img
img

பொதுமக்களுக்கு என்ன வேண்டும்? 15 ஆவது பொதுத்தேர்தலை முன்னிட்டு ஆய்வு
வியாழன் 22 செப்டம்பர் 2022 16:33:13

img

கோலாலம்பூர், செப். 19-

நாட்டின் 15 ஆவது பொதுத்தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை மையமாக வைத்து ஓர் ஆய்வு இன்று தொடங்கி மேற்கொள்ளப்படுகிறது. நாட்டின் முதன்மை நாளிதழ்களான சினார் ஹரியான், ஆஸ்ட்ரோ அவானி, சின் சியூ டெய்லி, தெ ஸ்டார் மற்றும்  மலேசிய நண்பன் ஆகியன இதில் சம்பந்தப்பட்டுள்ளன. முன்னணி ஆய்வுக் கழகங்களான இல்ஹாம் செண்டர், O2  ஆய்வு மற்றும் மலேசிய சீனக்கல்விக்கான மையம் ஆகியன இந்த ஆய்வினை மேற்கொள்வதில் ஆதரவுக்கரம் நீட்டுகின்றன. பொதுமக்களின் கருத்துகளை சேகரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வுகள் இதுவே முதல் மாதிரியான ஒரு நடவடிக்கையாகும்.

இந்த ஆய்வு இன்று செப்டம்பர் 19 தொடங்கி வரும் அக்டோபர் 9 ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்படும்.

கடந்த 14 ஆவது பொதுத்தேர்தலில் யாருமே சற்றும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய அரசியல் சுனாமியை நாடு எதிர்நோக்கியிருந்தது. இதில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றதானது, இனியும் ஒரே கட்சி, ஒரே கூட்டணியை மக்கள் நம்பியிருக்கவில்லை என்பதை தெளிவாக உணர்த்தியது. ஆட்சி புரியும் கட்சி அல்லது கூட்டணி முறையாக நாட்டை நிர்வகிக்கவில்லை என்றால் அதை மாற்றுவதற்கு மக்கள் தயங்குவதில்லை. என்றாலும் சுனாமி வீசுவது அத்தேர்தலுடன் நின்று விடவில்லை. ஒரே தவணையில் மூன்று பிரதமர்கள் மாற்றம், அரசாங்கங்கள் மாற்றம் என மலேசியர்கள் அதிரடி திருப்பங்களை சந்தித்து வந்தனர். அரசியல் நெருக்கடி இன்றும் உணரப்பட்டுத்தான் வருகிறது.

நாடு முழுவதும் பல்வேறு இனம் மொழி சார்ந்த, வயது வரம்பின்றி அனைவரிடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் இதில் கலந்து கொள்வது அவசியமாகும். வரும் 15 ஆவது பொதுத்தேர்தலை நோக்கி மேற்கொள்ளப்படும் மிகவும் முக்கியமான ஓர் ஆய்வாகவும் இது விளங்கும். எனவே பொதுமக்கள் மனம் திறந்து பேச வேண்டும். சரியான தேர்வைச் செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். 

15-வது பொதுத் தேர்தலை (ஜி.இ.) நோக்கியப் : https://forms.gle/rJuxyLeA93NZdmBbA

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img