புத்ராஜெயா, ஏப். 30-
இணையவழி சந்திப்பு ஏற்பாட்டு முறையை (எஸ்.டி.ஓ.) ரத்து செய்யவிருக்கும் குடிநுழைவுத்துறை, மலேசிய சர்வதேச கடப்பிதழின் விண்ணப்பம் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடப்பிதழ் விநியோக அலுவலகங்கள், சேவை முகப்பிடங்கள் ஆகியவற்றின் சேவை நேரத்தை நீட்டிக்கவிருக்கிறது.
கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வெளியே அமைந்துள்ள அனைத்து கடப்பிதழ் விநியோக அலுவலகங்களுக்கான எஸ்.டி.ஓ. மே 9ஆம் தேதியிலிருந்தும் கோலாலம்பூர், சிலாங்கூர், ஜொகூர்பாரு, நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய இடங்களிலுள்ள அலுவலகங்களுக்கான எஸ்.டி.ஓ. மே 16ஆம் தேதியிலிருந்தும் ரத்து செய்யப்படும் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் கைருல் ஸைமி டாவுட் அறிவித்தார்.
எஸ்.டி.ஓ. மூலம் சந்திப்புக்கான தேதியை பெற்றவர்கள் மே 16லிருந்து அந்த தேதியை பின்பற்ற வேண்டியதில்லை என்று அவர் நேற்று அறிக்கையொன்றில் தெரிவித்தார். கோலாலம்பூர், சிலாங்கூர், புத்ராஜெயா, ஜொகூர்பாரு, நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய இடங்களில் உள்ள அனைத்து கடப்பிதழ் விநியோக அலுவலகங்களும் மே 14ஆம் தேதி தொடக்கம் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8 மணியிலிருந்து பிற்பகல் 1 மணி வரை செயல்படும் என்றும் கைருல் அறிவித்தார்.
கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் ஜொகூர்பாருவில் உள்ள நகர்ப்புற உருமாற்ற மையங்களில் (யு.டி.சி.) அமைக்கப்பட்டுள்ள குடிநுழைவுத்துறை சேவை முகப்பிடங்களின் சேவை நேரம் மே 16ஆம் தேதி தொடக்கம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படும்.
ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கடப்பிதழ் விண்ணப்பங்களும் புதுப்பித்தல்களும் கிடுகிடுவென உயர்ந்ததைத் தொடர்ந்து இணையவழி முறை ஸ்தம்பித்தது. இதனால் மலேசியர்கள் சிரமங்களை எதிர்நோக்கினர் என்று கைருல் கூறினார். ஏப்ரல் முதல் தேதியிலிருந்து 26ஆம் தேதி வரை நாடு முழுவதும் 151,173 கடப்பிதழ்களை விநியோகிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.
சராசரி நாளொன்றுக்கு 8,000 கடப்பிதழ் விண்ணப்பங்கள் வந்து கிடைத்ததாகவும் எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் வந்து கிடைத்த விண்ணப்பங்களுடன் ஒப்பிடுகையில் இது சுமார் 40 விழுக்காடு அதிகம் என்றும் அவர் தெரிவித்தார். புதிதாக விண்ணப்பம் செய்வோர், மூத்த குடிமக்கள் உடல்பேறு குறைந்தவர்கள், சிறார்கள், ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் ஆகியோர் புத்ராஜெயாவில் உள்ள சேவை முகப்பிடங்களுக்கு நேரே செல்லலாம் என்று கைருல் குறிப்பிட்டார்.
எனினும் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை பொறுத்த வரையில், புத்ராஜெயா கடப்பிதழ் அலுவலகம் இணையவழி செய்யப்படும் விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலிக்கும் என்று அவர் விவரித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்