்பட்ட உதவிநிதிகள் அக்கால கட்டத்தில் பேருதவியாக இருந்ததாகவும் அந்நிதி தேவைப் படுவோருக்கு வழங்கப்படுவது அவசியம் என்கின்றனர். உலுசிலாங்கூர் கம்போங் காரிங்கைச் சேர்ந்த அலினா பிலா பிந்தி அலி அஸ்வாரும் (வயது 22) பேரா தஞ்சோங்மாலிம் கம்போங் கிளாவரைச் சேர்ந்த சுக்கிமான் பின் அமிட்டும் (வயது 61) கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் வருமானமின்றி பெரும் சிரமத்திற்கு ஆளானதாகக் கூறினர்.

பலகாரம் மற்றும் குளிர் பானங்கள் விற்று வாழ்வாதாரத்தைக் நகர்த்திக் கொண்டிருந்த இருவருக்கும் இத்திட்டத்தின்வழி தலா வெ. 3,000 உதவிநிதி கிடைத்ததாகக் கூறினர். இந்நிதி ஓரளவு தங்கள் பொருளாதாரச் சுமையை குறைத்த போதிலும் பொருளாதாரம் முழுமையாக சீரமைப்பு பெறும் வரை இத்தகைய உதவிநிதிகள் தொடர வேண்டும் என்கின்றனர். சிரமத்தை எதிர்நோக்கியிருந்த காலகட்டத்தில் உதவிநிதியினை வழங்க ஆலோசனை வழங்கிய தேசிய மீட்பு மன்றத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img