கோலாலம்பூர், ஏப். 12-
அண்மையில் பி.டி.பி.டி.என். 25ஆம் ஆண்டு அதிர்ஷ்டக் குலுக்கல் Kempen Cabutan Wow 25 Tahun PTPTN என்ற திட்டம் துவங்கப்பட்டது. பி.டி.பி.டி.என். மெனாரா அரங்கில் இதன் தலைவர் டத்தோ வான் சைபுல் வான் ஜான் தொடக்கி வைத்தார். தொடக்க விழா பி.டி.பி.டி.என். அதிகாரத்துவ முகநூலிலும் தொலைக்காட்சி யுடியூப்பிலும் நேரடி ஒளிபரப்பு கண்டது.
பி.டி.பி.டி.என். அதிர்ஷ்டக் குலுக்கல் தொடக்க விழாவில் பி.டி.பி.டி.என். தலைமை செயல்முறை அதிகாரி அகமட் டசுக்கி அப்துல் மஜிட், வோங் லியோங் எம்.எஸ்.ஐ.ஜி. தக்காஃபுல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் அஸ்ரி ஒமார், முகமட் ஜப்னி அப்துல் ஜாலில், கிரேட் ஈஸ்டர்ன் தக்காஃபுல் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவின் தலைவர் புவான் நோராஸ்லின் முகமட் டஹாரி, பி.டி.பி.டி.என். நிர்வாகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Cabutan Wow எஸ்.எஸ்.பி.என். பிளஸ் 2021 மற்றும் Win SSPN-i 2021 என்ற திட்டத்தில் பங்கேற்ற வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் இதில் இடம் பெற்றது. சேமிப்பு கலாச்சாரத்தை பேணுவதில் பி.டி.பி.டி.என். எப்போதுமே முதன்மை கவனம் செலுத்தி வருகிறது. உயர்கல்வி நோக்கத்தை அடைவதற்கு சரியான நிதி திட்டமிடுதல் அவசியம். 2021-2025ஆம் ஆண்டு பி.டி.பி.டி.என். வியூகத் திட்டத்தின் முதலாவது மைய நோக்கத்திற்கு ஏற்ற ஒன்று இச்செயல். எஸ்.எஸ்.பி.என். என்ற கல்வி சேமிப்புத் திட்டமானது கல்வி சேமிப்பின் முதன்மையான உற்பத்திப் பொருள் திட்டமாகும். கல்வி சேமிப்புத் திட்டத்திற்கு ஊக்கமூட்டப்பட்டு வருகிறது. படிப்பு நிறைவு பெற்றவுடன் கடன் சுமையினை எதிர்நோக்கும் நிலைமை மாணவர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது.
சமுதாயம் கடனை சார்ந்திருக்கும் நிலையினை கல்வி சேமிப்பு குறைப்பதாக இருக்கும். கல்வி சேமிப்புக்கு ஆக்கமும் ஊக்கமும் தரும் வகையில் பல்வகை பிரச்சார இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Kempen Cabutan Wow என்பது பி.டி.பி.டி.என். வருடாந்திர பிரத்தியேகத் திட்டமாகும். இந்த பரிசுத் திட்டத்திற்காக முதலீட்டாளர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். Kempen Cabutan Wow என்பது எஸ்.எஸ்.பி.என். பிளஸ் திட்டத்திற்காக மட்டும் உரிய ஒன்று.
இப்போது இத்திட்டம் Simpan SSPN Prime திட்டத்திற்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. 25ஆம் ஆண்டு அதிர்ஷ்டக் குலுக்கல் திட்டமானது பி.டி.பி.டி.என். சேமிப்புத் திட்டத்தை ஊக்குவிப்பதாக இருக்கிறது. கவர்ச்சியான வெகுமதிகள். ஏறத்தாழ வெ. 10 லட்சம் வெகுமதித் தொகை ஆக மொத்தம் 350 வெற்றியாளர்கள் காத்திருக்கிறார்கள். 22 வெற்றியாளர்களுக்கு ஹோண்டா டேஸ் ஆறுதல் பரிசாக கிட்டும். பேபி கூ அதிர்ஷ்டக் குலுக்கல் வழி ரொக்கப் பண வெகுமதி இரண்டரை லட்சம். 250 வெற்றியாளர்களுக்கு உரியது இது. சிரி அதிர்ஷ்டக் குலுக்கல் திட்டத்தின் கீழ் ரொக்கப் பண வெகுமதி இரண்டு லட்சம். இது 75 வெற்றியாளர்களுக்கு உரியது.
குலுக்கல் மூன்று வகை. Cabutan Tahunan Jubli Perak என்ற அதிர்ஷ்டக் குலுக்கலின் முதலாவது பரிசு மெர்சடிஸ் பென்ஸ் கார். இரண்டாவது பரிசு ரொக்கம் ஒரு லட்சம் வெள்ளி. மூன்றாவது பரிசு 50,000 வெள்ளி ரொக்கம். இந்த மூன்று வகை அதிர்ஷ்டக் குலுக்கல் திட்டத்தில் பங்கேற்பதற்கு முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 50 வெள்ளி நிகர சேமிப்பு வைத்திருந்தாலே போதும்.
எஸ்.எஸ்.பி.என். சேமிப்புத் திட்டத்தின் பலனும் பயனும் என்னவெனில் முதலீட்டாளர்களுக்கு 8,000 வெள்ளி வரை வரி விலக்கு கிட்டும். தக்காப்புல் காப்புறுதி பாதுகாப்பு உண்டு. கவர்ச்சிகரமான டிவிடெண்ட் வழங்கப்படுகிறது. இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரையில் 5.29 மில்லியன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 11.51 பில்லியன் வெள்ளி இந்த சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்