கோலாலம்பூர், அக். 30-
நிதி நெருக்கடி காரணமாக சுமார் 14 லட்சம் மாணவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படலாம் என்று தேர்தல் ஆணையத்தின் முன்னாள் துணைத்தலைவர் வான் அகமட் கூறுகிறார். எனவே அந்த மாணவர்கள் தாங்கள் கல்வி பயில்கின்ற பள்ளி வளாகங்களில் இருந்து அஞ்சல் மூலமாக வாக்களிப்பதற்கான சலுகைகளை உடனடியாக வழங்குவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கோவிட்-19 தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக உயர் கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தங்களின் பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்கள் வருமானத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதால் இந்த மாணவர்கள் நிதி நெருக்கடியை எதிர்நோக்கினர். இந்நிலையில் வரும் நவம்பர் 19ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட சுமார் 14 லட்சம் மாணவர்கள் வாக்களிக்கும் தகுதியை கொண்டிருக்கின்றனர்.
தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றால் தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ள சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும். வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்ப அவர்களுக்கு அதிக தொகை தேவைப்படும். நிதி பிரச்சினை காரணமாக அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே வெளிநாடுகளில் பயிலும் மலேசிய மாணவர்கள் அஞ்சல் வழி வாக்களிப்பதற்கு வழங்கப்படும் சலுகையை போன்று உள்நாட்டில் பயிலும் இந்த மாணவர்களுக்கும் இந்த சலுகையை வழங்கினால் அவர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாய்ப்பு கிடைக்கும் என்றார் வான் அகமட்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்