திங்கள் 09, டிசம்பர் 2024  
img
img

எங்கே போகிறது இந்த பட்ஜெட் தொகை?
சனி 08 அக்டோபர் 2022 15:35:56

img

இந்தத் திட்டத்திற்காக 37,230 கோடி வெள்ளி ஒதுக்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டு இந்தத் தொகை 32,210 கோடி வெள்ளியாக இருந்தது.  அடுத்தாண்டு இந்தத் தொகை 4,200 கோடி வெள்ளியாக அதிகரிக்கப்படுகிறது. அடுத்தாண்டு ஒதுக்கப்படுகின்ற தொகையில் 27,230 கோடி வெள்ளி நடைமுறை செலவினங்களுக்காகவும் 9,500 கோடி வெள்ளி மேம்பாட்டுச் செலவினங்களுக்காகவும் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் கூறினார்.

அந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கின்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:

* 5,002 கோடி வெள்ளி - எம்ஆர்டி 3 ரயில் சேவைத் திட்டங்களுக்காக.
* ஒரு கோடி வெள்ளி - உள்நாட்டு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களை தொடர்ந்து நிலைநாட்டுவதற்காக.
* 50 லட்சம் வெள்ளி - தேசிய மொழித் திட்டங்களை வலுப்படுத்துவதற்காக.
* 21 கோடியே 60 லட்சம் வெள்ளி - நாடு முழுவதும் உள்ள ஆறுகளை தூய்மைப்படுத்துவதற்காக.
* 3 கோடியே 60 லட்சம் வெள்ளி - யானைகள் மற்றும் அரிய வகை உயிரினங்களை பாதுகாப்பதற்காக.
* 2025ஆம் ஆண்டுக்குள் 10 கோடி  - மரங்களை நடும் திட்டம்.
* மின்னியல் வாகனங்கள் தயாரிப்புத் துறையில் 100 விழுக்காடு வருமான வரி விலக்கு.

* 16 கோடியே 50 லட்சம் வெள்ளி - மின்சார உற்பத்தித் திட்டங்களுக்காக.
* 15 கோடி வெள்ளி - பசுமைத் திட்டங்களின் மேம்பாடுகளுக்காக.
* 300 கோடி வெள்ளி - பசுமை தொழில்நுட்ப நிதி உதவித் திட்டத்திற்காக.
* 130 கோடி வெள்ளி - இணையதள சேவையை மேம்படுத்துவதற்காக
* 800 கோடி வெள்ளி  - ஜெண்டேலா திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக.
* 5 கோடி வெள்ளி - பெண்கள் குத்தகையாளர் மேம்பாட்டு உதவிகளுக்காக .
* 50 கோடி வெள்ளி -  உள் கட்டமைப்புத் திட்டங்களுக்காக
* 370 கோடி வெள்ளி - சிறிய, நடுத்தர மேம்பாட்டுத் திட்டங்களுக்காக
* 15 கோடி வெள்ளி - தாய்லாந்து மற்றும் கலிமந்தான் எல்லைகளில் புதிய நகர மேம்பாட்டுத் திட்டங்களுக்காக.
* 3 கோடி வெள்ளி - இலக்கவியல் மைய மேம்பாடுகளுக்காக.

* 6 கோடியே 30 லட்சம் - மனித மூலதன மேம்பாடுகளுக்காக.
* 1 கோடியே 10 லட்சம் - நடமாடும் வங்கித் திட்டங்களுக்காக.
* 520 கோடி வெள்ளி -மாநிலங்களில் சாலைகளின் பராமரிப்புக்காக.
* 5 கோடியே 40 லட்சம் வெள்ளி - கிராமப்புறங்களில் 85 புதிய பாதைகள் நிர்மாணிப்புக்காக.
* 47 கோடி வெள்ளி - கிராமப்புறங்களில் மின்சார கட்டமைப்பு மேம்பாடுகளுக்காக.
* 250 கோடி வெள்ளி - சபா, சரவா மாநில மேம்பாடுகளுக்காக.
* 150 கோடி வெள்ளி - இஸ்லாமிய மேம்பாட்டுத் திட்டங்களுக்காக
* 1,140 கோடி வெள்ளி - அரசாங்க கட்டடங்களின் பராமரிப்பு மற்றும் சீரமைப்புக்காக.
* 1,650 கோடி வெள்ளி - முக்கிய போக்குவரத்து உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக.
* 1 கோடியே 20 லட்சம் வெள்ளி - மாற்றுத் திறனாளி விளையாட்டாளர்களுக்கு உதவுதற்காக.

