டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் மன்றத்திற்குத் தலைமைதாங்குகிறார். மூத்த அமைச்சர்கள், அமைச்சர்கள், அரசாங்க மூத்த அதிகாரிகள், எதிர்க்கட்சி பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள், சமூகம் மற்றும் சுகாதார துறையினை சார்ந்த நிபுணர்கள் இம்மன்றத்தில் இடம் பெற்றுள்ளனர். எம்பிஎன்.னின் முதன்மை நோக்கம் என்னவெனில் இம்மன்றத்தின் நோக்கங்கள் எல்லாம் சீராக சிறப்பாக நிறைவேற்றம் காண வேண்டும் என்பதே. திட்டங்களின் நன்மைகள் மற்றும் பயன்கள் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மலேசிய மக்களின் மன மகிழ்ச்சியான வாழ்க்கை மிகமுக்கியம் என்று டாக்டர் ஹர்த்தினி வலியுறுத்தினார்.
சாமான்ய மக்கள் வாழ்வாதாரத்திற்காக சிரமப்படுகிறார்கள். உண்ண உணவும் உடுத்த உடையும் குடியிருக்க உறைவிடமும் வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகள். உணவின்றித் தவிக்கும் தாய் பிள்ளைகளுக்கு தாய்ப்பால் ஊட்டமுடியுமா? பசியோடு இருக்கும் பிள்ளை பள்ளிக்கு நடைப்பயணமாக செல்ல முடியுமா? பாலர் பள்ளிகள், குழந்தை பராமரிப்பு இல்லங்கள் போன்றவை இழுத்து மூடப்பட்டன. பி60 நடுத்தர வருமான பிரிவினர் பி40 பிரிவு என்ற குறைந்த வருமான பிரிவினராக உருமாற்றம் அடைய வேண்டிய நிலை. தேசிய மீட்சி மன்றம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய ஓர் அவசர நிலை.
அதே வேளையில் மக்களின் சுகாதாரத்தையோ ஆரோக்கிய நலனையோ நாம் முற்றாக புறக்கணித்துவிட முடியாது. மீட்சி மன்றம் இதில் ஒரு போதும் அலட்சியம் காட்டாது. இதற்கு முதன்மை கவனம் செலுத்தி வரும். மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு சவால் களையும் சங்கடங்களையும் சமாளிக்கும் வகையில் தேசிய மீட்சி மன்றத்தின் ஒவ்வோர் அணுகு முறையும் அமைந்து வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பிலிருந்து நாம் கட்டம் கட்டமாக மீட்சி பெறுவதற்கான கட்டமைப்புகளை இந்த தேசிய மீட்சி மன்றம் ஏற்படுத்தி தந்துள்ளது. எத்தனை தடுப்பூசிகள் தேவை, நாள் தோறும் ஏற்படும் பெருந்தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை மற்றும் சுகாதார துறையின் ஆற்றலையும் அடைவு நிலையையும் இம்மன்றம் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. தேசிய மீட்சி மன்றத்தின் கீழ் அனைத்து மாநிலங்களும் நான்காவது கட்டத்திற்கு திரும்பி 2022 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் ஆதேதியன்று பாதுகாப்பான நிலையினை பெற்றன.
தேசிய மீட்சி மன்றத்திற்கு செயல் நடவடிக்கைகள் சம்பந்தமான விவரங்களை <www.pemulihannegara.gov.my> என்ற அகப்பக்கத்தில் பெற்று கொள்ளலாம். சாமான்ய மக்களின் விவகாரத்தை எம்பிஎன் என்ற தேசிய மீட்சி மன்றம் கடுமையாக கருதி ஆக்ககரமான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. அவசரகதியில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. 2021 ஆம் ஆண்டு எம்பிஎன் கூட்டத்தின் பரிந்துரையின் பேரில் ஹாசானா அறவாரியம் சவ்கிட் அறவாரியத்தின் ஒத்துழைப்புடன் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகள் நல்கியது. பல்வேறு அரசு சாரா அமைப்புகள் இத்தகைய பரிவுமிக்க பணிக்கு பக்கபலமாக இருக்கின்றன. முதலாவது கட்டத்தில் 7,737 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டது.
இரண்டாவது கட்டத்தில் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் உதவி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 16 பரிந்துரைகளில் ஒன்று டாக்டர் ஹர்த்தினியால் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்று. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உரிமைக்குரலாக விளங்கும் டாக்டர் ஹர்த்தினி ஜைனுதின் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை பேணும் வண்ணம் எதிர்வரும் எம்பிஎன் கூட்டத்தில் ஒரு தொடர்ச்சியான பரிந்துரை திட்டத்தை சமர்ப்பிக்க விருக்கிறார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்