கோலாலம்பூர்,
தேசிய உயர்கல்வி நிதியுதவிக் கழகமான பி.டி.பி.டி.என்., தங்கள் கடனை திரும்பச் செலுத்தும் மாணவர்களுக்காக சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.
கடனை முழுமையாகச் செலுத்த முன்வரும் மாணவர்களுக்கு 15 விழுக்காடும், கடனில் குறைந்தது 50 விழுக்காட்டைச் செலுத்த விரும்பும் மாணவர்களுக்கு 12 விழுக்காடும், நிர்ணயிக்கப்பட்ட முறையின் கீழ் தங்கள் சம்பளத்தில் குறைப்புச் செய்வதன் வாயிலாகவோ அல்லது வங்கிக் கணக்கிலிருந்து செலுத்துவதன் வாயிலாகவோ கடனை திரும்பச் செலுத்த விரும்பும் மாணவர்களுக்கு 10 விழுக்காடு கழிவையும் பி.டி.பி.டி.என். வழங்குகிறது.
இதன் தொடர்பில் மாணவர்களுக்கு சில சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருக்கலாம். அதற்கான விளக்கத்தை பி.டி.பி.டி.என். வழங்குகிறது. முதலில், 15 விழுக்காட்டுக் கழிவைப் பெறுவதற்கு யார் தகுதியடைகிறார்கள் என்பதை பார்ப்போம்.
2021 நவம்பர் முதல் தேதியிலிருந்து 2022 ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் பாக்கி வைத்திருக்கும் தொகையை மொத்தமாகச் செலுத்த நினைக்கும் பி.டி.பி.டி.என். கடன் பெற்ற அனைத்து மாணவர்களும் இதற்குத் தகுதி பெறுகின்றனர். அமலாக்க நடவடிக்கையை எதிர்நோக்கிய மாணவர்களுக்கும் இது பொருந்தும்.
பாக்கி உள்ள மொத்தத் தொகையின் அடிப்படையில் இந்த 15% கணக்கெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் இந்த 15% கழிவு வழங்கப்படுகிறது. மறு மாதம் 7 ஆம் தேதி தொடங்கி தங்கள் கடன் அறிக்கை வாயிலாக இதற்கான விவரங்களை கடன் பெற்றவர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இச்சலுகையைப் பெற்று கடனை அடைத்த 14 நாட்களுக்குப் பிறகு கடனை அடைத்ததற்கான கடிதம் அனுப்பி வைக்கப்படும். பி.டி.பி.டி.என். அதிகாரத்துவ அகப்பக்கம் வாயிலாகவும் இக்கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம். இதில் மற்றொரு கேள்வியும் மாணவர்களுக்கு எழலாம். ஊழியர் சேம நிதி, வங்கி அல்லது மின்னியல் வாயிலாக இக்கல்விக் கடன் தொகை திருப்பிச் செலுத்தப்பட்டாலும் இந்த 15% சலுகை கிடைக்குமா?
கிடைக்கும். ஆனால், ஒரே மாதத்தில் பி.டி.பி.டி.என். இதனைப் பெற்றால் மட்டுமே இதற்குத் தகுதிபெற முடியும். ஒவ்வொரு மாதமும் 27 ஆம் தேதிக்குள் பணத்தைச் செலுத்தும்படி கடன் பெற்றவர்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.
ஒரு வேளை ஊழியர் சேம நிதி வாயிலாக கடனை திருப்பிச் செலுத்தும்போது சிறப்புக் கழிவுக்குப் பிறகு கூடுதல் தொகை செலுத்தப்பட்டிருந்தால் அது திரும்பக் கிடைக்குமா? ஆம், கூடுதலாகச் செலுத்தப்பட்ட தொகை கடன் பெற்றோரின் ஊழியர் சேம நிதி 2 ஆவது கணக்கில் சேர்க்கப்படும். எனினும் IPT / penajaவாயிலாக செலுத்தப்படும் தொகைக்கு கழிவுச் சலுகை வழங்கப்படாது. எனினும், 2022 ஏப்ரல் மாதம் இந்தச் சலுகைகள் முடிவுக்கு வரும் கடைசி மாதத்தில் கடனை திருப்பிச் செலுத்தினால் 15 விழுக்காடு கழிவு கிடைக்குமா? கிடைக்கும். 2022 ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று அல்லது அதற்கு முன்னதாக கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். அதே சமயம், கடன் முன்பணத்திலும் 15% கழிவுச் சலுகையை பி.டி.பி.டி.என். வழங்குகிறது.
