கோலாலம்பூர், அக். 31-
மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் (யு.கே.எம்.) அடுத்த மாதம் 50 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெறவிருப்பதை முன்னிட்டு ஆடைகள் சம்பந்தமான சில விதிமுறைகளை அது வெளியிட்டுள்ள நிலையில், இந்திய மாணவிகள் சேலை அணிவதற்கு தடை செய்யப்பட்டிருந்தது. எனினும், இதற்கு சமூக வலைத்தளத்தில் கடுமையான எதிர்ப்பும் ஆட்சேபமும் தெரிவிக்கப்பட்டது நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பல்கலைக்கழகத்தின் முத்திரையுடன், ஆடைகளுக்கான விதிமுறை குறித்து அது வெளியிட்டிருந்த ஒரு சுற்றறிக்கை சமூக வலைத்தளத்தில் வலம் வந்தது. அப்பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவர்களும், வருகையாளர்களும் அணிந்து வரக்கூடிய ஏற்புடைய ஆடைகள் இவைதாம் என்பதைக் காட்டும் படங்களும் அதில் காணப்பட்டன.
அணியக்கூடாத ஆடைகளில் இந்தியர்களின் பாரம்பரிய உடையான சேலையும் சீனப் பெண்கள் அணியக்கூடிய சியோங்சாம் உடையும் இடம்பெற்றிருந்தன. அப்பல்கலைக்கழகத்தின் இச்செயலுக்கு சமூக வலைத்தளத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இதனிடையே, இந்த எதிர்ப்பினை தொடர்ந்து யு.கே.எம். ஆடை விதிமுறைகள் தொடர்பான அறிக்கையை அதன் இணையத்தள அகப்பக்கத்திலிருந்து நீக்கியிருப்பதாக அறியப்படுகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்