நியூயார்க், ஜன.19- புதிய அமெரிக்க அதிபராக தொழில் அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை பதவியேற்கவிருக்கும் நிலையில், இந்தப் பதவியேற்பு விழா உட்பட பல முனைகளில் பயங்கரவாத அமைப்புகள் டிரம்பை குறி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்கைய்டா, ஐ.எஸ் தீவிரவாத இயக்கங்களின் அதிகாரப்பூர்வ பிரச்சார ஏடுகள், டிரம்பிற்கு எதிரான படுகொலைத் திட்டம் குறித்து தகவல்களை வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளில்லா சிறுரக விமானங்களைப் பயன்படுத்தி, முக்கியமான ஒரு விழாவிற்கு குறிவைக்கும்படி அந்த இயக்கங்களின் உறுப்பினர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன. அவற்றின் நோக்கம், டிரம்பின் பதவியேற்பு விழாவில் பயங்கரவாதத் தாக்குதலைத் தூண்டிவிடுவது தான் எனத் தெரியவந்துள்ளது. இப்பதவியேற்பு விழாவின் போது லட்சக்கணக்கில் மக்கள் திரள்வார்கள் என்பதால் அது தாக்குதலுக்கு எளிதான இலக்காக இருக்கும் என்று அல்கைய்டாவின் ஏடான் ‘இன்ஸ்பாயர்’ சுட்டிக் காட்டியுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்