கோலாலம்பூர், அக். 31-
நாடு சுதந்திரம் பெற்ற விவகாரத்தில் மலேசிய இந்தியர்கள் மற்றும் சீனர்கள் சம்பந்தப்பட்ட சில வரலாற்றுப் பதிவுகள் அரசாங்கப் பள்ளிகளுக்கான நான்காம் படிவ சரித்திரப் புத்தகத்தில் காணாமல் போயிருக்கும் தகவல் கசிந்துள்ளது. ஐ.பி.பி.என்.எனும் தேசியக் கல்வி மேம்பாட்டு இயக்கம் ஓர் அறிக்கையில் இது பற்றி கூறியுள்ளது. மலாயா சுதந்திரம் பெறுவதில் சிறுபான்மையினர் ஆற்றியுள்ள பங்களிப்பு மற்றும் தேசிய மொழியின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிப்பதில் இக்குறைப்பாடு நேர்ந்திருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
1956 ஆம் ஆண்டு ரசாக் அறிக்கையை குறிப்பிடுகையில், அப்போது பஹாசா மெலாயு என்றழைக்கப்பட்ட மலாய் மொழி இடைநிலைப் பள்ளிகளில் பிரதான கற்பித்தல் மொழியாக இருந்ததாகவும் ஆங்கிலம் ஒரு பாடமாக போதிக்கப்பட்டதாகவும் அந்த வரலாற்றுப் பாடப்புத்தகத்தின் அத்தியாயம் 7 இல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது தவறான தகவலாகும என ஐ.பி.பி.என். கூறுகிறது. 1960 களில் பள்ளிகளில் மலாய் மொழி பிரதான போதனா மொழியாக இருந்ததாகக் கூறப்படுவது தவறு. அந்த சமயத்தில் இடைநிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் மாண்டரின் மொழிகள் போதனா மொழிகளாகப் பயன்படுத்தப்பட்டன.
1960 இல் ரஹ்மான் தாலிப் அறிக்கை வெளியான பிறகு மட்டுமே மாண்டரினை போதனா மொழியாகக் கொண்ட இடைநிலைப் பள்ளிகள் ஆங்கிலம் அல்லது மலாய் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்ற நடைமுறை வந்தது. அரசாங்க நிதியைப் பெறுவதற்கு இது உதவும் என கூறப்பட்டது. 1976 இல் மட்டுமே ஆங்கில மொழியை போதனா மொழியாகக் கொண்ட இடைநிலைப் பள்ளிகள் தேசிய மொழிக்கு மாறும் நடைமுறை அமலுக்கு வந்தது. முதல் படிவம் முதல் 5 ஆம் படிவம் வரைக்குமான வரலாற்றுப் பாடப் புத்தகங்களை சீரமைக்க வேண்டும் என்பது மீதிலான அறிக்கையை ஐ.பி.பி.என். வெளியிட்டுள்ளது.
தாய்மொழி பள்ளிகளின் மேம்பாடு, தாய்மொழியின் நிலைப்பாடு, சிறுபான்மை பிரிவினரின் மொழி, பள்ளி, கலாச்சாரம் ஆகியவற்றின் பராமரிப்பு ஆகியவற்றுக்கு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்ததையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. அரசாங்க உதவிகள் பெற்ற அனைத்து பள்ளிகளும் சரிசமமாக நடத்தப்படும் என்பதற்கும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. மற்றொரு நிலவரத்தில், அனைத்து ஆங்கில மற்றும் தாய்மொழிப் பள்ளிகளும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என ம.சீ.ச. தனியாகவும் குடியுரிமை மற்றும் பள்ளிகளில் தாய்மொழியின் பயன்பாடு குறித்து ம.இ.கா. தனியாகவும் கோரிக்கை எழுப்பியதாக அந்த 4 ஆம் படிவ வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவும் தவறான தகவலாகும். ம.சீ.ச., ம.இ.கா. இரண்டும் ஒன்றாக தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டு, ஆங்கில, தாய்மொழி பள்ளிகள் நிலைநிறுத்தப்படுவதற்கும், தேசிய மொழி என்ற வகையில் மலாய் மொழி எந்த வகையிலும் கல்வி முறையில் மற்ற மொழிகளின் பயன்பாட்டை தடை செய்யக்கூடாது என்பதையும் வலியுறுத்தி அந்த கொள்கை அறிக்கையில் குரல் கொடுத்திருந்தன. குடியுரிமைக்கும் அதில் குரல் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுவும் அந்த பாடப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்க வேண்டும் என ஐ.பி.பி.என் கூறியிருப்பதாக் தி வைப்ஸ் இணைய ஏடு தகவல் வெளியிட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்