* 15 கோடி வெள்ளி - நாடு முழுவதும் விளையாட்டு மையங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக
* 10 கோடி வெள்ளி - உள்ளூர் திரைப்படக் கலைஞர்களுக்காக.
* 5 கோடி வெள்ளி - உள்ளூர் திரைப்படத் தொழில் வளர்ச்சிக்காக
* 1 கோடி வெள்ளி - மலேசிய பிரச்சார மேம்பாட்டுத் திட்டத்திற்காக
* 4 கோடி வெள்ளி - சிறு தோட்டத்தொழில் உரிமையாளர்களுக்காக
* 31 கோடி வெள்ளி - ரப்பர் மறுநடவு திட்டங்களுக்காக.
* 36 கோடி வெள்ளி - ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக
* 5 கோடி வெள்ளி - விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களுக்காக
* 600 வெள்ளி - அரசு ஊழியர்களுக்கான நோன்புப் பெருநாள் உதவித் தொகையாக
* 350 வெள்ளி - ஓய்வு பெற்ற 10 லட்சம் அரசாங்க பணியாளர்களுக்காக.

* 700 வெள்ளி - கிரேட் 56 பிரிவிற்கு கீழ்பட்ட 13 லட்சம் அரசு ஊழியர்களுக்காக.
* 100 வெள்ளி - கிரேட் 11 முதல் கிரேட் 56 வகையிலான அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக
* 2 கோடி வெள்ளி - நகர்ப்புற உருமாற்ற மையங்களுக்காக (யுடிசி)
* 40 கோடி வெள்ளி - தேசிய இயற்கை பேரிடர் மன்றத்திற்காக
* 200 கோடி வெள்ளி - வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக.
* 100 கோடி வெள்ளி - விவசாயம் மற்றும் உணவுத் திட்டங்களுக்காக
* 2 கோடியே 80 லட்சம் வெள்ளி - சிறைச்சாலை பணியாளர்களின் குடியிருப்புத் திட்டங்களுக்காக
* 4 கோடியே 20 லட்சம் வெள்ளி - போலீஸ் அதிகாரிகள் குடியிருப்புப் பகுதிகளை மேம்படுத்த
* 11 கோடி வெள்ளி - ஆயுத படையினரின் இல்லங்களை பராமரிக்க.
* 1,448 கோடி வெள்ளி - தற்காப்பு அமைச்சின் திட்டங்களுக்காக.

* 400 கோடி வெள்ளி - ராணுவத்திற்கு புதிய ஆயுதங்களை வாங்குவதற்காக.
* 8 கோடி வெள்ளி - சொக்சோ, சுகாதார திட்டங்களுக்காக.
* 73 கோடி வெள்ளி - பி40 பிரிவைச் சேர்ந்த 15 லட்சம் பேரின் நலனை கருத்தில் கொண்டு மை சலாம் திட்டத்திற்காக.
* 180 கோடி வெள்ளி - புதிய மருத்துவ மையங்களை நிர்மாணிப்பதற்காக.
* 42 கோடி வெள்ளி - மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களின் மறுசீரமைப்புக்காக.
* 490 கோடி வெள்ளி - பொது சுகாதார நலத் திட்டங்களுக்காக.
* 1 கோடி வெள்ளி - உள்நாட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த.
* 2 கோடி வெள்ளி - சிறப்பு பள்ளிகளின் தரத்தையும் வசதிகளையும் மேம்படுத்த
* 1 கோடி வெள்ளி - மாற்றுத் திறனாளிகளுக்கான இ-ஹெய்லிங் பற்றுச் சீட்டுகளுக்காக.
* 120 கோடி வெள்ளி - நிரந்தரமாக செயலிழந்து விட்டவர்களுக்காக சிறப்பு உதவித்தொகை.

* 100 கோடி வெள்ளி - முதியவர்களின் சமூகநல உதவிக்காக.
* 36 கோடியே 70 லட்சம் வெள்ளி - 12,400 வீடுகளைக் கொண்ட மக்கள் குடியிருப்பு நிர்மாணிப்புத் திட்டங்களுக்காக.
* 380 கோடி வெள்ளி - உபகாரச் சம்பளம் மற்றும் கல்விக் கடன்களுக்காக.
* 1,510 கோடி வெள்ளி - உயர்கல்வி அமைச்சுக்காக.
* 43 கோடி வெள்ளி - சிலாங்கூர் உட்பட ஐந்து மாநிலங்களில் புதிதாக பள்ளிகள் நிர்மாணிப்பதற்காக.
* 110 கோடி வெள்ளி - தாய்மொழிப் பள்ளிகள், சமயப் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளின் பராமரிப்புக்காக.
* 77 கோடி வெள்ளி - பள்ளிகளின் இலவச உணவுத் திட்டத்திற்காக.
* 5,560 கோடி வெள்ளி  - கல்வி அமைச்சின் பணிகளுக்காக.
* 75 கோடி வெள்ளி - 8 லட்சம் தொழிலாளர்களின் ஆற்றல் திறனை அதிகரிக்கும் திட்டங்களுக்காக.
* 20கோடி வெள்ளி - அத்தியாவசியப் பொருட்களின் விநியோகச் செலவுகளுக்காக.
* 23 கோடி வெள்ளி - பெண் தொழில் முனைவர்களின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக.
* 100 கோடி வெள்ளி - வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக
* 78 கோடி வெள்ளி - மலேசியக் குடும்ப உதவித் திட்டங்களுக்காக

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img