வெள்ளி 13, டிசம்பர் 2024  
img
img

இன்று அனைத்துலக சேமிப்பு தினம்
திங்கள் 31 அக்டோபர் 2022 13:23:45

img

கோலாலம்பூர், அக்.31-

இன்று அக்டோபர் 31 ஆம் தேதி அனைத்துலக சேமிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. நாட்டின் உயர்கல்வி நிதிக்கழகமான பி.டி.பி.டி.என். அறிமுகம் செய்துள்ள பி.எம்.எஸ். அல்லது எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு மாதத்திற்கும் இதற்கும் நிறையவே தொடர்பு இருக்கின்றது. காரணம், இரண்டுமே  சேமிப்பின் அவசியத்தை உணர்த்துகின்றது என பி.டி.பி.டி.என். தலைமை நிர்வாகி அஹமட் டுசுக்கி அப்துல் மாஜிட் நேற்று தெரிவித்தார்.

பி.எம்.எஸ். அல்லது எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு மாதம் 2022,  பி.டி.பி.டி.என். கழகத்தின் ஒரு முன்னோடித் திட்டமாக விளங்குகிறது. மலேசியர்களிடையே சேமிப்பு பழக்கத்தை இது வலியுறுத்துகிறது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி உலக சேமிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, பி.டி.பி.டி.என். நேற்று அதன் பி.எம்.எச். 2022 நிறைவு விழாவினை இணையம் வாயிலாக நடத்தியது. அஹ்மட் டுசுக்கி அப்துல் மஜிட்  தலைமையில் பி.டி.பி.டி.என். அதிகாரப்பூர்வ முகநூல் வாயிலாகவும் பி.டி.பி.டி.,என். யூ-டியூப் தொலைக்காட்சி வாயிலாகவும் இது பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இதன் கருப்பொருள் “Block” என்பதாகும். இதனுடன், Jom Jadi  Superhero Anak You என்ற முத்திரையும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பி.எம்.எஸ். 2022 இவ்வாண்டு அக்டோபர் முதல் தேதியும் அக்டோபர் 2ஆம் தேதியும் ஒரே சமயத்தில் நாடு முழுவதும் 14 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், 2022 அக்டோபர் முதல் தேதியிலிருந்து அக்டோபர் 31 ஆம் தேதி வரையில் ஒரு மாதம் முழுவதும் மாநிலம் மற்றும் தேசிய நிலையில் இணையம் வாயிலாகவும் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.  ஒரு சிறந்த எதிர்காலத்திற்கு தொடர்ச்சியான, முழுமையான முயற்சிகளையும் திட்டங்களையும் மேற்கொள்வதற்கு “Block”  என்ற கருப்பொருள் பொருத்தமான, தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது.

நம் எதிர்காலம் வெற்றிகரமான ஒன்றாக அமைய வேண்டுமானால் முன்கூட்டியே திட்டமிட்டு, சேமிக்கும் அவசியத்தையும் இது தெளிவாக உணர்த்துகின்றது. பி.டி.பி.டி.என். தலைமை நிர்வாகி அஹமட் டுசுக்கி அப்துல் மாஜிட்  மேலும் பேசுகையில், பி.எம்.எஸ். 2022 சேமிப்புத் திட்டத்தின் வாயிலாக எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு முதலீடுகளாக 15 கோடி வெள்ளி பெறுவதே பி.டி.பி.டி.என்.னின் இலக்காக இருந்தது. 2022 அக்டோபர் முதல் தேதியிலிருந்து அக்டோபர் 28 ஆம் தேதி வரையில் கிடைக்கப்பெற்ற எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு 14 கோடியே 40 லட்சம் வெள்ளியை அடைந்தது.

இலக்கிடப்பட்ட 15 கோடி வெள்ளியில் இது 96 விழுக்காடாகும். 2022 அக்டோபர் 31 முடியும் தறுவாயில் நிச்சயமாக இந்த இலக்கை அடைய முடியும் என்று பி.டி.பி.டி.என். நம்பிக்கைக் கொண்டுள்ளது. முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். காரணம், உங்கள் பிள்ளைகளின் சூப்பர் ஹீரோ நீங்கள்தான் என்று அவர் கூறினார். இதனிடையே, இவ்வாண்டு சேமிப்பு மாதக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, பி.டி.பி.டி.என். அதன் சமூகக் கடப்பாட்டு திட்டங்களில் ஒன்றாக திரெங்கானு மாநிலத்தில் மாநில அளவிலான சூப்பர் ஹீரோ எஸ்.எஸ்.பி.என். சேமிப்புத் திட்டத்தை அமலாக்கம் செய்தது.

இத்திட்டத்தின் வாயிலாக, 2022 அக்டோபர் மாதம் பிறந்த ஒரு குழந்தைக்கு 100 வெள்ளி மதிப்பிலான எஸ்.எஸ்.பி.என். பிரைம் சேமிப்புத் திட்டத்தை பி.டி.பி.டி.என். இலவசமாக வழங்குகின்றது. சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் அதே சமயம், சேமிப்பின் அவசியம் குறித்து சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் தலையாய நோக்கமாகும். எதிர்கால உயர்கல்விக்கு இப்போதே சேமிக்கும் பழக்கத்தை இது உருவாக்குகின்றது. எதிர்கால பொருளாதார உத்தரவாதத்தையும் இது அளிக்கின்றது. இது பற்றிய தீவிரச் சிந்தனையை மக்கள் மத்தியில் புகட்டும் வண்ணம் 2022 அக்டோபர் மாதம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை மேற்கொள்வதன் வாயிலாக நிதிக்கழகங்கள் மற்றும் இதர வியூகப் பங்காளிகளுடன் பி.டி.பி.டி.என். இணைந்து செயல்பட்டுள்ளது என்று அதன் தலைவர் டாக்டர் அப்பில் யூசுப் கூறினார்.

பொருளாதாரத்திற்காக மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல், சொந்த சேமிப்பே தன் கைக்கு உதவி என்பதை எடுத்துரைக்கும் பணிகளை பி.டி.பி.டி.என். தொடர்ந்து மேற்கொண்டு வரும். நாட்டின் உயர்கல்விக்கான நிதியுதவிக் கழகமாக பி.டி.பி.டி.என். தூரநோக்கு சிந்தனை நிறைவேறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img