கோலாலம்பூர், செப். 10
பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாத ஒரு பணிக்குழு எதற்காக? அதை உடனடியாக கலைத்து விடுங்கள் என்று ஜசெக தலைவர் லிம் குவான் எங் நேற்று குறிப்பிட்டார்.
ஓபிஆர் என்ற உடனடி வட்டி விகிதம் 2.50 விழுக்காடாக உயரும் என்று பேங்க் நெகாரா அறிவித்துள்ள நிலையில் இப்படி ஒரு பணிக்குழு செயலற்றது, தேவையற்றது, ஆற்றல் இல்லாதது என்பது தெரிந்து விட்டது என்றார் அவர்.
பண வீக்கத்தை கட்டுப்படுத்தவே இந்த ஓபிஆர் வட்டி விகிதம் அமல்படுத்தப்படுவதாக பேங்க் நெகாரா கூறுகிறது. அமைச்சர் அனுவார் மூசா தலைமையிலான இந்த பணிக்குழு இனி எதற்காக?
பண வீக்கம் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று அனுவார் மூசா தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் நாட்டு மக்களுக்கு குறிப்பாக கடன் பெற்றுள்ள அடித்தட்டு மக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்துகின்ற மத்திய வங்கியின் இந்த கடன் விகிதத்தை அவர்களால் தடுக்க முடியவில்லையே என்றார் அவர். இதோடு 3 முறை இந்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. வட்டி விகிதத்தை மத்திய வங்கி உயர்த்தியிருப்பதன் மூலம் அனுவார் மூசாவின் அறிக்கையை அது புறந்தள்ளியிருக்கிறது என்றே அர்த்தமாகிறது.
கடந்த ஜூன் மாதம் 3.4 விழுக்காடாக இருந்த பயனீட்டாளர்களுக்கான பொருள் விலைகள் ஜூலை மாதத்தில் 4.4 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. அப்படி என்றால் விலைவாசிகளை கட்டுப்படுத்தவும் பண வீக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்த பணிக்குழு என்ன செய்கிறது. பண வீக்கத்திற்கு எதிராக ஒரு ஜிகாத் புனிதப் போரை தொடக்க இந்த குழு செயல்படும் என்று அனுவார் மூசா வீரவசனம் பேசியிருந்தார். ஆனால் அப்படி ஒன்று நடக்காத போது இப்படி ஒரு குழுவை கலைத்து விடுவதே நல்லது என்றார் அவர்.
பண வீக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் அமைத்த பணிக்குழுவில் அனுவார் மூசா தலைவராகவும் நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல், உணவுத் துறை அமைச்சர் ரோனால்ட் கேண்டி, உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் துறை அமைச்சர் அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்