சில மாணவர்கள் டிப்ளோமா, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பிற்கு தனித்தனியே கடன் பெற்றிருப்பார்கள். அவற்றில் ஒன்றுக்கான கடனை முழுமையாக அடைக்க நினைத்தால் 15% சலுகை கிடைக்குமா? கிடைக்காது. மொத்தமாக கடனை அடைத்தால் மட்டுமே இச்சலுகைக்கு தகுதி பெறுவார்கள். சிக்ரிஸ் பதிவு இருக்குமேயானால், கல்விக் கடனை முழுமையாக அடைத்ததும் 7 நாட்களுக்குள் அப்பதிவு அகற்றப்படும்.
12% சலுகைக்கான தகுதிகள்
இதனிடையே, உங்களுக்குள்ள கடன் தொகையில் பாதியளவு, அதாவது 50 விழுக்காட்டைச் செலுத்த நினைத்தால் அதற்காக 12% கழிவை பி.டி.பி.டி.என். அறிவித்துள்ளது. 2021 நவம்பர் முதல் தேதியிலிருந்து 2022 ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் பாக்கி வைத்திருக்கும் தொகையில் பாதியளவு செலுத்த நினைக்கும் மாணவர்களும் இதற்குத் தகுதி பெறுகின்றனர். இக்கழிவு மாதாந்திர தவணைக் கட்டணத்தைக் குறைக்குமா என்றால் இல்லை. பாக்கி இருக்கும் மொத்தத் தொகை மட்டுமே குறையும். மற்றபடி மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் இந்த 12% கழிவுக்கான சலுகைகளிலும் அடங்கும்.
அது போலவே 10 விழுக்காட்டிற்கான சலுகைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இவை பொருந்தும். இது குறிப்பாக சம்பளத்தில் பிடித்தம் செய்து அல்லது வங்கிக் கணக்கு வாயிலாக செலுத்தப்படுவது உட்படும்.
தங்களுக்கு எவ்வளவு கடன் பாக்கி உள்ளது என்பதை மாணவர்கள் எவ்வாறு சரிபார்க்க முடியும்?
பி.டி.பி.டி.என். அதிகாரப்பூர்வ அகப்பக்கம் இதற்கு வழி காட்டும். நீங்கள் வலம் வர வேண்டிய அகப்பக்க முகவரி: https://www.ptptn.gov.my/PengesahanBakiPenyelesaianHutang/Utama என்பதாகும். அல்லது https://www.ptptn.gov.my/hubungi-ptptn என்ற இணைப்பில் விற்பனை பிரிவு அதிகாரியுடன் தொடர்பு கொள்ளலாம்.
கடனை சரிபார்ப்பது எப்படி: https://www.ptptn.gov.my/semakanpinjaman என்ற அகப்பக்கத்தில் இதனைச் செய்யலாம்.
கடனை முழுமையாக அடைத்ததற்காக அத்தாட்சிக் கடிதத்தை
https://www.ptptn.gov.my/pengesahanbakipenyelesaianhutang என்ற அகப்பக்கம் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம்.
இதுபோக மற்ற மேல் விவரங்களைப் பெறுவதற்கு கீழ்க்கண்ட ஏதாவது ஒரு தொடர்பை கடன் பெற்றவர்கள் பயன்படுத்தலாம்:
* Pusat panggilan (careline) 03 2193 3000
* Live chat PTPTN - (https://www.ptptn.gov.my)
* Eksekutif Pemasaran (https://www.ptptn.gov.my/hubungi-ptptn)
* e-Aduan PTPTN (https://eaduan.ptptn.gov.my)
* Media Social (Perbadanan Tabung Pendidikan Tinggi Nasional) ஆகியன அடங்கும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்