img
img

மக்களுக்கு உதவும் வழிகளை எளிதாக்க ஒருங்கிணைந்த அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்!
செவ்வாய் 18 அக்டோபர் 2022 08:58:31

img

புத்ரா ஜெயா, அக்.14-

நாட்டு மக்களுக்கு உதவும் வழிகளை எளிதாக்க ஒருங்கிணைந்த அமைப்பு அவசியம் உருவாக்கப்பட வேண்டும் என தேசிய மீட்சி மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் வலியுறுத்தினார். 2023ஆம் ஆண்டு உலகமே பொருளாதார சவால்களை எதிர்நோக்கவிருக்கும் நிலையில், மலேசியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. 2022ஆம் ஆண்டு வறுமை மற்றும் செழிப்பு மீதான உலக வங்கி அறிக்கையில், கோவிட் - 19 தொற்று, உலகளாவிய அரசியல், ரஷ்யா - உக்ரைன் போர் ஆகியவை உலக மக்களை பெரிதும் பாதித்துள்ளது.

இதன் விளைவால் உலகத்தில் 7 கோடியே 10 லட்சம் பேர் கோவிட் - 19 தொற்று காலத்தின்போது வறுமையில் வாடினர். அதேவேளையில், 57 கோடியே 40 லட்சம் பேர் அல்லது உலகத்தில் 7 விழுக்காட்டு மக்கள் நிகர் வருமானத்திலேயே இருப்பதற்கு வழிவகுத்து விடும். இந்நிலை வரும் 2030ஆம் ஆண்டிற்குள் வறுமை நிலையை ஒழிப்பதற்கும் தடையாக இருக்கும்.
மலேசியாவில், நாடு பொருளாதார மீட்சியிலும் சமூக நல்லிணக்கத்திலும் கசப்பான நிலையைக் கொண்டுள்ளது. ரிங்கிட் வீழ்ச்சி, விலைவாசி, வாழ்க்கைச் செலவின உயர்வு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.


நாடு பொருளாதார நெருக்கடி மீதான சவாலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் வேளையில், அப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலேயே தேசிய மீட்சி மற்றும் சமூக பாதுகாப்பு மீதான கருத்தரங்ககளை தேசிய மீட்சி மன்றம் ஏற்பாடு செய்துள்ளது என்றார்.
நாட்டில் மீட்சி நிலையைக் கொண்டு வருவதற்கு இக்கருத்தரங்கில் மலேசிய எதிர்கால கழகத்திலிருந்து 12 ஆய்வாளர்களும் பொது பல்கலைக்கழகம், தனியார் பல்கலைக்கழகத்திலிருந்து 30 ஆய்வாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டின் வறுமை நிலை, பாதிக்கப்படக்கூடிய குழுவுக்கு அதிகாரமளிப்பது, சிறிய - நடுத்தர தொழில்முனைவர்களுக்கு ஆற்றல் சக்தியை மேம்படுத்துவது, சுற்றுலாத்துறை, பசுமை பொருளாதாரத்தை நிலைத்தன்மையாக்குவது ஆகியவை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்றார்.

நேற்று காலை இங்குள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் பொருளாதார மீட்சி - சமூக நல்லிணக்கம் எனும் தேசிய கருத்தரங்கைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார். கடந்த 30.6.2022ஆம் தேதி வரை  இ-காசே புள்ளி விவரப்படி, நாட்டில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர் பரம ஏழையாக உள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 45 ஆயிரம் பேராக மட்டுமே இருந்தது. மிகவும் கவலைப்படக்கூடிய விஷயம் என்னவெனில் சுமார் 6 லட்சம் குடும்பங்கள் எம்40 நிலையிலிருந்து ஏழை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோவிட் - 19 தொற்றின் தாக்கத்தினால் அதிகமானோர் பி40 நிலையிலிருந்து பி60 நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர் என்றார்.

விலைவாசி, வாழ்க்கைச் செலவின உயர்வு, வேலை இழப்பு, வருமானம் குறைந்து போனதால் பலர் இன்னும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படா விட்டால், அவர்களைப் காப்பாற்ற முடியாமல் நிலைமை மேலும் மோசமாகலாம். இதனால் நாட்டில் வறுமை நிலை மேலும் மோசமாகும் என்பதோடு, பல வியாபாரங்கள் மூடப்படும், உற்பத்திகள் குறையும். இறுதியில் தேசிய மீட்சி நிலைக்கு பெரும் தடையை ஏற்படுத்தி விடும் எனவும் அவர் சொன்னார்.

எனவே, மக்களுக்கு நேர்த்தியான முறையில் உதவும் வழிகளை எளிதாக்க ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இப்போது அனைத்து அமைச்சுகளும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. எனினும், நாட்டில் இன்னும் சில தனிநபர்களும் குறிப்பிட்ட தரப்பினரும் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர். அதேநேரத்தில் மேலும் சில தரப்பினர் இரண்டு, மூன்று தரப்பினரிடமிருந்து உதவிகளைப் பெற்று வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளும்போது, பொருளாதார இடைவெளி, வறுமை நிலைக்கு நாம் முன்னுரிமை அளிப்பது அவசியமாகும்.

நாட்டில் தேசிய மீட்சி நிலையை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல இந்நடவடிக்கை மிகவும் அவசியமாகும் என்றார். நாட்டின் தேசிய மீட்சி நிலையில் யாரும் பின்தங்கி விடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதே இம்மன்றத்தின் நோக்கமாகும்.
அரசாங்கம் விரும்புவதுபோல் புறநகர் மக்கள், சபா, சரவா பூமிபுத்ராக்கள் 2030ஆம் ஆண்டுக்கான தூரநோக்க செழிப்பு திட்டத்தில் பயனடைய வேண்டும். மலேசிய புள்ளிவிவர இலாகாவின் தகவலின்படி இவ்வாண்டு ஜூலை மாதம் 4.4 விழுக்காடாக இருந்த நாட்டின் பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 4.7 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

நாட்டில் 5.3 விழுக்காட்டினர் வேலையில்லாமல் இருந்தது இவ்வாண்டு ஜூலை மாதம் 3.7 விழுக்காடாகக் குறைந்தது. எனினும், நாம் இதனால் பெரு மூச்சுவிட முடியாது. காரணம் இது அனைத்தும் தற்காலிகமானதே.
அடுத்தாண்டு நாடு மிகவும் மோசமான அளவில் பொருளாதார சவாலை எதிர்நோக்கும் வேளையில், நாட்டில் வேலையில்லாதோரின் எண்ணிக்கையும் மேலும் உயரலாம் என்றார். எனவே, முழு அளவில் மீட்சித் திட்டத்தைக் கொண்டு வருவதில் அரசாங்கம் இறங்கும் அதேவேளையில், மக்களுக்கு சமூக நல உதவிகளை வழங்குவது அரசாங்கத்தின் முக்கியப் பணியாக அமைய வேண்டும் எனவும் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் வலியுறுத்தினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img